டாணாக்காரன் பட இயக்குனர் உடன் இணையும் கார்த்தி

இயக்குனர் தமிழ் இதற்கு முன்பு காவல் துறையில் பணிபுரிந்துள்ளார். ஒரு சில காரணங்களால் காவலர் பணியை விட்டு விலகி பின்னர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இதையடுத்து அவர் அசுரன், ஜெய் பீம் படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் இவரது இயக்கத்தில் நேரடியாக ஓடிடியில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்ற திரைப்படம் 'டாணாக்காரன்'.

தற்போது இவரது அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது அதன்படி, கடந்த சில மாதங்களாக தமிழ் தான் இயக்கும் புதிய படத்திற்காக நடிகர் கார்த்தி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். இதனை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. கூடுதலாக, இந்த படம் ராமேஸ்வரத்தில் 60 காலகட்டத்தில் நடக்கும் கேங்க்ஸ்டர் படம் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.