`வயநாட்டில் மீண்டும் ராகுல்’ – கேரளாவில் சிட்டிங் எம்பி-க்களுக்கு மீண்டு வாய்ப்பளித்த காங்கிரஸ்!

காங்கிரஸ் கட்சி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள `இந்தியா’ கூட்டணியில் சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே சமயம் கேரள மாநிலத்தில் சி.பி.எம் தலைமையில் தனிக் கூட்டணியும்,  காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் தனி கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால் கேரளா மாநிலத்தை ஆளும் சி.பி.எம் மற்றும் காங்கிரஸ் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதுபோன்ற சி.பி.எம் – காங்கிரஸ் நேரடியாக களத்தில் மோதியது. அதில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் 19 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதற்கு ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டதே காரணம் என கருதப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால்

கடந்த முறை ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும்போதே சி.பி.எம் கட்சி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது. இந்த முறையும் ராகுல் கேரளாவில் போட்டியிட்டு இடதுசாரிகளின் வெற்றியை தடுக்கக்கூடாது, அவர்களின் எதிரியான பா.ஜ.க-வை எதிர்த்து வேறு மாநிலத்தில் களம் இறங்க வேண்டும் என சி.பி.எம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்த முறை கேரளத்தை ஆளும் சி.பி.எம் 15 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. ஐந்து தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. சி.பி.எம் கூட்டணி 20 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நேரடியாக 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள நான்கு தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமை வெளியிட்டு உள்ளது.

ராகுல் காந்தி

அதில் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வயநாடு தொகுதியில் எம்.பி-யாக இருக்கும் ராகுல் காந்தி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதி சிட்டி எம்.பி சசிதரூர் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் மாநில தலைவரான கே.சுதாகரன் கண்ணூர் தொகுதியிலும், காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

சசி தரூர்

வடகரை சிட்டிங் எம்.பி கே.முரளீதரன் திருச்சூர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மீண்டும் அவருக்கு வடகரையில் சீட் வழங்க ஏற்கனவே தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், நேற்று அவரது சகோதரி பத்மஜா வேணுகோபால் பா.ஜ.க-வில் இணைந்ததைத் தொடர்ந்தே கடைசி நேரத்தில் கே.முரளீதரன் திருச்சூருக்கு மாற்றப்பட்டுள்ளார். வடகரா தொகுதியில் ஷாபி பறம்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆற்றிங்கல் தொகுதியில் சிட்டிங் எம்.பி அடூர் பிரகாஷ், பத்தனம்திட்டா தொகுதியில் சிட்டிங் எம்.பி ஆன்றோ ஆண்டனி, மாவேலிக்கரை தொகுதியில் சிட்டிங் எம்.பி கொடிக்குந்நில் சுரேஷ், இடுக்கி தொகுதியில் சிட்டிங் எம்.பி டீன் குரியகோஸ், எர்ணாகுளம் தொகுதியில் சிட்டிங் எம்.பி ஹைபி ஈடன், சாலக்குடியில் சிட்டிங் எம்.பி பென்னி பெகன்னான், பாலக்காடு தொகுதியில் சிட்டிங் எம்.பி வி.கே.ஸ்ரீகண்டன், ஆலத்தூர் தொகுதியில் சிட்டிங் எம்.பி ரம்யா ஹரிதாஸ், கோழிக்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.பி எம்.கே.ராகவன், காசர்கோடு தொகுதியில் சிட்டிங் எம்.பி ராஜ்மோகன் உன்னித்தான் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.