வீட்டில் Wifi வாங்க திட்டமா… இலவச ஓடிடி… 1TB டேட்டா – Airtel AirFiber புதிய பிளான்!

Airtel Xstream AirFiber New Plans: நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் நாடு முழுவதும் பரந்துப்பட்ட அளவில் 5ஜி இணைய சேவையை அதன் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும். இருப்பினும், 5ஜிக்கான வரம்பற்ற சேவை நடப்பாண்டின் பாதிலேயே கைவிடப்பட்டு, 5ஜி சேவையை பயன்படுத்த தனி கட்டணம் வசூலிக்க இந்நிறுவனங்கள் முடிவெடுத்திருப்பதாக இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் கசிந்தன. 

இருப்பினும் இதுவரை அதுகுறித்த எந்த அறிவிப்பும், தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 5ஜி இணைய சேவையை இந்த நிறுவனங்கள் மொபைல் நெட்வார்க்கிற்கு மட்டுமின்றி  தனது வயர்லெஸ் பிராட்பேண்ட் சேவைகள் மூலமும் வழங்குகிறது. ஜியோ நிறுவனம் தனது JioFiber மூலம் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கும் நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதன் Xstream AirFiber மூலம் வழங்குகிறது. 

Airtel Xstream AirFiber

பாரதி ஏர்டெல் நிறுவனம் அதன் Airtel Xstream AirFiber சேவையில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், முந்தைய வாடிக்கையாளர்களை தக்கவைக்கவும் ஏர்டெல் இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்த இரண்டு பிளான்களும் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வருகிறது. இத்துடன், அதிவேக டேட்டா, நேரலை சேனல்களுக்கான சந்தா அணுகல் மற்றும் இலவச ஓடிடி அணுகல் ஆகியவையும் அடக்கம்.

புதிய இரண்டு பிளான்

ஏர்டெல் அறிமுகப்படுத்திய இந்த இரண்டு திட்டங்களின் 699 ரூபாய் மற்றும் 999 ரூபாய் ஆகும். இதில் 1TB டேட்டா வழங்கப்படுகிறது. 699 ரூபாய் பிளானில் 40Mbps இணைய வேகத்திலும், 999 ரூபாய் பிளானில் 100Mbps இணைய வேகத்திலும் சேவை வழங்கப்படுகிறது. கொடுக்கப்பட்ட டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், இணைய வேகமும் குறைந்துவிடும். இந்த இரண்டு பிளானிலும் 350க்கும் மேற்பட்ட நேரலை சேனல்களுக்கான அணுகளும், Airtel Xstream Play மற்றும் டிஸ்னி பிளஸ் ஹார்ட்ஸ்டோர் ஓடிடியும் இலவசமாக கிடைக்கும். 4K ஆண்ட்ராய்ட் பாக்ஸ் இத்துடன் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்ட இரண்டு பிளான் மட்டுமின்றி Airtel Xstream AirFiber சேவையில் 799 ரூபாய் பிளானும் உள்ளது. இதில் 100Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படும் 1TB டேட்டா வழங்கப்படும். டேட்டா லிமிட் முடிந்த உடன் இணைய வேகம் குறைந்துவிடும். இதிலும் நேரலை சேனல்கள், ஓடிடி ஆப்ஷன்கள் உள்ளது. இதனை 6 மாதத்திற்கோ அல்லது 1 வருடத்திற்கோ நீங்கள் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளலாம்.  

Airtel Xstream AirFiber சேவையை புதியதாக பெற வேண்டும் என்றால் ஆறு மாதத்திற்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ ரீசார் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், நீங்கள் நொய்டா மற்றும் காசியபாத் பகுதியினர் என்றால் உங்களுக்கு இலவச இன்ஸ்டாலேஷனும் செய்துதகொடுக்கப்படுகிறது, இது விரைவில் நாடு முழு அமலுக்கு வரலாம். அதிகாரப்பூர்வ Airtel இணையதளம் மூலம் இதனை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.