CSK Squad: ஐபிஎல் 2024க்கு முன்னதாக சென்னை அணியில் இருந்து 8 வீரர்கள் நீக்கம்!

Chennai Super Kings: கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் 2023 போட்டியில் MS தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது பட்டத்தை வென்றது.  அதே பார்முடன் மீண்டும் 2024ல் பட்டத்தை வெல்ல தயாராகி வருகிறது சென்னை.  ஐபிஎல் 2024 க்கான மினி ஏலத்தில் சில தரமான வீரர்களை தங்கள் அணியில் ஒப்பந்தம்  செய்து இன்னும் பலம் வாய்ந்த அணியாக மாறியுள்ளது சென்னை.  ஐபிஎல் 2024 ஏலம் கடந்த டிசம்பர் 19, 2023 அன்று துபாயில் நடந்தது. கடந்த 16 சீசன்களாக விளையாடி வரும் தோனி, இந்த ஆண்டு 17வது சீசனில் ஓய்வை அறிவிக்க உள்ளார் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் தோனிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல அணி வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர்.  ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறைக்கு மேல் எந்த அணியும் அடுத்தடுத்து கோப்பையை வென்றதில்லை. கடைசியாக 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் CSK தான் முதன்முதலில் இந்த சாதனையை செய்து இருந்தது.  

ஐபிஎல் 2024 சீசனில் சென்னை அணி தனது முதல் போட்டியை மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடுகிறது.  அதன் பின்பு இரண்டாவது போட்டியில் மார்ச் 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள உள்ளது.  இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  ஐபிஎல் 2023ல் சென்னை அணியில் இருந்த எட்டு வீரர்கள் இந்த ஆண்டு அவர்களுக்காக விளையாட மாட்டார்கள். அதில் முதல் பெயர் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். ஐபிஎல் 2023 ஏலத்தில் 16.25 கோடிக்கு சிஎஸ்கே அவரை ஒப்பந்தம் செய்தது, ஆனால் காயம் காரணமாக ஸ்டோக்ஸ் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 

மேலும், தென்னாப்பிரிக்காவின் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் சிசண்டா மாகலா, நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் மற்றும் கே பகத் வர்மா, சுப்ரான்ஷு சேனாபதி மற்றும் ஆகாஷ் சிங் ஆகிய இந்திய வீரர்களையும் சிஎஸ்கே ஏலத்திற்கு முன்பு விடுவித்தது. மேலும் கடந்த சீசனுடன் அம்பதி ராயுடு ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இந்த ஆண்டும் அவர் விளையாட மாட்டார். சென்னை அணியில் புதிதாக நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இணைந்துள்ளனர்.  மேலும் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சென்னை அணியில் இணைந்துள்ளார்.  இவர்களை தவிர இந்திய வீரர் சமீர் ரிஸ்வி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி ஆகியோர் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர்.  மேலும் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி காயம் காரணமாக ஐபிஎல் 2023ல் இருந்து விலகிய நிலையில் இந்த முறை விளையாட உள்ளார்.

ஐபிஎல் 2024க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷ்ஷாந்த் சிங், , மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி

காயம்: டெவோன் கான்வே, மதீஷ பத்திரன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.