விண்வெளி ஆராய்ச்சி மாணவராகத் தயாரா? இஸ்ரோ இன்டர்ன்ஷிப் அறிவிப்பு! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) மாணவர்களுக்காக நிறுவனப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) மற்றும் மாணவர் பயிற்சி திட்டங்களை வழங்குகிறது. இதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சி துறைகளில் நேரடி அனுபவம் பெற இது ஓர் அற்புதமான வாய்ப்பாகும்.

யார் யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?

விண்வெளி

இன்டர்ன்ஷிப்:

* அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு (UG), முதுநிலை பட்டப்படிப்பு (PG), மற்றும் ஆய்வியல் மாணவர்களாக (PhD) இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய குடிமகனாக இருந்து, இந்தியா அல்லது வெளிநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு படிப்பு முடிந்து ஆறு மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம்.

* நிறுவனப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) பணிகளின் கால அளவு அதிகபட்சமாக 45 நாள்கள் மட்டுமே இருக்கும்.

* மாணவர்கள் தங்கள் கல்வியில் குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். CGPA அடிப்படையில 10 CGPAகளில் 6.32 CGPA பெற்றிருக்க வேண்டும்.

மாணவர் திட்டப் பயிற்சி:

இந்தத் திட்டம் பல்வேறு இன்ஜினியரிங் மற்றும் அறிவியல் துறை மாணவர்களுக்காக அவர்களது கல்வியின் வெவ்வேறு காலகட்டங்களில் ஆஃப்லைன் முறையில் மட்டுமே வழங்கப்படுகிறது.

மாணவர் திட்டப் பயிற்சி

இன்ஜினியரிங் (BE/BTech): 6வது செமஸ்டர் முடித்திருக்க வேண்டும். பயிற்சி நாள்கள் குறைந்தது 45 நாள்கள் நடைபெறும்.

M.E.,/MTech: 1வது செமஸ்டர் முடித்திருக்க வேண்டும் (பயிற்சி குறைந்தது 120 நாள்கள் நடைபெறும்.)

BSc/Diploma: இறுதி ஆண்டு மாணவர்கள் மட்டுமே. பயிற்சி குறைந்தது 45 நாள்கள் நடைபெறும்.

MSc: 1வது செமஸ்டர் முடித்திருக்க வேண்டும். பயிற்சி குறைந்தது 120 நாள்கள் நடைபெறும்.

PhD: ஆராய்ச்சி மாணவர்கள் கோர்ஸ் வொர்க்கினை முழுமையாக முடித்திருக்க வேண்டும். இவர்களது பயிற்சி நாள்கள் குறைந்தது 30 மாதங்கள் நடைபெறும்.

குறைந்தபட்ச தகுதி: அனைத்து விண்ணப்பதாரர்களும் குறைந்தது 60% மதிப்பெண்கள் அல்லது 6.32 CGPA பெற்றிருக்க வேண்டும்.

* இன்டர்ன்ஷிப் மற்றும் திட்டப் பணிக்கான தேர்வு முறை, உங்கள் படிப்பு எந்த அளவுக்கு ISRO பணிகளுடன் ஒத்துப்போகிறது என்பதைப் பொறுத்தே அமையும்.

* விண்ணப்பங்கள் தனித்தனி ISRO மையங்கள்/பிரிவுகளால் மதிப்பீடு செய்யப்படும்.

* இன்டர்ன்களுக்கும், திட்டப் பயிற்சி மாணவர்களுக்கும் ஊதியம், சம்பளம் அல்லது நிதி உதவி எதுவும் வழங்கப்படாது.

* தங்கும் வசதி உத்தரவாதம் இல்லை. ஆனால் சில மையங்களில் கட்டண அடிப்படையில் விடுதி/விருந்தினர் மாளிகை வசதிகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இன்டர்ன்கள்/பயிற்சி மாணவர்களுக்கு கேன்டீன் வசதிகள் கிடைக்கும்.

இஸ்ரோ

* திட்டம்/இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடித்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர், பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.

* ISRO ஆய்வகங்கள்/நிறுவனங்களுக்குள் வகை செய்யப்படாத பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* திட்டப் பயிற்சி மாணவர்கள்/இன்டர்ன்களுக்கு DoS/ISRO ஆய்வகங்களின் வகைப்படுத்தப்படாத பகுதிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* DoS/ISRO மையங்கள்/பிரிவுகளில் ஆற்றிய பணிகளை அடிப்படையாகக் கொண்டு வெளிப்புற முகவர்கள் மூலம் ஆய்வுக் கட்டுரைகள்/அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பு, திட்டப் பயிற்சி மாணவர்கள்/இன்டர்ன்கள் தங்கள் மையங்கள்/பிரிவுகளிடம் அனுமதி பெற வேண்டும்.

இது தொடர்பான பிற வழிகாட்டுதல்களுக்கு இஸ்ரோ இணையதளத்தின் இந்தப் பக்கத்தைப் பின்தொடரலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.