மோடி ரோடு ஷோ: இஸ்லாமியர் என்பதால் பாஜக வேட்பாளருக்கு அனுமதி மறுப்பா?! – சர்ச்சையும் விளக்கமும்!

கேரள மாநிலம் பாலக்காட்டில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டார். மோடி ரோடு ஷோ சென்ற திறந்த வாகனத்தில் மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், பாலக்காடு மற்றும் பொன்னாணி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர்களும் இருந்தனர். அதேசமயம் மோடியின் வாகனத்துக்கு அருகே சென்ற மலப்புறம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் அப்துல் சலாமை வாகனத்தில் ஏற எஸ்.பி.ஜி பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் சர்சையானது. அப்துல் சலாம் இஸ்லாமியர் என்பதால் அவருக்கு மோடி தன் பக்கத்தில் இடம் கொடுக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்தது.

மலப்புறம் பா.ஜ.க வேட்பாளர் அப்துல் சலாம்

இதுகுறித்து அப்துல் சலாம் கூறுகையில், “பாலக்காட்டில் மோடியை பார்ப்பதற்காகவும், அவரை மலப்புறம் தொகுதியில் பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவும் சென்றிருந்தேன். ரோடு ஷோ-வில் கலந்துகொள்ள வேண்டும் என என்னை யாரும் அழைக்கவில்லை. என்னை ரோடு ஷோ-வில் அனுமதிக்காமல் தடுத்ததாக கூறப்படுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

பிரதமர் மோடியை தவிர்த்து மூன்று பேருக்கு மட்டுமே அந்த வாகனத்தில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. நான் மோடி சென்ற வாகனத்தின் அருகில் நின்றதை பார்த்ததும் சிலர் வாகனத்தில் ஏறுவதற்காக நிற்பதாக நினைத்திருக்கலாம். ஒருவேளை அன்பின் காரணமாக மோடி என்னை வாகனத்தில், ஏறும்படி அழைத்திருந்தாலும் அதில் நான் ஏறுவதற்கான இடம் இல்லை. மோடி வந்தால் மலப்புறத்தில் மாற்றம் ஏற்படும் என்பதால் அவரை எனது தொகுதிக்கு அழைப்பதற்காக நான் சென்றிருந்தேன்.

பாலக்காட்டில் மோடி ரோடு ஷோ நிகழ்ச்சி

வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடத்தக்கூடாது என்று சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால் வெள்ளிக்கிழமை என்னவெல்லாமோ நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அன்று ஏன் வாக்குப்பதிவு நடத்தக்கூடாது. ஒரு மதத்தை சார்ந்தவர்கள் மட்டும் அப்படி கோரிக்கை வைப்பது சரியானது அல்ல. அப்படி அவர்கள் கோரிக்கை வைப்பது அந்த மதத்தை தனிமைப்படுத்துவது போன்று ஆகிவிடும். அனைத்து மத மதத்தினரும் இப்படி சொல்ல தொடங்கினால் என்ன நடக்கும்? மதிய வேளையில் பள்ளிவாசலுக்கு செல்லும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் வாக்களிக்கலாம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.