ATM கார்டு இல்லாமலேயே ஏடிஎம்மில் பணம் எடுப்பது எப்படி? டெக் டிப்ஸ்

மக்கள் வங்கிக்கு சென்று பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருந்து பணம் எடுப்பது என்பது ஏடிஎம் கார்டு வந்த பிறகு தான் முடிவுக்கு வந்தது. அதாவது வங்கி பணப்பரிவர்த்தனை மக்களை சென்றவடைவது என்பது ஏடிஎம் மெஷன்கள் மூலம் விரிவடைந்தது. இதுவே ஒரு காலத்தில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த காலமும் மலையேறிவிட்டது. பணத்தை கண்ணில் காட்டாமலேயே பண பரிவர்த்தனை செய்து கொள்ளும் அளவுக்கு முன்னேறிவிட்டோம். யுபிஐ வந்த பிறகு தான் இது சாத்தியமாகியிருக்கிறது. எல்லா பில் மற்றும் பொருட்கள் வாங்கும்போதும் போனிலேயே செலுத்தி பழகிவிட்டோம். 

அதனால் ஏடிஎம் செல்லும் பழக்கமே மக்களிடம் வெகுவாக குறைந்துவிட்ட நிலையில், அரிதினும் அரிதாக மட்டுமே, அதாவது பெரிய தொகை வேண்டும் எனும்போது மட்டும் செல்கிறன்றனர். அதற்கும் இப்போது ஏடிஎம் கார்டு எடுத்துக் கொண்டு செல்ல தேவையில்லை. உங்கள் கையில் மொபைல் மட்டும் இருந்தால் போதும். போனை மட்டும் வைத்து பணம் எடுக்க முடியும். ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் இல்லாமல் வெறும் அக்கவுண்ட் எண் வைத்து மட்டும் பணம் எடுக்கும் ஆப்சன் இருந்தாலும் இப்போது upi கணக்குகளை வைத்தும் ஏடிஎமில் இருந்து பணம் எடுக்கலாம். Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற UPI-இயக்கப்பட்ட பயன்பாடுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

UPI வைத்து ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான வழிமுறைகள்

* ஏதேனும் ஏடிஎம் இயந்திரத்தை அணுகி, “Cash Withdrawal” ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்.
* ஏடிஎம் திரையில் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* ஏடிஎம் திரையில் ஒரு QR குறியீடு தோன்றும்.
* உங்கள் சாதனத்தில் ஏதேனும் UPI அடிப்படையிலான கட்டண பயன்பாட்டைத் திறந்து, QR குறியீடு ஸ்கேனர் அம்சத்தைச் செயல்படுத்தவும்.
* காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தற்போதைய வரம்பு ரூ. 5,000க்குள், விரும்பிய தொகையைக் குறிப்பிட வேண்டும்.
* உங்கள் UPI பின்னை உள்ளிட்டு ‘pay’ பட்டனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்.
* பின்னர் நீங்கள் கேட்ட தொகையை ஏடிஎம் மெஷினில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.

அனைத்து ஏடிஎம்களிலும் UPI அடிப்படையிலான பணம் எடுக்க முடியுமா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கும். இப்போதைக்கு அனைத்து ஏடிஎம்களும் UPI அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி இன்னும் கொண்டுவரப்படவில்லை. எந்த வங்கி அதற்கு சொந்தமான ATM செட்டிங்ஸில் UPI ஆப்சனை ஒருங்கிணைத்துள்ளதோ அதில் இருந்து மட்டுமே யுபிஐ மூலம் பணம் எடுக்க முடியும். இந்த பரிவர்த்தனைக்கு இதுவரை எந்த வங்கியும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. மேலும், யுபிஐ பரிவர்த்தனை மூலம் ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க உங்கள் மொபைலில் இணைய வசதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.