உலகின் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து; தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக முதலிடம்: இலங்கை 128 ஆவது இடத்தில்….

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் தனி நபர் வாழ்க்கைத் திருப்தி,  மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்காக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்தும் 7 ஆவது ஆண்டாக பின்லாந்து முதலிடத்தை தனதாக்கிக் கொண்டுள்ளது. .

அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.

இப்பட்டியலுக்காகக் கருத்திற்கொள்ளப்பட்ட  143 நாடுகளில் இலங்கை 128 ஆவது இடத்தில் உள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்திலும் உள்ளது.  

10 ஆண்டுகளுக்கும் அதிகமாக  வெளியிடப்பட்டு வரும் இப்பட்டியலில் முதல் தடவையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் முறையே 23, 24 ஆவது இடத்தில் உள்ளன.

கனடா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா, குவைத் ஆகிய நாடுகள் முதல் 20 இடங்களிலும்,  இந்தியா 126 ஆவது இடத்திலும் சீனா 60 ஆவது இடத்திலும் நேபாளம் 93 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 108 ஆவது இடத்திலும் மியன்மார் 118 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் 129 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.

உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் இளைய தலைமுறையினர் பழைய தலைமுறையினரை விட மகிழ்ச்சியாக இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.