வெற்றியை நழுவ விட்ட லக்னோ… அஸ்வின் எடுத்த அந்த விக்கெட் – RR வெற்றிக்கு இதுதான் காரணம்!

RR vs LSG Match Highlights: இந்தியன் பிரீமீயர் லீக் தொடர் (IPL 2024) நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சந்தித்தது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82, ரியான் பராக் 43, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24 ரன்களை சேர்த்தனர். லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் – ஹக் 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் 1 விக்கெட்டையும், மொஷின் கான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

ராகுல் – பூரன் ஜோடி

194 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன. டி காக், தேவதத் படிக்கல், ஆயுஷ் பதோனி ஆகியோர் தங்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தவறவிட்டனர். இது லக்னோ அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. கேஎல் ராகுல் நிதானமாக விளையாடி ஒரு பக்கம் நிலையாய் நிற்க மறுபக்கம், விக்கெட்டுகள் சரிந்தன. அடுத்து வந்த தீபக் ஹூடாவும் ராகுலைப் போல் நிதானம் காட்டினார். இருப்பினும் அவரும் சற்று நேரமே தாக்குபிடித்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆறாவது பேட்டராக களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடவே லக்னோ அணியின் ரன்ரேட் ஏறத்தொடங்கியது.

நான்ட்ரே பர்கர், போல்ட், அஸ்வின், சஹால், ஆவேஷ் என அனைத்து பந்துவீச்சாளர்களையும் பூரன் சமாளித்த டெத் ஓவர்களில் சற்றே சுணக்கம் காட்டினார். கடைசி நான்கு ஓவர்களுக்கு 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17ஆவது ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே கேஎல் ராகுல் ஆட்டமிழந்தார். ராகுல் 44 பந்துகளுக்கு 58 ரன்களை சேர்த்தார். அந்த ஓவரில் மொத்தம் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.

அஸ்வின் வீசிய அந்த ஓவர்

18ஆவது ஓவரை அஸ்வின் வீச வந்தார். ஸ்டோய்னிஸ் மற்றும் பூரன் களத்தில் இருந்த நிலையில், அஸ்வின் சிறப்பாக வீசி ஸ்டாய்னிஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த ஓவரில் 4 ரன்களை மட்டுமே அஸ்வின் கொடுத்தார். முக்கிய விக்கெட்டையும் எடுத்தார். இதுவே ராஜஸ்தான் வெற்றியை உறுதிப்படுத்தியது. 

சந்தீப் வீசிய 19ஆவது ஓவரில் 19 ரன்கள், 20 ஓவரில் 6 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போல்ட் 2 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா, சஹால் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 

Match 4. Rajasthan Royals Won by 20 Run(s) https://t.co/MBxM7IwmBG #TATAIPL #IPL2024 #RRvLSG

— IndianPremierLeague (@IPL) March 24, 2024

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.