What to watch on Theatre & OTT: ஆடுஜீவிதம், கா, Hot Spot – இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

ஆடுஜீவிதம் (மலையாளம்/தமிழ்/இந்தி)

ஆடுஜீவிதம்

மலையாளத் திரைப்பட இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆடுஜீவிதம்’ (தி கோட் லைஃப்). ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்துள்ளார். வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் மார்ச் 28ம் தேதி (நேற்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கா – The Forest (தமிழ்)

கா – The Forest

நாஞ்சில் நாகராஜன் இயக்கத்தில் ஆண்ட்ரியா, சலீம், மாரிமுத்து உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கா’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Boomer Uncle (தமிழ்)

Boomer Uncle

சுதேஷ் எம்.எஸ் இயக்கத்தில் யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Boomer Uncle’. காமெடி திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Boys (தமிழ்)

The Boys

‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை எடுத்த சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘The Boys’. ஷா ரா, கே.பி.வினோத், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Hot Spot (தமிழ்)

Hot Spot

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், கௌரி ஜி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Hot Spot’. காதல் மற்றும் உறவுச் சிக்கல்களைப் பற்றி பேசும் இத்திரைப்படம் மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இடி மின்னல் காதல் (தமிழ்)

இடி மின்னல் காதல்

பாலாஜி மாதவன் இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், பவ்யா திரிகா, யாஸ்மின் பொன்னப்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இடி மின்னல் காதல்’. காதல் மற்றும் திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வெப்பம் குளிர் மழை (தமிழ்)

வெப்பம் குளிர் மழை

பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் திரவ் ஜி, இஸ்மத் பானு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெப்பம் குளிர் மழை’. கிராமத்தில் வாழும் கணவன் – மனைவியின் அழகான காதலும், அதில் நடக்கும் சிறு சிறு சண்டைகளும்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நேற்று இந்த நேரம் (தமிழ்)

நேற்று இந்த நேரம்

சாய் ரோஷன் கே.ஆர் இயக்கத்தில் ஷாரிக் ஹாசன், ஹரிதா லக்ஷ்மன், மோனிகா ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நேற்று இந்த நேரம்’. திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Tillu Square (தெலுங்கு)

Tillu Square

மல்லிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகத்த, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குத் திரைப்படம் ‘Tillu Square’. ஆக்‌ஷன், காமெடி, காதல் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Yuva (கன்னடம்)

Yuva

சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கத்தில் யுவ ராஜ்குமார், சப்தமி கவுடா, அச்யுத் குமார், சுதாராணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Yuva’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Crew (இந்தி)

Crew

ராஜேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் தபு, கரீனா கபூர் கான், கிருத்தி சனோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Crew’. காமெடி, ஆக்சன், திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Godzilla x Kong: The New Empire (ஆங்கிலம்)

Godzilla x Kong: The New Empire

ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் ரெபேக்கா ஹால், பிரையன் டைரி ஹென்றி, டான் ஸ்டீவன்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Godzilla x Kong: The New Empire’. ஆக்‌ஷன், அட்வன்ச்சர், மான்ஸ்டர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Knox Goes Away (ஆங்கிலம்)

Knox Goes Away

மைக்கேல் கீட்டன் இயக்கத்தில் மைக்கேல் கீட்டன், அல் பசினோ, ஜேம்ஸ் மார்ஸ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Knox Goes Away’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது மார்ச் 29ம் தேதி (இன்று) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்

Patna Shukla (இந்தி) – Disney + Hotstar

Patna Shukla

விவேக் புடகோடி, ராஜேந்திர திவாரி இயக்கத்தில் ரவீனா டாண்டன், சதீஷ் கௌஷிக், அனுஷ்கா கௌசிக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Patna Shukla’. நீதிக்காகப் போராடும் பெண் வழக்குரைஞரின் கதை இது. இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The Beautiful Game (ஆங்கிலம்) – Netflix

The Beautiful Game

தியா ஷராக் இயக்கத்தில் கிறிஸ்டினா ரோட்லோ, பில் நைகி, வலேரியா கோலினோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Beautiful Game’. கால்பந்து போட்டியை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Heart of the Hunter (ஆங்கிலம்) – Netflix

Heart of the Hunter

மாண்ட்லா துபே இயக்கத்தில் போன்கோ கோசா, கோனி பெர்குசன், மசாசா எம்பாங்கேனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Heart of the Hunter’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வெப்சீரிஸ்கள்

Inspector Rishi (தமிழ்) – Amazon Prime Video

Inspector Rishi

ஜே.எஸ். நந்தினி இயக்கத்தில் நவீன் சந்திரா, ஸ்ரீகிருஷ்ண தயாள், கண்ணா ரவி, சுனைனா, மாலினி ஜீவரத்னம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் வெப்சீரிஸ் ‘Inspector Rishi’. ஹாரர், திரில்லரான இந்த வெப்சீரிஸ் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Renegade Nell (ஆங்கிலம்) – Disney + Hotstar

Renegade Nell

ஜோலி ரிச்சர்ட்சன், லூயிசா ஹார்லேண்ட், ஃபிராங்க் டில்லேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Renegade Nell’. ஆக்‌ஷன், அட்வன்சர், மாயாஜாலங்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

Lover (தமிழ்/தெலுங்கு) – Disney + Hotstar

Lover

பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Lover’. காதலில் வரும் பிரச்னைகளையும், உறவுச் சிக்கல்களையும் பற்றிப் பேசும் இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

ஜோஷ்வா ‘இமை போல் காக்க’ (தமிழ்) – Amazon Prime Video

ஜோஷ்வா ‘இமை போல் காக்க’

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வருண், கிருஷ்ணா, ராஹி, திவ்யதர்ஷினி (DD) உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜோஷ்வா – இமை போல் காக்க’. கொலை கும்பலிடம் சிக்கித் தவிக்கும் கதாநாயகியைக் காப்பாற்ற ஆக்‌ஷனில் களமிறங்குகிறார் கதாநாயகன் ஜோஷ்வா. இந்தக் கொலை கும்பலின் பின்னணி என்ன, இந்த ஆக்‌ஷன் திரில்லர் நிறைந்த தோட்டாக்களின் விளையாட்டில் என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Birthmark (தமிழ்) – Aha

Birthmark

விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் மிர்னா, ஷபீர் கல்லரக்கல், தீப்தி ஓரின்டேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Birthmark’. மன ரீதியாக பாதிப்பிற்குள்ளான கணவனுக்கும், நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் உளவியல் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Double Engine (தெலுங்கு) – Aha

Double Engine

ரோஹித் பெனுமட்சா இயக்கத்தில் முனி மியாதாரி, அஜித் மோகன், ரோஹித் நர்சிம்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Double Engine’. ஹைதராபாத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் நண்பர்களுடன் தன் பிறந்த நாளைக் கொண்டாட தன் கிராமத்திற்குச் செல்கிறான். அங்கு என்ன நடந்தது, அது அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Sundaram Master (தெலுங்கு) – Aha

Sundaram Master

கல்யாண் சந்தோஷ் இயக்கத்தில் ஹர்ஷா செமுடு, திவ்யா ஸ்ரீபாதா, சைது பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Sundaram Master’. அரசுப் பள்ளி ஆசிரியராக இருக்கும் சுந்தரம் என்பவரைப் பற்றிய நெகிழ்ச்சியான கதைதான் இந்தப் படம். இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Next Goal Wins (ஆங்கிலம்) – Disney + Hotstar

Next Goal Wins

டைகா வெயிட்டிடி இயக்கத்தில் மைக்கேல் ஃபாஸ்பெண்டர், ஆஸ்கார் கைட்லி, கைமனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Next Goal Wins’. ‘FIFA’ கால்பந்து போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று போராடும் அமெரிக்க சமோவா கால்பந்து அணியைப் பற்றியதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Ferrari (ஆங்கிலம்) – Amazon Prime Video

Ferrari

மைக்கேல் மான் இயக்கத்தில் ஆடம் டிரைவர், ஷைலீன் உட்லி, கியூசெப் ஃபெஸ்டினீஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Ferrari’. 1957ம் ஆண்டு Ferrari நிறுவனம் இத்தாலியில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி வாகை சூடி உலகின் பெரும் கார் தயாரிப்பு நிறுவனமாக முத்திரைப் பதித்த கதை இது. இத்திரைப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.