நீலகிரி: ஆ.ராசா வாகனத்தை முறையாக சோதனை செய்யாத பறக்கும் படை அலுவலர் சஸ்பெண்டு! – என்ன நடந்தது?

நீலகிரி நாடாளுமன்ற தனி தொகுதியில் தி.மு.க சார்பில் தொடர்ந்து 4 – வது முறையாக போட்டியிடுகிறார் ஆ.ராசா. அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் எம்.பி யாகும் முனைப்பில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 25 – ம் தேதி கோத்தகிரியில் தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரில் பயணித்திருக்கிறார் ஆ. ராசா.‌

ராசா வாகன சோதனை

கோத்தகிரி அருகில் சென்று கொண்டிருந்த ராசா மற்றும் கட்சியினரின் கார்களை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர், சோதனை மேற்கொண்டுள்ளனர். பணம், பரிசு பொருட்கள் எதுவும் இல்லையென அனுப்பி வைத்துள்ளனர். ஆ.‌‌ ராசா வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும், சம்மந்தப்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் முறையாக ஈடுபடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அருணா விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பறக்கும் படை அலுவலர் கீதாவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அறிவித்துள்ள மாவட்ட நிர்வாகம், “25-03-2024 அன்று FST 3B பறக்கும் படை குழுவில் திருமதி. கீதா என்பவர் (குழந்தைகள் நல திட்ட அலுவலர் கோத்தகிரி) தி.மு.க. வேட்பாளர் ராசா அவர்களின் வாகன சோதனை முறையாக மேற்கொள்ளவில்லை என்று வெளிவந்த செய்தியின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையிலான குழு விசாரணை மேற்கொள்ளப்பட்டது . இதில் முறையாக வாகன பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ராசா வாகன சோதனை

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 134 -ன் கீழ் (RP Act 1951 section 134) கீதா என்பவரை 30.03.2024 அன்று முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் உத்தரவிடப்படுகிறது” என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆ. ராசா வாகனத்தை முறையான சோதனை மேற்கொள்ளவில்லை என தேர்தல் பறக்கும் படை அலுவலரை பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டிருக்கும் விவகாரம் விவாதத்தைத் கிளப்பியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.