நகையை அடமானம் வைத்த சிம்பு பட இயக்குனர்: அதையும் ஆட்டைய போட்ட உதவியாளர்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

தேசிங்கு பெரியசாமி, சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரிடம் முகமது இக்பால் என்பவர் 2018ம் ஆண்டு முதல் உதவி இயக்குனராக பணி புரிந்து வருகிறார். தேசிங்கு பெரியசாமியின் அனைத்து விதமான வரவு, செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளையும் அவர் கவனித்து வந்தாக கூறப்படுகிறது.

கடந்த மாதம் தேசிங்கு பெரியசாமி, தனது தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறினார். நகைகளுடன் சென்ற முகமது இக்பால் அதை அடமானம் வைத்து வாங்கிய 3 லட்சத்தை தேசிங்கு பெரியசாமியிடம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கேட்டபோது தேசிங்கு பெரியசாமி மற்றும் அவரது மனைவியை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேசிங்கு பெரியசாமி, இதுபற்றி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான உதவி இயக்குனர் முகமது இக்பாலை தேடி வருகின்றனர்.

தேசிங்கு பெரியசாமியிடம் உதவியாளர் 3 லட்சம் மோசடி செய்ததை விட ஒரு வெற்றிப் படத்தை இயக்கியவர், அடுத்து ஒரு பெரிய படத்தை இயக்குகிறவருக்கு நகையை அடமானம் வைக்கிற அளவிற்கு என்ன பிரச்சினை என்று சினிமா ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.