மூன்று மடங்கு டேட்டா அதிகம்… இந்த ரீசார்ஜ் பிளானில் பெரிய மாற்றம் – குஷியில் பயனர்கள்!

Vodafone Idea Rs 49 Recharge Plan Extra Benefits: டேட்டா என்பது அனைவராலும் தற்போதைய சூழலில் அதிக கவனம் செலுத்தப்படும் விஷயங்களில் ஒன்று எனலாம். தினமும் தனது டேட்டா லிமிட்டை தாண்டிவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரும் அதிக கவனமாக இருப்பார்கள். அதாவது, தன்னிடம் இருக்கும் பணத்தை எப்படி ஒருவர் பார்த்து பார்த்து செலவழிப்பாரோ, அதேபோல் இந்த காலகட்டத்தில் டேட்டாவை ஒருவர் பார்த்து பார்த்து பயன்படுத்த வேண்டியதாக உள்ளது எனலாம். 

வீட்டில் வைஃபை இருந்தால் ஒருவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது. அலுவலக வைஃபை பணிக்கு மட்டுமே பெரும்பாலான இடங்களில் அனுமதிக்கப்படுகிறது. எனவே, அதை தனிப்பட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவது கடினம். அதனால், ஒவ்வொருவரும் தங்களின் தேவையை பொறுத்து பிளான்களை தேர்வு செய்துகொள்கின்றனர். 

வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி… 

சிலருக்கு 2ஜிபி தேவைப்படும், சிலருக்கு 1ஜிபியே போதுமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி சேவை இருப்பதால் அவர்களுக்கான டேட்டா தேவையும் குறைந்துள்ளது எனலாம். இருப்பினும் விரைவில் 5ஜி சேவைக்கு தனியே கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு அடுத்து இந்தியாவின் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா நிறுவனமும் கடும் போட்டிகளுக்கு மத்தியில் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு ஆஃப்பர்களையும் தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில், தற்போது அந்த நிறுவனம் ஏற்கெனவே உள்ள தனது ரீசார்ஜ் திட்டத்தில் கூடுதல் பலன்களை அறிவித்துள்ளது. விலை மலிவான அந்த ரீசார்ஜ் திட்டத்தில் தற்போது பலன்கள் அதிகமாகியுள்ளது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வோடபோன் ஐடியாவின் ரூ.49 பிளான்…

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் 49 ரூபாய்க்கும் பிரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வைத்துள்ளன. குறிப்பாக, இந்த பிளான்கள் ஐபிஎல் சீசன் தொடங்கியதை அடுத்து அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த வகையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் அறிவிப்பை தொடர்ந்து தனது 49 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 

இந்த 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி 1 நாளாகும். அதாவது, நீங்கள் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் அன்று இரவு 11.59 மணிக்கு இந்த பிளானில் வேலிடிட்டி நிறைவடைந்துவிடும். எனவே, நீங்கள் பிளானை ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால் காலையிலேயே செய்துவிட வேண்டும். இதனால் நாள் முழுவதும் இந்த பிளானிலன் பலன்களை அனுபவித்து கொள்ளலாம். நீங்கள் எப்போது ரீசார்ஜ் செய்தாலும் அன்று இரவு 11.59 மணிக்கு வேலிடிட்டி முடிந்துவிடும், 24 மணிநேரம் என்று நினைக்க வேண்டாம். 

இந்த பிளானில் மொத்தம் 20ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கும். முன்னர் வெறும் 6ஜபி டேட்டா மட்டுமே இந்த பிளானில் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது ஐபிஎல் சீசனை முன்னிட்டு முன்பைவிட மூன்று மடங்கு டேட்டாவை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பிளான் Add-on ரீசார்ஜ்தான். அதாவது, இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் அடிப்படை பிளான் இருக்க வேண்டும். இதில் டேட்டாவை தவிர காலிங் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகள் இருக்காது என்பதை நினைவில் கொள்ளவும். வெறும் 49 ரூபாயில் 20ஜிபி டேட்டாவை நீங்கள் பெறலாம். மேலும், வோடபோன் ஐடியா 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. 5ஜி சேவையை இன்னும் வோடபோன் ஐடியா அறிமுகப்படுத்தவில்லை.

ரூ.169 ரீசார்ஜ் பிளான்

சமீபத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் 169 ரூபாய் பிரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை கொண்டு வந்தது. இந்த பிளானின் வேலிடிட்டி 30 நாள்கள் ஆகும். இதில் எஸ்எம்ஸ், டேட்டா மற்றும் ஓடிடி பலன்கள் கிடைக்கும். 30 நாள்களுக்கு இந்த பிளானில் மொத்தம் 8ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே 90 நாள்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் இலவச அணுகல் கிடைக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.