டிரைவிங் லைசென்ஸ் தொலைந்துவிட்டதா? ஆன்லைனில் உடனடியாக பெறுவது எப்படி?

வாகனம் ஓட்ட, உங்களிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) இருக்க வேண்டும். இருப்பினும், உங்கள் டிரைவிங் லைசென்ஸை மறந்துவிடுவது அல்லது தொலைத்துவிடுவது எதிர்பாராத நேரங்களில் நடக்கும். இந்த சூழல் உங்களுக்கும் மிகவும் தர்மசங்கடமான நிலையாக இருக்கும். இருப்பினும் இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் உடனடியாக அதில் இருந்து நீங்கள் மீள முடியும். டிரைவிங் லைசென்ஸை நீங்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று டிஜிலாக்கர், இன்னொன்று போக்குவரத்துறை இணையதளம். இந்த இரண்டில் இருந்து உங்கள் டிரைவிங் லைசென்ஸை பதிவிறக்கம் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

1. டிஜிலாக்கர்:

DigiLocker என்பது அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இணையதளம் ஆகும். இது குடிமக்கள் பல்வேறு முக்கிய ஆவணங்களின் டிஜிட்டல் பதிப்புகளை பாதுகாப்பாக சேமிக்கலாம். டிஜிலாக்கரில் ஓட்டுநர் உரிமத்தைச் சேர்க்க, முதலில் டிஜிலாக்கர் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, உங்கள் ஆதார் அட்டை அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து நீங்கள் “Documents” பகுதிக்குச் சென்று “Driving license” என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். அப்போது, உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு DigiLocker-ல் சேர்க்கப்படும். இவ்வாறு செய்து வைத்திருந்தால் உடனடியாக ஆபத்து காலத்தில் இந்த ஆப்சனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

2. போக்குவரத்து சேவைகள் இணையதளம்:

போக்குவரத்து சேவைகள் இணையதளத்திற்குச் சென்று உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம். அந்த இணையதளத்துக்கு சென்ற பிறகு நீங்கள் “Online Services” பகுதிக்குச் சென்று “Driving License” என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிம எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட வேண்டும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பு பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகலை பதிவிறக்கம் செய்ய நீங்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் ஆன்லைன் நகல் செல்லுபடியாகும். காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் இதனை நிராகரிக்க முடியாது.

நீங்கள் செய்ய வேண்டியவை: 

உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை உங்கள் தொலைபேசி அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்து வைக்கவும். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை ஜெராக்ஸ் எடுத்து உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் டிஜிட்டல் பதிப்பை யாருடனும் பகிர வேண்டாம். ஓட்டுநர் உரிமத்தின் அசல் கார்டு தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.