2024 ஜீப் ரேங்குலர் எஸ்யூவி அறிமுக தேதி வெளியானது

வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி புதிய ஜீப் ரேங்குலர் (Jeep Wrangler) ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி முரட்டுத்தனமான தோற்றத்துடன் பல்வேறு நவீனத்துவமான ஆஃப் ரோடு அம்சங்களை கொண்டதாக இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.

முந்தைய மாடலை விட முற்றிலும் பல்வேறு ஸ்டைலிங் மேம்பாடுகளை கொண்டிருக்கின்ற புதிய ரேங்குலர் எஸ்யூவி காரில் கூடுதலான வசதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் கருப்பு நிறத்திலான ஏழு ஸ்லாட்களை கொண்ட ஜீப் நிறுவனத்திற்கு உரித்தான பாரம்பரிய கிரிலுடன் மிக நேர்த்தியான பத்து விதமான அலாய் வீல்களை 17 முதல் 20 அங்குலம் வரை கொண்டிருக்கின்றது.

மேலும் மேற்கூரை ஆப்சன் ஹாட் டாப் மற்றும் சாப்டாப் சன்ரைட் போன்றவை கிடைக்கின்றன. ரூபிக்கான் மற்றும் அன்லிமிடெட் என இரண்டு விதமான வேரியண்ட் ஆப்ஷனும் பெற உள்ளது

மேம்பட்ட இன்டிரியரில் 12.3 அங்குல இன்ஃபோடையின்மேன்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு பல்வேறு கனெக்டிவிட்டி சார்ந்த அம்சங்களை ஜிப் யூ கனெக்ட் 5 மூலம் வழங்குகின்றது. செமி டிஜிட்டல் முறையிலான கிளஸ்டரை கொண்டுள்ளது. அட்ஜஸ்டெபிள் இருக்கைகள், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பல்வேறு வசதிகள் கேபினில் கொடுக்கப்பட்டு மிக தாராளமான இடவசதியை வழங்குகின்றது.

இந்திய சந்தையில் கிடைக்கப் போகின்ற ஜீப் ரேங்குலர் எஸ்யூவி காரில் 270 hp பவர் வெளிப்படுத்துகின்ற 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உடன் 8 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும். கூடுதலாக ஆல்வேல் டிரைவ் (Jeep’s Selec-Trac full-time 4WD ) ஆப்சன் உடன் 400Nm டார்க்கினை வழங்கும்.

2024 ஜீப் ரேங்குலர் விலை ரூபாய் 60-65 லட்சத்தில் துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.