இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!

ஜியோ சினிமா ஓடிடி தளம் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியன் பிரீமியர் லீக் 2024 போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.  மேலும் சில சர்வதேச கிரிக்கெட் போட்டிகளையும் இலவசமாக வழங்கியது. போட்டியை பார்க்க தொடங்கும் முன்பு ஒரு விளம்பரம் மட்டும் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் கிரிக்கெட்டை பார்க்கக்கூடிய புதிய சந்தா திட்டத்தை ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.  ஏப்ரல் 20 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது ஒரு புதிய விளப்பரம் ஒளிபரப்பப்பட்டது.  

மேலும் ஜியோ சினிமா நிறுவனம் ஏப்ரல் 21 அன்று X தளத்தில் அந்த புதிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.  அதில் “மாற்றம் நிலையானது, ஆனால் உங்கள் திட்டம் இருக்க வேண்டியதில்லை” என்று பதிவிட்டுள்ளது.  ஜியோசினிமா இந்த புதிய திட்டத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் விளம்பரங்கள் இல்லாத ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த போகிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது.  

Change is constant, but your plan doesn’t have to be 

A new plan. Coming April 25th.#JioCinema pic.twitter.com/aJ4FtsBl7J

— JioCinema (@JioCinema) April 21, 2024

ஜியோ சினிமா சந்தா விலை

தற்போதும் ​​ஜியோ சினிமா சந்தா திட்டங்களை வைத்துள்ளது.  ஆண்டு முழுக்க ஜியோ சினிமாவில் உள்ள தொடர்கள் மற்றும் படங்களை பார்க்க ரூ.999 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் பயனர்கள் ரூ.99க்கான மாதாந்திர திட்டத்தையும் பெற்று கொள்ளலாம். ஜியோசினிமா பிரீமியம் சந்தா பெற்றால், அதன் மூலம் HBO தொடர்களை பார்க்க முடியும்.அது மட்டுமின்றி பிற தொலைக்காட்சி தொடர்களையும் பார்க்க முடியும். மேலும் பிரீமியம் பயனர்கள் அதிகபட்ச வீடியோ மற்றும் ஆடியோ தரத்தை இதன் மூலம் பெறுவார்கள். 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டது.  இதன் மூலம் இரு நிறுவனங்களும் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை ஒன்றிணைக்க ஒப்புக்கொண்டன.  “இந்தியாவில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உள்ளடக்கத்திற்கான முன்னணி டிவி மற்றும் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றான, பொழுதுபோக்கு (கலர்ஸ், ஸ்டார்பிளஸ், ஸ்டார்கோல்ட்) மற்றும் விளையாட்டுகள் (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ்18) ஆகியவற்றை ஒன்றிணைப்பதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்து இருந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.