What to watch on Theatre & OTT: ஸ்டார், ரசவாதி, ஆவேஷம், இந்த வாரம் என்னென்ன பார்க்கலாம்?

STAR (தமிழ்) 

STAR

இளன் இயக்கத்தில் கவின், லால், கீதா கைலாஷம், அதிதி போஹங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாமானிய இளைஞன் அசாத்தியக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதுதான் இதன் கதைக்களம். சினிமாவில் பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற கனவை விடாமல் துரத்தும் கதாபாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ரசவாதி (தமிழ்)

ரசவாதி

‘மெளனகுரு’, ‘மகாமுனி’ படங்களின் இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன், சுஜித் ஷங்கெர், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரசவாதி’. அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் அர்ஜூன் தாஸுக்கு வரும் பிரச்னைகள், அவர் கடந்த கால வாழ்கையின் பகைகளால் வரும் சிக்கல்கள் என திரில்லர் கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

உயிர் தமிழுக்கு (தமிழ்)

உயிர் தமிழுக்கு

ஆதம் பாவா இயக்கத்தில் அமீர், சந்தினி, ஆனந்த் ராஜ், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘உயிர் தமிழுக்கு’. அரசியல் நையாண்டித் திரைப்படமான இது இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Aaro (மலையாளம்)

Aaro

ரஷீத் பரக்கல் இயக்கத்தில் ஜோஜு ஜார்ஜ், அனுமோல் கே மனோஹரன், கிச்சு டெல்லஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aaro’. திருட்டு, கொள்ளை, கொலைகளில் சிக்கிக் கொண்டு தவிக்கும் ஊரை மீட்கப் போராடும் போலீஸ்காரரின் க்ரைம் திரில்லர் கதை இது. இத்திரைப்படம் இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Krishnamma (தெலுங்கு)

வி.வி. கோபால கிருஷ்ணா இயக்கத்தில் சத்யதேவ் கான்சரணா, அதிரா ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Krishnamma’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

Srikanth (இந்தி)

Srikanth (இந்தி)

விழிச்சவால் கொண்ட இந்தியாவின் முன்னணி இன்டஸ்ட்ரியலிஸ்ட்டான ஶ்ரீகாந்த் பொல்லாவினுடைய பயோபிக் இது. பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் ஶ்ரீகாந்த் பொல்லாவாக நடித்துள்ளார். ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துஷார் ஹிரனானந்தனி இயக்கியிருக்கும் இத்திரைப்படம் இன்று (மே 10) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Kingdom of the Planet of the Apes (ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, இந்தி)

வெஸ் பால் இயக்கத்தில் ஃபெரெயா அலன், ஓவன் டியாக், கெவின் துர்லாண்ட், பீட்டர் மகோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Kingdom of the Planet of the Apes’. ஆக்‌ஷன், அட்வன்சர், அனிமேஷன், சர்வைவல் திரைப்படமான இது இன்று மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Mother of The Bride (ஆங்கிலம்) – Netflix

Mother of The Bride

மார்க் வாட்டர்ஸ் இயக்கத்தில் ப்ரோக்கி ஷீல்ட்ஸ், பெஞ்சமீன் ப்ராட், மிராண்ட கஸ்க்ரோவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Mother of The Bride’. திருமணத்தைச் சுற்றி நடக்கும் ஃபேமலி, காமெடி திரைப்படமான இது இன்று மே 10ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

இந்த வார வெப் சீரிஸ்கள்

Monsters At work Season 2 (ஆங்கிலம்) – Disney + Hotstar

Monsters At work Season 2

பாப்ஸ் கன்வே உருவாக்கத்தில் பில்லி கிரிஸ்டல், ஜான் குட்மேன், பென் ஃபெல்ட்மேன், மிண்டி கல்லிங் உள்ளிடோர் குரலில் உருவாகியுள்ள அனிமேஷன் வெப்சீரிஸ் ‘Monsters At work Season 2’. காமெடி, அட்வன்சர்கள் நிறைந்த இந்த வெப்சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Dark Matter (ஆங்கிலம்) – Apple Tv +

Dark Matter

பிளேக் க்ரோச் இயக்கத்தில் ஜோயல் எட்கெர்டன், ஜெனிபர் கொன்னெல்லி, ஒகேஸ் ஃபெக்லே உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ‘Dark Matter’. சயின்ஸ் ஃபிக்‌ஷன், திரில்லர் வெப்சீரிஸான இது ‘Apple Tv +’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Under the Bridge (ஆங்கிலம்) – Disney + Hotstar

Under the Bridge

குயின் ஷெப்ஹார்ட் இயக்கத்தில் லில்லி கிளாட்ஸோட், விரிடிகா குப்தா, சோலே கைட்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Under the Bridge’. 14 வயது சிறுமி நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லும்போது காணாமல் போய்விடுகிறார். அந்தச் சிறுமி உயிரோடு இருக்கிறரா, அவருக்கு என்ன ஆனது, இதற்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் இதன் கதைக்களம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரில்லர் வெப் சீரிஸ் ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Bodkin (ஆங்கிலம்) – Netflix

Bodkin (ஆங்கிலம்) – Netflix

ஜெஸ் ஸ்கார்ப் இயக்கத்தில் ஷியாபன் குல்லென், ரோபைன் கரா, செரிஸ் வால்லே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ் ‘Bodkin’. காமெடி, இன்வஸ்டிகேஷன், திரில்லர் வெப்சீரிஸான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

Undekshi Season 3 (ஆங்கிலம்) – ZEE5

Undekshi Season 3

சித்தார்த் செங்குப்தா இயக்கத்தில் ஹார்ஷ் ச்ஷாயா, திப்யெண்டு, பட்டாச் சார்யா, சூர்யா ஷர்மா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள் இந்தி வெப்சீரிஸ் ‘Undekshi Season 3’. காமெடி கலந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸான இது ‘ZEE5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

தியேட்டர் டு ஓடிடி

Romeo (தமிழ்) – Aha

Aha

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரோமியோ’. விஜய் ஆண்டனி, விருப்பமில்லாமல் தன்னைத் திருமணம் செய்துகொண்ட மனைவியைக் காதலித்து, அவரது மனதை கவர நினைப்பதுதான் இதன் கதைக்களம். இன்றைய தலைமுறையினரின் திருமண வாழ்வை காமெடியாகப் பேசும் இத்திரைப்படம் ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

ஆவேஷம் (மலையாளம்) – Amazon Prime Video

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் படம் ‘ஆவேஷம்’. ஆக்ஷன் நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை பகத் பாசில் மற்றும் அன்வர் ரஷித் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். டானாக இருக்கும் பகத் பாசில் மற்றும் மூன்று கல்லூரி மாணவர்களுக்குமிடையே நடக்கும் நட்புதான் இதன் கதைகளம். இப்படம் ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Geethanjali Malli Vachindi (தெலுங்கு) – Aha

Geethanjali Malli Vachindi

சிவா துருலபதி இயக்கத்தில் அஞ்சலி, ராகுல் மஹாதேவ் ஶ்ரீனிவாசா, சத்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Geethanjali Malli Vachindi’. ஹாரர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Chitram Choodara (தெலுங்கு) – ETV win

Chitram Choodara

ஆர். எம். ஹர்ஷா வர்தன் இயக்கத்தில் அன்னபூர்ணம்மா, ரவி பாபு, தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Chitram Choodara’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘ETV win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Abbabba  (கன்னடம்) – Amazon Prime Video

Abbabba

கே. எம். சைத்தன்யா இயக்கத்தில் லிகித் ஷெட்டி, அம்ருதா, தன்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Abbabba’. காதல், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

All of Us Strangers (ஆங்கிலம்) – Disney + Hotstar

All of Us Strangers

ஆண்ரிவ் ஹெய்க் இயக்கத்தில் ஆண்ரிவ் ஸ்கார், பால் மெஸ்கல், கார்டர் ஜான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘All of Us Strangers’. காதல், நட்பு, ரொமான்ஸ் திரைப்படமான இது ‘Disney + Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

8 A.M. Metro (இந்தி) – Zee5

8 A.M. Metro

ராஜ் ரச்சகொண்ட இயக்கத்தில் சையம்மி கெர், குல்சன் தேவ்வய்யா, சந்தீப் பரத்வாஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘8 A.M. Metro’. திருமணமான பெண்ணிற்குக் கிடைக்கும் ஆண் நட்பு, அப்பெண்ணின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றியது என்பதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

The marsh king’s daughter (ஆங்கிலம்) – Lionsgate Play

The marsh king’s daughter

நெய்ல் பர்க்கர் இயக்கத்தில் டைசி ரிட்லி, பென், புரோக்ளின் பிரின்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The marsh king’s daughter’. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.