What to watch on Theatre & OTT: PT சார், சாமானியன், Turbo – இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்?

PT சார் (தமிழ்)

PT சார்

காரத்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, கஷ்மிரா, அனிகா, முனீஸ்காந்த், பிரபு, கே.பாக்யராஜ், இளவரசு, தியாகராஜன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘PT சார்’. இத்திரைப்படம் மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சாமானியன் (தமிழ்)

சாமானியன்

ராகேஷ் இயக்கத்தில் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாமானியன்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பணக்கொள்ளை, கடத்தல் ஆகியவற்றை மையப்படுத்திய இத்திரைப்படம் மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பகலறியான் (தமிழ்)

பகலறியான்

முருகன் ராஜ் இயக்கத்தில் வெற்றி, அக்‌ஷயா, சாய் தீனா, சாப்ளின் பாலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பகலறியான்’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் உருவாகியுள்ளது.

கொஞ்சம் பேசினால் என்ன (தமிழ்)

கொஞ்சம் பேசினால் என்ன

கிரி மார்ஃபி இயக்கத்தில் வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொஞ்சம் பேசினால் என்ன’. ரொமாண்டிக் திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Turbo (மலையாளம்)

Turbo

வைஷாக் இயக்கத்தில் மம்மூட்டி, அஞ்சனா, ராஜ்.B.ஷெட்டி, திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Turbo’. ஆக்‌ஷன் திரைப்படமான இது மே 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Thalavan (மலையாளம்)

Thalavan

ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜு மேனன், ஆஷிஃப் அலி, மியா ஜார்ஜ், அனு ஶ்ரீ, திலீஷ் போத்தன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Thalavan’. போலீஸ் க்ரைம் திரில்லர் திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

The Judgement (கன்னடம்)

The Judgement

குருராஜ் குல்கர்னி இயக்கத்தில் ரவிச்சந்திரன், திகந்த் மஞ்சாலே, மேகனா கோன்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள கன்னட மொழித் திரைப்படம் ‘The Judgement’. கோர்ட் ரூம் டிராமா திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Bhaiyya Ji  (இந்தி)

Bhaiyya Ji

அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், விபின் சர்மா, ஜதின் கோஸ்வாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Bhaiyya Ji’. ஆக்‌ஷன், திரில்லர் திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Love Me (தெலுங்கு)

Love Me

அருண் பீமவரபு இயக்கத்தில் ஆஷிஷ், வைஷ்ணவி சைதன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Love Me’. கீரவாணி இசையமைப்பில், பிசி ஶ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள் ஹாரர் திரில்லர் திரைப்படமான இது மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

FURIOSA: A MAD MAX SAGA (ஆங்கிலம்)

FURIOSA: A MAD MAX SAGA (ஆங்கிலம்)

‘மேட் மேக்ஸ்’ திரைப்படங்களின் இயக்குநர் ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் ஆன்யா டெய்லர்-ஜாய், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டாம் பர்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘FURIOSA: A MAD MAX SAGA’. ‘Mad Max: Fury Road’ திரைப்படத்தின் முன்கதையாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம் மே 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓ.டி,டி ரிலீஸ்கள்

The Blue Angels (ஆங்கிலம்) – Amazon Prime Video

The Blue Angels

பால் க்ரவுடர் இயக்கத்தில் பிரையன் அலெண்டோர்ஃபர், பாபி ஸ்பீட் பால்டாக், பிரையன் பெக் உள்ளிடோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Blue Angels’. அமெரிக்க விமானப் படை வீரர்களின் போர், பயிற்சி வகுப்புகள் பற்றிய ஆவணத்திரைப்படமான இது ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Atlas (ஆங்கிலம்) – Netflix

Atlas (ஆங்கிலம்) – Netflix

பிராட் பெய்டன் இயக்கத்தில் ஜெனிபர் லோபஸ், சிமு லியு, ஸ்டெர்லிங் கே. பிரவுன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Atlas’. ஆக்‌ஷன், அட்வென்சர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Wanted Man (ஆங்கிலம்) – Lionsgate Play

Wanted Man

டால்ஃப் லண்ட்கிரென் இயக்கத்தில் டால்ஃப் லண்ட்கிரென், கிறிஸ்டினா வில்லா, கெல்சி கிராமர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Wanted Man’. ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ‘Lionsgate Play’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த வார வெப்சீரிஸ்

Jurassic World: Chaos Theory (ஆங்கிலம்) – Netflix

Jurassic World: Chaos Theory

நிக் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பால்-மைக்கேல் வில்லியம்ஸ், டேரன் பார்னெட், சீன் ஜியம்ப்ரோன், ரெய்னி ரோட்ரிக்ஸ் உள்ளிட்டோர் உருவாக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Jurassic World: Chaos Theory’. அட்வென்சர், அனிமேஷன் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

Prasanna Vadanam (தெலுங்கு) – Aha

Prasanna Vadanam

அர்ஜுன் இயக்கத்தில் சுஹாஸ் பாகொலு, பயல் ராதாகிருஷ்ணன், ராஷி சிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Prasanna Vadanam’. திரில்லர் திரைப்படமான இது ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Aarambham (தெலுங்கு) – Etv Win

Aarambham

அஜய் நாக் இயக்கத்தில் மோகன் பகத், பூஷன், அபிஷேக் போடேபள்ளி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Aarambham’. திரில்லர் திரைப்படமான இது ‘Etv Win’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Jai Ganesh (மலையாளம்) – Manorama Max

Jai Ganesh

ரஞ்சித் ஷங்கர் இயக்கத்தில் உன்னி முகுந்தன், மஹிமா, தேவகி ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘Jai Ganesh’. நடக்க முடியாத மாற்றுத் திறனாளியாக இருக்கும் கதாநாயகனின் காதல், க்ரைம் திரில்லர் திரைப்படமான இது ‘Manorama Max’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.