ஹர்திக் – நடாசா விவகாரத்து உண்மையா? தீயாக பரவும் தகவல் – உண்மை இதுதான்

ஹர்திக் பாண்டியா, அவரது மனைவி நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக செய்தி ஒன்று இப்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ஆனால், அது வதந்தியாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பாண்டியாவும், நடாசா ஸ்டான்கோவிச்சும் காதலித்து மே 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர நம்பதிக்கு அகஸ்திய பாண்டியா என்ற 3 வயது மகனும் இருக்கிறார். ஆனால், இவர்கள் இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்வதாக தகவல் பரவி வருகிறது. இதற்கு காரணம், நடாசா ஸ்டான்கோவிச் தன்னுடைய சோஷியல் மீடியா அக்கவுண்டுகளில் பாண்டியா என்ற அவர்களின் குடும்ப பெயரை நீக்கிவிட்டார். இதனால் நடாசாவும், பாண்டியாவும் பிரிந்துவிட்டதாக ரெடிட் சோஷியல் மீடியா தளத்தில் செய்தி தீயாக பரவியது.

இது குறித்து கமெண்ட் அடித்த நெட்டிசன்களும், ஐபிஎல் 2024 போட்டிகளில் ஹர்திக் பாண்டியா விளையாடுவதை பார்க்க நடாசா ஒருமுறைகூட வரவில்லை என்பதை சுட்டிக்காட்டினர். மேலும் அவர் ஹர்திக்குடன் இருக்கும் எந்தப் படத்தையும் லேட்டஸ்டாக வெளியிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன் நடாசா தனது பிறந்த நாளுக்கு கூட குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையோ அல்லது ஹர்திக் பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படத்தையோ வெளியிடவில்லை. இவையெல்லாம் பாண்டியா – நடாசா விவகாரத்து செய்தியை உறுதி செய்யும் சமிக்கைகளாக நெட்டிசன்கள் கூறத் தொடங்கினர். 

இதுகுறித்து சோஷியல் மீடியாவில் வெளியான பதிவு ஒன்றில், “நடாசாவுக்கு மார்ச் 4 ஆம் தேதி பிறந்தநாள் என்றபோதும், ஹர்திக் பாண்டியா தனது மனைவிக்கு எந்தவொரு வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. நடாசாவும் தனது மகன் அக்ஸ்தியாவுடன் இருவரும் இருக்கும் புகைப்படங்களைத் தவிர, பாண்டியாவுடன் இருக்கும் புகைப்படங்களை எல்லாம் சோஷியல் மீடியா அக்கவுண்டுகளில் இருந்து நீக்கிவிட்டார்” என கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், இது குறித்து ஹர்திக் அல்லது நடாசா தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதை வைத்து பார்க்கும்போது சமூக ஊடகங்களில் பரவும் இந்த செய்தி வெறும் ஊகமே தவிர வேறொன்றுமில்லை. உண்மையில், நடாசாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால், அவர், ஹர்திக் மற்றும் குடும்பத்தினருடன் எடுத்த மற்ற படங்கள் இன்னும் உள்ளன. இதனால், ஹர்திக்கின் அனைத்து படங்களையும் நடாசா நீக்கியதாக வெளியான செய்திகள் உண்மையல்ல.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஹர்திக் பாண்டியா இப்போது கடினமான காலத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பு ஏற்ற முதல் சீசனே படுதோல்வியை அந்த அணி சந்தித்திருக்கிறது. அவரும் ஒழுங்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் அவரின் கேப்டன்சி மற்றும் ஆட்டம் குறித்து கிரிக்கெட் வட்டாரத்தில் பல கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், கூடவே தனது மனைவியுடன் பாண்டியா விவாகரத்து செய்திருப்பதாக பரவி வரும் செய்தி அவருக்கு கடினமான காலத்தில் இருப்பதை காட்டுவதாக பாண்டியா ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விரைவில் இந்த சூழலில் இருந்து ஹர்திக் மீள்வார் என்றும் நம்பிக்கையுடன் அவருக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.