இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள் : அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து

அலகாபாத் : இந்திய பெண்கள் தங்களது கணவரை விட்டுத் தர மாட்டார்கள் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் சுசில் குமார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளனர். இவர் இரண்டாவது மனைவிக்குத் தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இது தெரியவந்ததும், இரண்டாவது மனைவி போலீசில் புகார் அளித்து விட்டு, விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவர் சுஷில் குமார் மற்றும் … Read more

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையில் சிலர் சிக்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 3,205 பேருக்கு கொரோனா..2,802 பேர் குணமடைந்தனர்.. 31 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,205 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,88,118 ஆக உயர்ந்தது.* புதிதாக 31 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை கடற்பகுதியில் கைது செய்தது இலங்கை கடற்படை

கொழும்பு : தமிழகம் வர முயன்ற 14 ஈழத்தமிழர்களை பேசாலை கடற்பகுதியில் கைது செய்தது இலங்கை கடற்படை.தமிழகத்தில் தஞ்சம் அடைய வந்த வவுனியாவை சேர்ந்த 4 பேர், மன்னார் பகுதியை சேர்ந்த 10 பேர் கைதாகினர்.

ஒரே பாடலில் சிரஞ்சீவி, சல்மான்கான் நடனம்

ஐதராபாத்: தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் படம், ‘காட்பாதர்’. இது மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். சிரஞ்சீவி, நயன்தாரா, சத்யதேவ், இயக்குனர் புரி ஜெகன்நாத் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, தமன் இசை அமைக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை. கடந்த மாதம் ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். இதையடுத்து பிரபுதேவா நடனப் … Read more

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், இன்று தொடங்கியது

சென்னை : கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், இன்று தொடங்கியது. 25 நாட்களுக்கு கத்திரி வெயில் காலகட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து அனல் காற்று வீசும்.அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 28ம் தேதி வரை நீடிக்கும். 

மகா காளி கோயில் சென்றபோது கார் விபத்தில் சிக்கிய நடிகை தனுஸ்ரீ தத்தா

மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகா காளி தரிசனத்துக்கு சென்றபோது கார் விபத்தில் சிக்கினார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கோயில் தரிசனத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பதி விட்டுள்ள அவர், தனக்கு ஏற்பட்ட விபத்துக்கான காரணத்தையும் விளக்கியுள்ளார். ‘மகா காளி தரிசனத்துக்காக வந்தேன். கோயிலுக்கு செல்லும் வழியில் … Read more

மே-04: பெட்ரோல் விலை ரூ.110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா: இந்தி, போஜ்புரி, பெங்காலி, பஞ்சாபி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் மிதுன் சக்ரவர்த்தி (72). தமிழில் 2015ல் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற படத்திலும் அவர் நடித்திருந்தார். பாஜ தலைவர்களில் ஒருவராக இருக்கும் அவர், 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிட்டு தோற்றார். சில நாட்களுக்கு முன்பு மிதுன் சக்ரவர்த்திக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.‘மிதுன் சக்ரவர்த்திக்கு காய்ச்சல் மற்றும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,264,969 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.64 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,264,969 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 514,507,624 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 469,033,789 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40,841 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.