ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில்தான் உள்ளது: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தகவல்

மும்பை: ரிசர்வ் வங்கியின் முழுக் கவனமும் நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தான் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பண வீக்கம் கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் பண வீக்கத்தை 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் பணவீக்கம் தற்போது 7.79 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது ஆர்.பி.ஐ. நிர்ணயித்த இலக்கை … Read more

கடலூர் எண்ணெய் ஆலையில் திருடப்பட்ட இரும்புபொருட்கள் சுள்ளான்மேடு கிராமத்தில் கண்டுபிடிப்பு

கடலூர்: பெரியப்பட்டு பகுதியில் மூடப்பட்டுள்ள எண்ணெய் ஆலையில் தளவாடப் பொருட்கள் திருடப்பட்ட இரும்புபொருட்கள் சுள்ளான்மேடு கிராமத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டன் கணக்கில் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்ய வந்த போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். 

ஏழுமலையானுக்கு செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் மாதம் 16,17ல் ஏலம்; திருப்பதி தேவஸ்தானம் தகவல்

திருமலை: திருப்பதியில் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16,17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் பணம் மற்றும் நகைகளை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இதில் கிடைத்த ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா நாடுகளின் வெளிநாட்டு நாணயங்கள் ஜூன் 16, 17ம் தேதிகளில் மின்னணு ஏலம் விடப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு மார்க்கெட்டிங் துறை பொது மேலாளர் … Read more

'திராவிர மாடல்' என்ற சொல் நாடு முழுவதும் பரவிவிட்டது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: ‘திராவிர மாடல்’ என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் பரவிவிட்டது என சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில் தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன; திமுக ஆட்சியில் அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது; பணவீக்கம் குறைந்துள்ளது என தெரிவித்தார்.   

விசா முறைகேடு தொடர்பாக 2ம் நாளாக சிபிஐ விசாரணை எங்கள் குரலை ஒடுக்க முயற்சி: மக்களவை சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

புதுடெல்லி: சீனா பணியாளர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் இரண்டாவது நாளாக நேற்று ஒன்பது மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.சீனா நாட்டில் இருந்து 263 பேர் இந்தியாவுக்கு அழைத்து வர முறைகேடாக விசா வாங்கி கொடுக்க ரூ.50லட்சம் தொகையை லஞ்சமாக பெற்றுள்ளதாகவும், இதே காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கும் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனையை செய்துள்ளதாகவும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ கடந்த வாரம் புதிய வழக்கு செய்தது. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும்.29,23ம் தேதிகளில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. 

ஒரு சதவீதம் கமிஷன் விவகாரம் கைது செய்யப்பட்ட மாஜி அமைச்சருக்கு 14 நாள் சிறை

புதுடெல்லி: பஞ்சாப்பில் டெண்டர்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு சதவீதம் கமிஷன் கேட்டதால், சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட  விஜய் சிங்லாவை 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பஞ்சாப்பில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இக்கட்சியை சேர்ந்த பகவந்த் மான் முதல்வர் பதவியை வகித்து வருகிறார். ஊழலுக்கு எதிராக இவர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இந்நிலையில், இவருடைய அரசில் சுகாதாரத் துறை … Read more

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 குற்றவாளிகளை 2 நாள் காவலில் விசாரிக்க திட்டம்

சென்னை: சென்னையில் பாஜக நிர்வாகி பாலசந்தர் கொலையில் 4 குற்றவாளிகளை 2 நாள் காவலில் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பாலச்சந்தரை வெட்டிக்கொலை செய்த பிரதீப், சஞ்சய், ஜோதி, கலைராஜனை காவலில் எடுத்து விசாரிக்க நாளை மறுநாள் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.   

டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

டெல்லி: சீன நாட்டினருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 62-வது பழக் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62-வது பழக் கண்காட்சி தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத்துறை சார்பில் 25 அரங்குகள் பழக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. பழங்களைக் கொண்டு தாஜ்மஹால், கோயில் தேர் உள்ளிட்ட பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது.