உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பக்தி பரவசம்..!

திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. திருவாரூர் தியாகராஜர் கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாக திகழ்கிறது. இந்த கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 48 நாட்கள் நடைபெறும், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு பங்குனி உத்திர விழா … Read more

கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி சோதனை கெடு 18 மாதம் நீட்டிப்பு

புதுடெல்லி:  கனரக சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் 2023 ஏப்ரல் 1ம் தேதி முதல் தானியங்கி சோதனை நிலையங்களில் (ஏடிஎஸ்) கட்டாய சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகுரக மோட்டார் வாகனங்கள் 2024 ஜூன் 1ம் தேதி முதல் கட்டாய தகுதி சோதனைக்கு உட்படுத்த வேண்டுமெனும் உத்தரவிடப்பட்டிருந்தது. கனரக வாகனங்களுக்கான கட்டாய தகுதி பரிசோதனை செய்யும் திட்டம் … Read more

பொதட்டூர்பேட்டையில் பேரூராட்சி மன்றக்கூட்டம்

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் (பொ) வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திடக்கழிவு திட்டத்தின்  கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் தள்ளுவண்டிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்க தேவையான பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி, … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,495 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,495 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,927,093 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,833,589 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,884 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிசோடியா ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி : டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 9ம் தேதி அமலாக்கத்துறை சிசோடியாவை கைது செய்தது. இந்நிலையில் ஜாமீன் கேட்டு சிசோடியா தரப்பில் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 24ம் தேதி  சிசோடியா ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு … Read more

போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: நடவடிக்கை எடுக்க கோரி புகார்

பூந்தமல்லி: போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக, 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை(49). இவர் மதுரவாயல் காவல்  நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், போரூர் சுங்கச்சாவடியில் 10 சக்கரம் கொண்ட தன்னுடைய இரண்டு லாரிகளுக்கு 16 சக்கர வாகனங்களுக்கு உண்டான கட்டணம் வசூல் செய்து விட்டனர். கடந்த ஓராண்டில் சுமார் இரண்டு லட்சம் வரை முறைகேடாக ”பாஸ்ட்டேக்” … Read more

ஏப்-01: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 315-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு: புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கை வெளியீடு

புதுடெல்லி: வரும் 2030ம் ஆண்டிற்குள் 2 டிரில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டுவதை இலக்காக கொண்டு புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் வெளிநாட்டு வர்த்தக கொள்கையை   ஒன்றிய அரசு வெளியிட்டு வருகிறது. கடந்த 2015ல் வகுக்கப்பட்ட 5 ஆண்டு கொள்கை,  கடந்த ஆண்டு செப்டம்பரில், 2023 மார்ச் 31 வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

ஊத்துக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை 6 மணியளவில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணைத் தலைவர் சடையப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பிரகாசம், பொருளாளர் ராஜூ, அமைப்பு செயலாளர் செல்வராஜ், செய்தி தொடர்பாளர் யுகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய … Read more

ராகுல் தகுதி நீக்கம் அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்: பீகார் சட்டப்பேரவையில் தேஜஸ்வி ஆவேசம்

பாட்னா: ராகுல் தகுதி நீக்கம் குறித்து பீகார் சட்டப்பேரவையில் பேசிய துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ்,’ காலம் உரிய பதில் அளிக்கும். அப்போது அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்’ என்றார். பீகார் சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:   என் தந்தை ரயில்வே அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் நடந்த வழக்கில் நான் சேர்க்கப்பட்டேன். அப்போது அரசியலில் ஈடுபடும் வயதைக்கூட நான் எட்டவில்லை. அந்த வழக்கில் இப்போது எனது வீடு, எனது சகோதரிகளின் வீடுகளில் சோதனை … Read more