ஆணைய பரிந்துரை மீதான நடவடிக்கையை தெரிந்து கொள்ளாமல் பொதுநல வழக்கை விசாரிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை: தகவல் உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த ஸ்டாம்ப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரை குறித்து வழக்கு தொடரப்பட்டது. ஒன்றிய தகவல் ஆணைய பரிந்துரையை அமல்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆணையம் பரிந்துரை மட்டும் தந்துள்ளது; அதன் மீதான நடவடிக்கை பற்றி அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்தது. 

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானம் குடித்து 3 வயது குழந்தை பலி

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே வீட்டின் முன் கிடந்த காலாவதியான குளிர்பானம் குடித்த 3 வயது குழந்தை பலியானது. மல்லாபுரம் கிராமத்தில் சத்யராஜ் என்பவரின் 3 வயது மகள் ரச்சனா லட்சுமி காலாவதியான குளிர்பானம் குடித்து பலியானார். 3 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட குழந்தை சேலம் அரசு மருத்துவமனையில் சிக்ச்சை பலனின்றி உயிரிழந்தது.  

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு ரோஜர் பெடரர் ஆதரவு கரம்: 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக உறுதி

நியூடெல்லி: சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர். இவர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். ரோஜர் பெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது … Read more

ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும்: எம்.பி.பாரிவேந்தர் பேச்சு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் ஐஜேகே சார்பில் வென்றவர்கள் நேர்மையாக கடமையாற்ற வேண்டும் என எம்.பி. பாரிவேந்தர் தெரிவித்தார். தங்களின் செயல்கள் மூலம் மக்களை கவர வேண்டும் என ஐஜேகே சார்பில் வென்றவர்களிடம் பாரிவேந்தர் பேசினார். தற்போது வெற்றியடைந்தவர்கள் எங்களின் அடையாளம் என சென்னையில் நடந்த விழாவில் எம்.பி.பாரிவேந்தர் பேசினார்.

இந்திய பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் பேச்சுவார்த்தை: பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்த ஆலோசனை

டெல்லி: பிரதமர் மோடியுடன் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஃபுமியோ கிஷிடோ 2 நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வந்தார். டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்தவே இந்தியா வந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தகவல் அளித்தார்.

சென்னை மாதவரம் அருகே சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்!: அலறியடித்து ஓட்டம் பிடித்த ஒட்டுநர்..!!

சென்னை: சென்னை மாதவரம் அருகே ஆந்திரா நோக்கி சென்ற பழுதான காரின் எஞ்ஜின் பகுதியை திறக்க முற்பட்ட போது திடீரென பற்றிய தீயால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுநர் உட்பட காரில் இருந்த 4 பேரும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். தீயை அணைப்பதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.

ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம்: பஞ்சாப் மாநிலத்தில் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க முடிவு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 25,000 பேருக்கு அரசு வேலை வழங்க, ஆம் ஆத்மி அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. பஞ்சாபில் அமோக வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்ததை அடுத்து பகவந்த் மான் முதலமைச்சரானார். மேலும் 10 அமைச்சர்களுடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் அமைச்சரவையின் முதல் கூட்டம் சண்டீகரில் நடைபெற்றது.     

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டின் போது, காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாடு வெளியேறும் பகுதிக்கு அருகிலேயே கிணறு இருந்ததால் விபரீதம் அரங்கேறியுள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை பத்திரமாக மீட்டனர்.

பஞ்சாப்பில் 10 அமைச்சர்கள் பதவியேற்பு: முதல்வர் பகவந்த் மான் வாழ்த்து

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் இன்று 10 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களுக்கு முதல்வர் பகவந்த் மான், டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து ஏற்கனவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16ம் தேதி முதல்வராக பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் பதவியேற்று கொள்ளாமல் சுதந்திர போராட்ட தியாகி பகத் சிங்கின் சொந்த ஊரான … Read more