நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை: பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள குறவர் இன சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நரிக்குறவர்களை பழங்குடியினத்தில் சேர்ப்பதன் மூலம் அரசின் நலத்திட்டங்களை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கம்: கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

சென்னை: சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக பொறுப்பேற்று 45-வது ஆண்டு தொடக்கத்தை ஒட்டி கி.வீரமணிக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.  

செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தொலைந்து போன 176 செல்போன்களை மீட்டு அவற்றின் உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் IPS ஒப்படைத்தார். மொபைல் தொலைந்து போனால் உடனடியாக IMEI எண்ணுடன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் எனவும் எஸ்.பி. அரவிந்தன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

உ.பி.யில் புதிய அரசு 25-ம் தேதி பதவியேற்பு?.. கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு 23-ம் தேதி பதவியேற்பு

பனாஜி: கோவாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு 23-ம் தேதி புதனன்று பதவியேற்க உள்ளது. கோவாவுக்கான பாஜக மேலிட பார்வையாளர்கள் நரேந்திரசிங் தோமர், எல். முருகன் ஆகிய இருவரும் இதற்காக புதனன்று கோவாவுக்கு செல்ல உள்ளனர். அன்று கோவா பாஜக சட்டமன்ற தலைவரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட்டவுடன் அன்றே புதிய அரசு பதவியேற்க உள்ளதாக கோவா மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். புதிய … Read more

ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரை

சென்னை: ரூ.8 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் 2வது முறையாக வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது உரையாற்றிய அவர், வேளாண் மையங்களில் பணமில்லா பரிவர்த்தனைக்கு வித்திடும் என குறிப்பிட்டார்.

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கட்டாருசக், குர்மீத் சிங் மீட் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த 16ம் தேதி … Read more

விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: விவசாய துணைத் தொழிலான கால்நடை வளர்ப்பு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒருங்கிணைந்த பசுந்தீவன இயக்கம் செலுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

கரும்பு உற்பத்தி அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும் : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ₹195 வழங்கப்படும் எனவும், கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ₹2950 ஆகவும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ₹10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின்  கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு 278 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

ஆக்லன்ட்: மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா 278 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. 50 ஓவர்களில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் -68, யாஸ்திகா பாட்டியா -59 ரன் எடுத்தனர்.   

இந்தியாவில் தொடர்ந்து குறையும் தினசரி கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 2,075 பேருக்கு தொற்று உறுதி; 71 பேர் உயிரிழப்பு.!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5.1 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4.30 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,075 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,06,080-ஆக உயர்ந்தது.* புதிதாக 71 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் … Read more