ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரை

டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு அளித்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைசெய்துள்ளார் . ஆளுநரின் செய்லபாடுகள் தொடர்பாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தை தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குடியரசு தலைவரிடம் அளித்தனர். கடந்த 9-ம் தேதி பேரவையில் ஆளுநர் மரபு மீறி நடந்தது தொடர்பாக குடியரசு தலைவரிடம் அரசின் பிரதிநிதிகள் நேரில் முறையிட்டனர்.

சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட செங்கமடை ஆறுமுக கோட்டையை சீரமைக்க வேண்டும்

*சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செங்கமடை கிராமத்தில் சேதுபதி மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாரம்பரிய வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுக கோட்டை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.ஆர்.எஸ் மங்கலம் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே செங்கமடை கிராமத்தில் ஊருக்கு கிழக்கே ஆறுமுககோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையை சேதுபதி மன்னர்களில் ஒருவரான முத்துவிஜயரகுநாத சேதுபதி பிரஞ்சு பொறியாளர்களை கொண்டு கட்டியதாக கூறப்படுகின்றது. இந்த செங்கமடை ஆறுமுக கோட்டையை … Read more

தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை: தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து

சென்னை: தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை என்று தமிழ்நாடு ஆளுநர் என குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பல்லாயிரம் ஆண்டுகால கலாச்சாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாக கொண்டாடுகிறோம். பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.  

சபரிமலையில் இன்று நடக்கிறது மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம்.! ஐய்யப்பனை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்:

பம்பை: சபரிமலையில் மகரவிளக்கு பூஜை இன்று நடக்கிறது. மகரஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மண்டல பூஜை முடிவடைந்ததும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. ஐய்யப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்ததை போல் மகரவிளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் … Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.368 உயர்ந்து ரூ.42,368-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.368 உயர்ந்து ரூ.42,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ.5,296க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி சந்தோக்சிங் மருத்துவமனையில் உயிரிழப்பு

பஞ்சாப்: பஞ்சாப் லூதியானாவில் காங்கிரஸ் யாத்திரையில் கலந்து கொண்ட எம்பி  சந்தோக்சிங் மருத்துவமனையில் காலமானார். ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் கலந்து கொண்ட எம்பி சந்தோக் சிங் சவுத்ரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்ட காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

12 நாட்களில் 5.4 செ.மீ. புதைந்தது ஜோஷிமத் நகரம்: இஸ்ரோ மையம் தகவல்

புதுடெல்லி: உத்தரக்காண்டின் ஜோஷிமத் நகரம் கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. பூமியில் புதைந்ததாக இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பத்ரிநாத், கேதர்நாத், ஹேமகுந்த் சாகிப் உள்பட புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் நிறைந்த உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கட்டிடங்கள், வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட நிலவெடிப்பு, நிலச்சரிவு காரணமாக விரிசல் ஏற்பட்டது. இதனால் ஜோஷிமத் நகரமே பூமியில் புதைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு … Read more

புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை

புழல்: புழல் சிறையில் காவல் துணை ஆணையர் ராஜாராம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் தீவிர சோதனை நடத்துகின்றனர். கைதிகளிடம் கஞ்சா, சொல்போன் பயன்பாடு உள்ளதா என்பது குறித்து புழல் சிறையில் போலீஸ் தீவிர சோதனை நடைபெறுகிறது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேச்சு

டெல்லி: இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேசியுள்ளார். கிரிப்டோகரன்சி வர்த்தகம் சூதாட்டம் போன்றது, ஒவ்வொரு சொத்துக்கும் மதிப்பு இருக்க வேண்டும், ஆனால், கிரிப்டோகரன்சிகளை பொருத்தவரை எந்த மதிப்பும் கிடையாது, கிரிப்டோ எந்த வகையிலும் நிதியாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

கோவையில் சர்வதேச பலூன் திருவிழா; பலூனில் பறக்க ஒருவருக்கு ரூ.25,000 கட்டணம் நிர்ணயம்

கோவை: கோவையில் சர்வதேச பலூன் திருவிழா; பலூனில் பறக்க ஒருவருக்கு ரூ.25,000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 10 வகையான பலூன்கள் வரவைக்கப்பட்டுள்ளன.