கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

கோவை: கோவை சாய்பாபா காலனியில் போதை மாத்திரை விற்றதாக கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சஞ்சய், ஜானகிராமன், செல்வகுமார் ஆகியோரிடம் இருந்து 170 டைடல் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம் லாலு மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு அனுமதி

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது, 2004 முதல் 2009-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வழங்குவதற்காக லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் லூலு பிரசாத் யாதவ் மீது வழக்கு தொடர சிபிஐ.க்கு ஒன்றிய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது. இநத வழக்கில் கடந்தாண்டு  சிறப்பு நீதிமன்றத்தில்  லாலு, … Read more

ஆறுகளில் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

வாரணாசி: வாரணாசியில் இருந்து ஆறுகளின் வழியாக சுமார் 3200 கி.மீ தூரம் செல்லும் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை உலகின் நீண்ட தூர ஆற்று வழி சொகுசு கப்பல் பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எம்.வி கங்கா விலாஸ் என்ற கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வாரணாசியில் இருந்து புறப்பட்டு கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,726,483 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.26 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,726,483 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 670,729,193 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 641,873,312 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 45,953 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உணவு டெலிவரிக்கு சென்றபோது நாயிடம் தப்பிக்க 3வது மாடியில் இருந்து குதித்த வாலிபர் சீரியஸ்: ஐதராபாத்தில் பெண் மீது வழக்கு

திருமலை: ஐதராபாத்தில் உணவு டெலிவரிக்கு சென்றபோது வாலிபரை வளர்ப்பு நாய் கடிக்க முயன்றதால் 3வது மாடியில் இருந்து கீழே குதித்தார். ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஷோபனாநாகனி என்ற பெண் கடந்த 11ம் தேதி ஆன்லைன் ஆப்பில் உணவு ஆர்டர் செய்தார்.   டெலிவரி பாயான முகமது ரிஸ்வான்(23) என்பவர் உணவு பார்சலை   தர கதவை தட்டியுள்ளார். அப்போது கதவு திறந்திருந்ததால் வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் வெளியே வந்து முகமதுரிஸ்வானை கடித்தது.   தப்பிக்க … Read more

திரிபுராவில் உயிரிழந்த வீரர் உடல் தகனம்

ஈரோடு: திரிபுராவில் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியை சேர்ந்த வடிவேல் (38) என்பவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை அவரது மனைவியுடன் செல்போனில் பேசியபோது ராணுவ வீரர் வடிவேலு கடும் குளிராக இருப்பதாக கூறினார். அடுத்து சில நாட்களில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, வடிவேலுவின் உடல் திரிபுராவில் இருந்து விமானம் … Read more

ஜனவரி -14: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பழைய ஓய்வூதிய திட்டத்துக்கு இமாச்சல அமைச்சரவை ஒப்புதல்

சிம்லா: இமாச்சலப்பிரதேச புதிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே பழைய ஓய்வுதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சுக்விந்தர் சிங் சுக்கு முதல்வராக பொறுப்பேற்றார். முன்னதாக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது மாநிலத்தில் பழைய ஓய்வூதிய முறையே மீண்டும் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில் இமாச்சல் அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு தலைமையில் நடந்த … Read more

தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை சேதப்படுத்த 2 படகுகள் தருகிறேன்: இலங்கை அமைச்சர் பேச்சால் சர்ச்சை

ராமேஸ்வரம்: தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் மீது மோதி சேதப்படுத்துவதற்கு 2 ஸ்டீல் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்போவதாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று, தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்டு பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், ‘‘மீனவர்கள் பிரச்னை நீண்ட காலமாக தொடர்கிறது. அதனால் இந்த … Read more

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை: குவியும் பக்தர்கள்: ஆன்லைன் முன்பதிவு ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலையில்  பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று நடப்பதையொட்டி பக்தர்கள்  குவிந்த வண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை இன்று (14ம் தேதி) நடைபெறுகிறது. மகரவிளக்கு பூஜை தினத்தன்று ஐயப்ப  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் நேற்று  முன்தினம் பந்தளத்தில் இருந்து  புறப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் திருவாபரணம் சன்னிதானத்தை அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு  தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் 3 … Read more