மின்சார சார்ஜிங் நிலையங்கள்; 4 மாதங்களில் 2.5 மடங்கு உயர்வு| Dinamalar

புதுடில்லி : புதுடில்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட ஒன்பது பெருநகரங்களில், கடந்த நான்கு மாதங்களில், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளதாக மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அரசின் முயற்சியால் சூரத், புனே, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புதுடில்லி, கோல்கட்டா, மும்பை மற்றும் சென்னை ஆகிய நகரங்களில், கடந்த நான்கு மாதங்களில், மின்சார சார்ஜிங் நிலையங்கள் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலத்தில், … Read more

'வாஷி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் 'வாஷி' படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ நண்பரான விஷ்ணு இயக்கி வருகிறார். இதை கீர்த்தியின் சகோதரி தயாரிக்கிறார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவுபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அபிஷேக் பச்சன், மோகன்லால், மகேஷ்பாபு மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அதில் கீர்த்தி, டொவினோ இருவரும் வக்கீல் லுக்கில் உள்ளனர்.

கனடாவில் கல்லூரிகள் மூடல் | Dinamalar

ஒட்டவா : கனடாவில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடப்பதால், கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்திய மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட அமெரிக்க நாடான கனடாவில், கொரோனா பரவலை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில், போராட்டம் நடந்து வருகிறது.கனடாவின் கியுபெக் மாகாணத்தில் உள்ள மூன்று கல்லுாரிகளில், இந்திய மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். பல மாணவர்கள், கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். போராட்டம் காரணமாக, இந்த கல்லுாரிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, … Read more

அரகண்டநல்லுாரில் 5:00 மணிக்கு | Dinamalar

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் 81.59 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லுார் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளது. இதில், ஒரு வார்டில் தி.மு.க., வேட்பாளர் அன்பு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று 11 வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 4,498 வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். மாலை 5:00 மணி நிலவரப்படி 3,670 பேர் ஓட்டளித்து இருந்தனர். இது 81.59 சதவீதமாகும்.மாலை 5:00 மணியிலிருந்து 6:00 மணிவரை கொரோனா பாதித்தவர்கள் ஓட்டு போடுவதற்கான … Read more

20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரசன்னா- கனிகா ஜோடி

பிரசன்னா – கனிகா ஜோடி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் '5 ஸ்டார்'. இந்த படத்தில் தான் பிரசன்னா, கனிகா நடிகர்களாக அறிமுகமானார்கள். அதன்பின் இருவரும் தனித்தனியாக பல படங்களில் நடித்தனர். தற்போது 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரசன்னாவும் , கனிகாவும் இணைந்து அஹா ஓடிடி தளம் தயாரிக்கும் ஒரு புதிய இணைய தொடரில் … Read more

ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி; அதிரிக்கும் போர் பதற்றம்| Dinamalar

மாஸ்கோ: ரஷ்யாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே போர்ப் பதற்றம் அதிரித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. கடந்த வெள்ளியன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்து முடித்துள்ளது. இதனுடன் டியூ-95 அணுகுண்டுகளையும் நீர்மூழ்கி கப்பல்களையும் சோதனை செய்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு … Read more

குடிபோதையில் போலீசை தாக்க முயன்ற நடிகை காவ்யா தாபர் கைது

தமிழில் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், தெலுங்கில் ஏக் மினி கதா, ஏக் மாயா பிரேமித்தோ, இந்தியில் தட்கல் படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். காவ்யா நேற்று முன்தினம் இரவு மும்பை ஜூகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்து ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.. அப்போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதைப்பார்த்த அந்த பகுதியை மக்கள் உடனடியாக போலீசாருக்கு … Read more

ரஷ்ய ஆதரவுடன் பிரிவினைவாதிகள் தாக்குதல்; ராணுவ வீரர் உயிரிழந்ததால் உக்ரைனில் பதற்றம்| Dinamalar

மாஸ்கோ-ரஷ்ய ஆதரவுடன், உக்ரைனில் பிரிவினை வாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உயிரிழந்ததால், பதற்றம் அதிகரித்து உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்புகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், 1.50 லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. இதனால், இருநாட்டு எல்லைப் பகுதியில், பதற்றமான … Read more