கேண்டிடேட் செஸ் போட்டி: 11-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி

டொராண்டோ, உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று நேற்று நடந்தது.சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் … Read more

இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு.. உள்ளிருப்பு போராட்டம்: 28 ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது கூகுள்

நியூயார்க்: இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் ராணுவத்துக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் சேவைகளை வழங்குவதற்காக அமேசான் நிறுவனத்துடன், கூகுள் நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது. புராஜெக்ட் நிம்பஸ் என்ற பெயரிலான இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக கூகுள் ஊழியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியூயார்க், சியாட்டில் மற்றும் கலிபோர்னியாவின் சன்னிவேல் ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்றது. நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 … Read more

மேற்குவங்காளத்தில் ராம நவமி ஊர்வலத்தில் கற்கள் வீசி தாக்குதல்: 20 பேர் படுகாயம்

கொல்கத்தா, ராம பிரான் அவதரித்த ராம நவமி விழா நாடுமுழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில், மேற்குவங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி நடத்திய ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கல்வீச்சு சம்பவத்தைத் … Read more

நடப்பு ஐ.பி.எல்.தொடரிலிருந்து கான்வே விலகல்…. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் சி.எஸ்.கே.அணியில் சேர்ப்பு

சென்னை, இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.பி.எல். சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை அணியின் முன்னணி தொடக்க ஆட்டக்காரரான டேவான் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. கால் விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அறுவை சிகிச்சைக்கு பின், தற்போது குணமடைந்து … Read more

75 ஆண்டுகளில் முதன்முறையாக… துபாயில் பெருவெள்ளம்; விமான சேவை தொடர்ந்து பாதிப்பு

துபாய், துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்து உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளது. வீடுகள், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விமான சேவையும் பாதிப்படைந்தது. வாகனங்கள் வழியிலேயே நீரில் மூழ்கின. கார், லாரி உள்ளிட்ட சிறிய பெரிய வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காட்சிகளும் வீடியோவாக வெளிவந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தில் 1949-ம் ஆண்டுக்கு பின்பு, அதிக அளவில் கனமழை பொழிந்துள்ளது என பதிவாகி … Read more

நடத்தையில் சந்தேகம்: கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன்

புதுடெல்லி, டெல்லி துவாரகா பகுதியில் 30 வயது பெண் ஒருவர் தன் 10 மற்றும் 8 வயது மகன்களுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய கணவர் வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூரில் தங்கி விடுவார். இந்த நிலையில் இவருக்கும், உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூரைச் சேர்ந்த 28 வயதான சஞ்சய்சிங் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது திருமணம் தாண்டிய கள்ள உறவுக்கும் வழி வகுத்தது. இதன்பேரில் சஞ்சய்சிங் அடிக்கடி அங்கு வந்து சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் தன்னையே அந்த பெண்ணின் … Read more

ரோகித், கோலி, இல்லை… அந்த 2 வீரர்கள் நன்றாக விளையாடினால் மட்டுமே இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் – மைக்கேல் வாகன்

புதுடெல்லி, 9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடைசியாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின் கடந்த 17 வருடங்களாக டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இந்தியா திணறி வருகிறது. கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான செமி பைனலில் … Read more

2 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் போர்: உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் – 8 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து இன்று 783வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அமெரிக்கா உள்பட மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. அமைதி பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் உடன்படாத நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகணை, டிரோன் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் … Read more

கடவுள் ராமருக்கு சொந்த ஊரில் 500 ஆண்டுகளுக்கு பின் பிறந்த நாள் கொண்டாட்டம்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

நல்பாரி, நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அசாமின் நல்பாரி நகரில் நடந்த பொது பேரணி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். இதனை முன்னிட்டு அசாமுக்கு வருகை தந்த அவரை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா முறைப்படி வரவேற்றார். இதனை தொடர்ந்து பொது கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடும் வெயிலையும் கவனத்தில் கொள்ளாமல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், ஆண், பெண் என பொதுமக்கள் … Read more

டி20 உலகக்கோப்பை; இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு இவர் தான் தகுதியானவர் – ரிக்கி பாண்டிங் கருத்து

மும்பை, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் … Read more