சீனாவுக்கு உளவு வேலை; தைவானில் தந்தை, மகனுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

தைப்பே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி தைவான் நாட்டின் சி.என்.ஏ. என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், இந்த வழக்கு தைவான் ஐகோர்ட்டின் தைனன் பிரிவில் விசாரணைக்கு வந்தது. இதில், இரண்டு பேரின் கடைசி பெயர் ஹுவாங் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் இருவரும் குற்றம் நடந்துள்ளது என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளனர். … Read more

நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தல்: பெண் கொலை வழக்கில் வாலிபர் கைது

பெங்களூரு, பெங்களூருவில், வீட்டில் தனியாக வசித்த 56 வயது பெண் கொலை வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட நேரம் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதால் கொலை செய்ததாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே பத்திரப்பா குடியிருப்பில் வசித்து வந்தவர் ஷோபா(வயது 56). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. தற்போது அவர்கள் அந்த பகுதியில் தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் ஷோபா மட்டும் தனியாக … Read more

ஐ.பி.எல். வரலாற்றில் மோசமான சாதனை பட்டியலில் முதலிடம் பிடித்த மொகித் சர்மா

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 … Read more

விமானத்தில் இருந்து திடீரென வெளியான புகை.. பயணிகள் பீதி

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்திற்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும், இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால் பயணிகளிடையே பீதி ஏற்பட்டது. பயணிகள் அவசரம் அவசரமாக இறங்கினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது. அதில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபின், இறக்கை பகுதியில் இருந்து … Read more

புல்வாமாவில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள் மனைவிகளின் தாலியை பறித்தது யார்?- டிம்பிள் யாதவ் கேள்வி

லக்னோ, புல்வாமா வீரர்களுக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார் என்று பிரதமர் மோடிக்கு சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் டிம்பிள் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் ‘மங்கள்சூத்ரா’ கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் டிம்பிள் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:- புல்வாமாவில் தியாகிகளின் மனைவிகளின் மங்களசூத்திரத்தை பறித்தவர்கள் யார் என்று மங்களசூத்திரம் குறித்து பேசுபவர்கள் பதில் சொல்ல வேண்டும். வீரர்களுக்கு ஏன் விமானம் கொடுக்கவில்லை என்று சொல்ல வேண்டும். கடந்த … Read more

அதிரடியில் மிரட்டிய ரிஷப் பண்ட் , அக்சர் படேல்…டெல்லி அணி 224 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் மெக்கர்க் … Read more

அமெரிக்கா: சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்து – 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆற்றங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினத்தந்தி Related … Read more

சத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்

தன்டேவாடா, சத்தீஷ்காரில் தன்டேவாடா பகுதியில் செயல்பட்டு வந்த நக்சலைட்டுகளில் சிலர் இன்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் முன் நேரில் சரணடைந்தனர். இவர்களில் எச்.பி.எம்.பி. என்ற பிரிவை சேர்ந்த தளபதி ஹித்ம ஓயம் (வயது 34), 3 பெண் நக்சலைட்டுகளான சம்பதி ஓயம் (வயது 23), கங்கி மத்கம் (வயது 28) மற்றும் ஹங்கி ஓயம் (வயது 20) உள்பட 18 பேர் அடங்குவர். இவர்கள் தெற்கு பஸ்டார் நகருக்கு உட்பட்ட பைரம்கார் … Read more

டி20 உலகக்கோப்பை: அவருக்கான விசா மற்றும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன் – சேவாக்

புதுடெல்லி, 10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். முன்னதாக 2020-ல் நடைபெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக 2023 சீசனில் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்த அவர் … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர்.. அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தீவிரமடையும் மாணவர் போராட்டம்

நியூயார்க்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் காசாவில் உள்ள அப்பாவி பாலஸ்தீனர்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், தாக்குதல் நீடிக்கிறது. போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. எனினும், ஹமாசை முற்றிலும் ஒழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தமாட்டோம் என இஸ்ரேல் உறுதியாக உள்ளது. இதனால் காசாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக பாலஸ்தீனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவ்வகையில், அமெரிக்காவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் … Read more