மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் மிசோரமில் தஞ்சம்

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 5,800 பேர் அண்டை மாநிலமான மிசோரமில் தஞ்சமடைந்து உள்ளனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதே, குக்கி சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 3-ம் தேதி அந்த மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டு உள்ளன. ராணுவம், துணை ராணுவம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் 45,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் மீண்டும் … Read more

மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்கிறோம் – மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

மதுரை: திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு ஜனவரியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து கோரிக்கை மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவில், ‘மதுரை தோப்பூர் பகுதியில் அமையும் எய்ம்ஸ் கட்டுமானத்தை தொடங்கி முதற்கட்ட கட்டுமான பணியை விரைந்து முடித்து, 2023 ஆண்டுக்கான 2ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை தொடங்க வேண்டும். வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார். எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் இந்த … Read more

உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவளித்த முஸ்லிம்கள்

புதுடெல்லி: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு முஸ்லிம்களால் பலன் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இவர்கள் தங்கள் வாக்குகளை குறிப்பிட்ட கட்சிக்கு என்றில்லாமல் வேட்பாளர்களை பார்த்து வாக்களித்திருப்பதாகத் தெரிகிறது. உ.பி. உள்ளாட்சி தேர்தல் அதன் சட்டப்பேரவை தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில் பெறும் வெற்றியின் பலன் பலசமயம் அங்கு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் கிடைப்பதுண்டு. இதனால் உ.பி.யில் உள்ள கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை சவாலாக ஏற்று கவனம் செலுத்தி வருகின்றன. இந்தமுறை நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லிம்கள் அனைத்து … Read more

'சாட் லாக்' அம்சத்தை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்: பயனர்கள் சாட்களை லாக் செய்வது எப்படி?

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசஞ்சர் தளத்தில் சாட்களை லாக் செய்யும் ‘லாக் சாட்’ அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தனிப்பட்ட சாட்களை லாக் செய்து கொள்ளலாம். கடந்த மாதம் இது குறித்த தகவல் வெளியான நிலையில் வாட்ஸ்அப் தற்போது இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது … Read more

தி.மலை அருகே பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னைக்கு இன்று (மே 16) இரவு அரசு பேருந்து சென்றது. இதேபோல், சேத்துப்பட்டு பகுதியில் இருந்து போளூர் அடுத்த வசூர் கிராமத்துக்கு கார் ஒன்றும் சென்றது. சேத்துபபட்டு அடுத்த கிழக்கு மேடு கூட்டுச்சாலையில் (போளூர் சாலை) பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் … Read more

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஷாருக் மகனை விடுவிக்க ரூ.25 கோடி: என்சிபி அதிகாரி உட்பட 4 பேர் மீது சிபிஐ வழக்கு

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் பெற்றதாக என்சிபி அதிகாரி சமீர் வான்கடே உட்பட 4 பேர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேரை போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சில … Read more

லாவா அக்னி 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய சந்தையில் லாவா ‘அக்னி 2 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். கடந்த 2021-ல் லாவா அக்னி 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த … Read more

கொடைக்கானல் சுற்றுப் பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி

கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்பினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் சுற்றுப் பயணமாக மே 14-ம் தேதி மாலை கொடைக்கானலுக்கு வருகை தந்தார். கோகினூர் மாளிகையில் மனைவி லட்சுமியுடன் தங்கிய அவர், மே 15-ம் தேதி அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் கொடைக்கானல் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக இன்று … Read more

2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பொறியியல் பல்கலைக்கழகம் (டிஐஏடி), மகாராஷ்டிராவின் புனே நகரில் செயல்படுகிறது. அந்த பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா புனேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசியதாவது: போருக்கான ஆயுதங்கள், தளவாட உற்பத்தியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அறிவியல், … Read more

தமிழகத்தை உலுக்கிய கள்ளச் சாராய மரணங்களும், 5 கேள்விகளும்!

தமிழகத்தில் 2 ஊர்களில் நிகழ்ந்துள்ள கள்ளச் சாராய மரணங்கள் மக்களிடையே பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் என்னும் மீனவக் கிராமத்தில், கள்ளச் சாராயம் அருந்திய 13 பேர் பேர் உயிரிழந்தனர். இதைத் தவிர்த்து செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கிராமங்களில் 5 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தனர். விழுப்புரத்தில் 66 பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் … Read more