கர்நாடக பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தலைவராக யு.டி.காதர் தேர்வு செய்யப்படுள்ளார். கர்நாடகாவில் கடந்த 20-ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து தற்காலிக பேரவைத் தலைவராக ஆர்.வி.தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார். அவரது முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். அதில் பெரும்பாலானோர் கடவுளின் பெயராலும் அரசியலமைப்பு சட்டத்தின் பெயராலும் பதவியேற்றனர். இந்நிலையில் பேரவைத் தலைவர் பதவிக்கு மங்களூரு எம்எல்ஏ யு.டி.காதர் (54) நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக, மஜத தரப்பில் யாரும் வேட்பு … Read more

முதலீட்டாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு – சிங்கப்பூரில் 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து | முழு விவரம்

சென்னை: சிங்கப்பூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் பெரிய அளவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்த மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சென்னையில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கவும் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் நேற்று நடந்த … Read more

சுதந்திரத்தின்போது நேருவுக்கு வழங்கியது | புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சோழர்கால மாதிரி செங்கோல்: அமித் ஷா தகவல்

புதுடெல்லி: சுதந்திரத்தின்போது நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க சோழர்கால மாதிரி செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர நிறுவ உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. இதில் வரலாற்று சிறப்புமிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் மோடி நிறுவ உள்ளார். சுதந்திரத்தின்போது, நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், பிரிட்டிஷ் இந்தியாவின் … Read more

கொடைக்கானலில் கோடை விழா மலர் கண்காட்சி: நாளை  தொடக்கம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி மே 26-ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மே 26-ம் தேதி தொடங்கி ஜூன் 2-ம் தேதி வரை 8 நாட்கள் நடக்க உள்ளது. தோட்டக்கலைத் துறை மூலம் பிரையன்ட் பூங்காவில் 60-வது மலர் கண்காட்சி மே 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, நடவு செய்யப்பட்டுள்ள ஒரு லட்சம் … Read more

வங்கதேசத்தை சேர்ந்த 4 பேர் குஜராத்தில் கைது

அகமதாபாத்: குஜராத் காவல் துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை டிஐஜி தீபன் பத்ரன் நேற்று முன்தினம் கூறியதாவது: அகமதாபாத்தின் ஓதவ் மற்றும் நரோல் பகுதிகளில் போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் முகமது சோஜிப், முன்னா காலித் அன்சாரி, அசாருல் இஸ்லாம் அன்சாரி, மொமினுல் அன்சாரி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம். இவர்கள் நால்வரும் அகமதாபாத்தில் முஸ்லிம் இளைஞர்களை அல்-காய்தா அமைப்பில் சேருமாறு ஊக்குவித்து … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் | கோயில் நிலம் குத்தகை விவகாரம் – செயல் அலுவலருக்கு போலீஸ் நோட்டீஸ்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டியில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது. அந்த நிலத்தை படிக்காசுவைத்தான்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். பன்னீர்செல்வத்தால் நிலங்களை பராமரிக்க முடியாததால், செயல் அலுவலரிடம் தெரிவித்துவிட்டு பழனிச்சாமி என்பவரிடம் குத்தகை உரிமையை வழங்கினார் எனச் சொல்லப்படுகிறது. அதேநேரம், அதே நிலத்தை செயல் அலுவலர் ஜவகரிடம், படிக்காசு வைத்தான்பட்டியில் உள்ள நிலத்தை கிறிஸ்டோபர் என்பவருக்கு குத்தகைக்கு எடுத்தார். கிறிஸ்டோபர் நிலத்தை பராமரிக்க சென்ற … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவிப்பு

புதுடெல்லி: வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் உள்ளிட்ட 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் … Read more

தருமபுரி | பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். பாலக்கோடு வட்டம் மகேந்திரமங்கலம் அடுத்த சிலந்தியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் ஹரீஷ்குமார்(20). இவர் பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இன்று மாலை கல்லூரி முடித்து இருசக்கர வாகனத்தில் ஹரீஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையில் மாங்காய் மண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, … Read more

‘சித்தராமையா 5 ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்’ – அமைச்சரின் பேச்சால் டி.கே.சிவகுமார் அதிருப்தி

பெங்களூரு: கர்நாடகவின் முதல்வராக சித்தராமையாவே 5 ஆண்டுகளுக்கும் நீடிப்பார் என அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேசியதால், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் முதல்வர் பதவியை கைப்பற்ற சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. காங்கிரஸ் மேலிடம் அளித்த ரகசிய வாக்குறுதிகளின் அடிப்படையில் டி.கே.சிவகுமார் துணை முதல்வர் பதவியை ஏற்றார். சித்தராமையா இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவகுமார் இரண்டரை ஆண்டுகளும் முதல்வர் பதவியில் இருப்பார்கள் என தகவல் … Read more

சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவுக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

சிங்கப்பூர்: “லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.05.2023) சிங்கப்பூரில், சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் … Read more