பால ராமர் கோயிலில் 1.5 கோடி பக்தர்கள் தரிசனம்

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமிதீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அயோத்தி ராமர் கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நாள்முதல் இதுவரை 1.5 கோடி பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குழந்தை வடிவில் இருக்கும் பால ராமரை தரிசனம் செய்துள்ளனர். தற்போது கோயிலுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருகின்றனர். … Read more

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-வது இடம்

புதுடெல்லி: அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெச்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ம்ஆண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி பேர்அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33.33 கோடியில் 14 சதவீதம் ஆகும்.மொத்த வெளிநாட்டவர்களில் 53 சதவீதம் அதாவது 2.45 கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்துள்ளது. அமெரிக்க … Read more

சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்ததை 11 ஆண்டுகளுக்கு பிறகு மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும்: ஓபிஎஸ் சகோதரர் தரப்பு வழக்கறிஞர் வாதம்

சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து 11 ஆண்டுகளுக்கு முன்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக தற்போது தாமாக முன்வந்து மறுஆய்வு செய்வதை தவிர்க்க வேண்டும் என ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி சிவகங்கை நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டு அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. … Read more

நாடு முழுவதும் வெப்ப அலை: டெல்லியில் தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

புதுடெல்லி: நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாட்டில் மக்களவை தேர்தல்7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் கடந்த 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்னும்6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் கடும் வெப்பம் தாக்கி வருகிறது. பல இடங்களில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் … Read more

குவைத்தில் முதல்முறையாக இந்தி மொழி வானொலி சேவை

புதுடெல்லி: குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் கூறியிருப்பதாவது. குவைத்தில் முதல்முறையாக இந்தி வானொலி சேவை தொடங்கப்பட்டுள்ளது. குவைத் வானொலியில் எஃப்.எம். 93.3 மற்றும் ஏ.எம். 96.3 ஆகிய அலைவரிசைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப குவைத் தகவல் தொடர்பு அமைச்சகம் முன்னெடுத்த நடவடிக்கையை இந்திய தூதரகம் பாராட்டுகிறது. இதன் பொருட்டு முதல் நிகழ்ச்சி கடந்த 21 ஏப்ரல் அன்று இரவு 8:30 முதல் 9 மணி வரை ஒலி பரப்பு … Read more

நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் பணம் பறிமுதல் செய்த விவகாரம்: அமலாக்கத் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போது, திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து … Read more

முதல்வர் கேஜ்ரிவாலின் உடல்நிலை சீராக உள்ளது: திஹார் சிறை நிர்வாகம் பதில்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம்தேதி முதல்வர் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனிடையே டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி நிருபர்களிடம் கூறும்போது, “கேஜ்ரிவாலின் உடல்நிலையை மோசமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. திஹார் சிறை நிர்வாகம் அவருக்கு இன்சுலின் வழங்கவில்லை. அவர் மாம்பழம் சாப்பிடுவதாக அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் கூறியது பொய். சிறையில் வைத்தே கேஜ்ரிவாலை கொலை … Read more

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் … Read more

24,000 பணிகள் ரத்து: மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் அதிரடி

கொல்கத்தா: மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (West Bengal School Service Commission – WBSCC) அமைக்கப்பட்ட 2016-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் நியமனக் குழு (2016 recruitment panel) செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அந்த நியமனக் குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட 24,000 பேரின் பணிகளும் ரத்தானது. மேற்கு வங்கத்தில் கடந்த 2014 – 2016 … Read more

“மோடி ‘தோல்வி’ பதற்றத்தால் மன்மோகன் சிங் சொன்னதை திரிக்கிறார்” – கே.பாலகிருஷ்ணன்

சென்னை: “மோடி செல்லும் திசையெல்லாம் வாக்காளர்களிடையே பாஜக எதிர்ப்பு அலை, மோடி எதிர்ப்பு அலை பரவலாகியிருப்பதைக் கண்டு குமுறுகிறார். வெறிப்பிடித்தவராக மாறுகிறார். விளைவாகவே, இண்டியா கூட்டணியின் மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீதும் அவர் அவதூறுகளையும் வசைச்சொற்களையும் வாரி இறைக்கிறார். ஆனால், இத்தகைய கடுமையான மதவெறி பிரச்சாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது”, என்று அக்கட்சியின் மாநில செயலாளர் … Read more