யுத்தத்தின் வேதனையை சுட்டும் புகைப்படத்துக்கு 2024-க்கான ‘வேர்ல்ட் பிரஸ் போட்டோ’ விருது!

சென்னை: 2024-ம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை வென்றுள்ளார் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம். இஸ்ரேல் – ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெற்கு காசாவின் கான் யூனிஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள நாசர் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அப்போது பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் … Read more

மலைக் கிராமத்துக்கு கழுதை மீது கொண்டு செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் @ தேன்கனிக்கோட்டை 

ஓசூர்: தேன்கனிக்கோட்டை மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால், கழுதை மீது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட மலைகிராமம் கடமாகுட்டை. இக்கிராமத்தில் 35-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் நாள்தோறும் தங்களது அன்றாட தேவைகளுக்கு மலையில் இருந்து 3.5 கி.மீ கீழே வந்து செல்கின்றனர். சாலை வசதி இல்லாததால் கரடுமுரடான சாலையில் செல்லும் நிலை உள்ளது. இக்கிராமத்தில் உள்ள 90 வாக்காளர்களுக்காக, … Read more

ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் பெண் பணியாளர் தாயகம் திரும்பினார்

புதுடெல்லி: ஈரான் ராவணுவத்தால் கடந்த வாரம் சிறைபிடிக்கப்பட்ட எம்எஸ்சி ஏரீஸ் சரக்கு கப்பலில் இருந்த 17 இந்தியர்களில் ஒருவரான பெண் பணியாளர் ஆன் தேஸ்ஸா ஜோசப் இன்று (ஏப்.18) பாதுகாப்பாக கொச்சி திரும்பியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், எஞ்சிய 16 இந்தியர்களுடன் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட தகவல்: ‘தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஈரான் அரசின் … Read more

கோவையில் பாஜக நிர்வாகியிடம் ரூ.81,000 பறிமுதல்

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பாஜக நிர்வாகியிடம் ரூ.81 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டபோது, சந்தேகத்திக்கிடமான வகையில் நின்ற ஜோதிமணி (37) என்பவரிம் விசாரணை நடத்தினர். அவர் அரசு டிரைவராக பணியாற்றி வருவதும், ஆலந்துறை பகுதியின் பாஜக மண்டல தலைவராக உள்ளதும் தெரியவந்தது. அதன்பின், ஜோதிமணியிடம் இருந்து ரூ.81 ஆயிரத்தை பறிமுதல் … Read more

“ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்!” – இளைஞர்கள் வாக்களிக்க தலைமைத் தேர்தல் ஆணையர் அழைப்பு

புதுடெல்லி: “இந்திய ஜனநாயகத்தின் மிகவும் அழகான அனுபவம் தேர்தல். அதில் வாக்களிப்பது போல எதுவுமே இல்லை” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவம் குறித்து வாக்களர்களுக்கு அவர் நினைவூட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024-ன் முதல்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை தொடங்க இருக்கிறது. அதனை முன்னிட்டு இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வாக்களர்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “நமது மகத்தான ஜனநாயகத்தில் … Read more

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஏப். 21-க்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகளை ஏப்ரல் 21-ம் தேதி மாலை 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு, நடமாடும் மருத்துவ வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகளை வழங்கக் கோரி சிவகங்கை மணிகண்டன், மதுரை ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு … Read more

“இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்?” – மோடியை சாடிய ராகுல் காந்தி @ கேரளா

கோட்டயம் (கேரளா): வேலைவாய்ப்பு சந்தைக்கும் இந்திய இளைஞர்களுக்கும் இடையே நரேந்திர மோடி ஒரு தடையை உருவாக்கியுள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “இந்தியா வல்லரசாகும் என நம்மால் எப்படி பேச முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார். கேரளாவின் கோட்டயத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “சில நாட்களுக்கு முன்பு நான், ஒரு ரயில் நிலையத்தில் சிவில் இன்ஜினியராக இருந்த ஒரு போர்ட்டரைச் சந்தித்தேன். தனியார் கல்லூரியில் லட்சக்கணக்கில் … Read more

ஆலியா பட் முதல் சத்ய நாதெல்லா வரை.. ‘டைம்’ இதழின் சக்திவாய்ந்த 100 நபர்களில் 8 இந்தியர்கள்

‘டைம்’ இதழ் 2024ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம்பெற்று சுவாரஸ்யம் சேர்த்துள்ளனர். உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா, ஒலிம்பிக் பதக்க மங்கை சாக்‌ஷி மாலிக், இண்டோ – பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல், பாலிவுட் நடிகை ஆலியா பட், மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, அமெரிக்க அரசுத் துறை ஊழியர் (US Department of Energy’s Loan Programmes Office director ) ஜிகர் … Read more

மதுரையில் பிள்ளையார் கோயிலில் வழிப்பட்ட பின் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைத்த அதிகாரிகள்!

மதுரை: மதுரையில் பிள்ளையார் கோயிலில் பூஜை செய்து வழிப்பட்ட பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் தளவாட பொருட்களை அதிகாரிகள் ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடக்கிறது. மதுரை மக்களவைத் தொகுதியில் 1,160 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க தேவையான குடிநீர், நிழல் பந்தல் போன்றவை அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள், தளவாட … Read more

102 மக்களவைத் தொகுதிகள், 16.63 கோடி வாக்காளர்கள்… – முதல்கட்ட தேர்தலும், முக்கியத் தகவல்களும்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் 16.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்றும், வாக்களிக்க 1 லட்சத்து 87 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றாலும், 6 மணிக்குள் வாக்குச் சாவடிக்கு வந்தவர்கள் அனைவரும் வாக்களிக்கும் வரை வாக்குப்பதிவு … Read more