‘தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது; சிஏஏ ரத்து செய்யப்படாது’ – அமித் ஷா

ராய்ப்பூர்: எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது, சிஏஏ ரத்து செய்யப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அவர் இதனை தெரிவித்தார். “நாட்டின் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் மற்றும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேசி வருகின்றனர். பாஜக அரசு சிஏஏ சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற … Read more

“வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசல் உத்தரவாதம்” – ராஜஸ்தான் பேச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானது. மிகவும் வருத்தத்துக்கு உரியது. தனது தோல்விகளுக்கு எதிரான மக்களின் கோபத்துக்கு அஞ்சி, மத உணர்ச்சிகளைத் தூண்டி, வெறுப்புப் பேச்சின் மூலம் தாம் எதிர்கொண்டுள்ள தோல்வியைத் தவிர்க்கப் பார்க்கிறார் மோடி. வெறுப்பும் பாகுபாடும்தான் மோடியின் அசலான உத்தரவாதங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடியின் நச்சுப் பேச்சு இழிவானதும், மிகவும் … Read more

“மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் கண்ணியம் குறைந்ததில்லை” – ‘சொத்து’ பேச்சு மீது கார்கே சாடல்

புதுடெல்லி: “இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாக்கப் போவதில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் பிரதமர் மோடி கண்டித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “மோடியின் பீதி நிறைந்த பேச்சு, முதல்கட்ட தேர்தல் முடிவுகளில் இண்டியா கூட்டணி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டுகிறது. மோடி பேசியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, … Read more

வட தமிழக உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை!

சென்னை: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை … Read more

குஜராத்தின் சூரத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். அதே தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த நிலேஷ் கும்பானி என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த சுயேச்சைகள் உள்பட 8 வேட்பாளர்களும் மனுவை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து, முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து குஜராத் பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தனது எக்ஸ் தள பதிவில், “முகேஷ் … Read more

“கஞ்சா தலைநகரமாக மாறி இருக்கிறது தமிழகம்” – குற்ற நிகழ்வுகளை அடுக்கிய அண்ணாமலை

சென்னை: “தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள், காவல் துறையினரைத் தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள், கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியது, இன்று, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரைத் தாக்கிய நபர் … Read more

ஏப்.26 இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் நாளில் பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது: ஐஎம்டி

புது டெல்லி: மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது பெரிய அளவில் வெப்ப அலை நிலவாது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் தெரிவித்துள்ளார். 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வானிலை நிலவரம் இயல்பாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டின் சில பகுதிகளில் இயல்பான வெப்பநிலை மற்றும் வெப்ப … Read more

திருப்பூரில் பெண்ணை தாக்கிய வழக்கில் பாஜகவினருக்கு முன்ஜாமீன் மறுப்பு

திருப்பூர்: வாக்குசேகரிப்பின் போது ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பிய பெண் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில் பாஜகவினரின் முன்ஜாமீன் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.பி.முருகானந்ததுக்கு ஆதரவு கோரி, திருப்பூர் அனுப்பர்பாளையம் ஆத்துப்பாளையத்தில் கடந்த 11-ம் தேதி வாக்கு சேகரிப்பு பணியில் பாஜகவினர் ஈடுபட்டிருந்தனர். அதே பகுதியில் கடை நடத்தி வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா (37) துணிக்கடை மற்றும் தையல் … Read more

“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு” – மம்தா பானர்ஜி

கொல்கத்தா: “இண்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம்” என மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் என்ற இடத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பேரணி நடந்தது. இதில் பங்கேற்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு … Read more

“தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பாஜக தலைவர்கள்” – முத்தரசன் காட்டம்

சென்னை: “இண்டியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். பாஜக தலைவர்களின் பொறுப்பற்ற, தரம் தாழ்த்த பேச்சுக்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவைத் தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு பாஜகவும், அதன் கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணி நாளொரு மேனியும், … Read more