‘ரோடு ஷோ’ உடன் சேலத்தில் பிரச்சாரத்தை நிறைவு செய்த இபிஎஸ்

சேலம்: சேலத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, வழிநெடுகிலும் அதிமுகவினர் தூவிய மலர்களில் நனைந்தபடியே, மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி வந்து, மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பிரச்சாரத்தின் நிறைவாக அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருவதால், தமிழக மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார். தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர், சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரம், இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், அதிமுக … Read more

தேர்தல் பத்திரம் குறித்த ட்வீட்டை தேர்தல் ஆணையம் நீக்க சொன்னது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட பதிவினை நீக்கும் முடிவை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது ஏன் என புதன்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த பிரச்சினைகள் அரசு தரப்பை தர்ம சங்கடத்துக்கு ஆழ்த்தியது தான் காரணமா என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோரது எக்ஸ் தள பதிவுகளை தேர்தல் ஆணையம் … Read more

 “குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை; உழைக்க வந்திருக்கிறோம்”  – விஜயபிரபாகரன் பேச்சு @ விருதுநகர்

விருதுநகர்: “குடும்பத்துடன் பிழைக்க வரவில்லை. மக்களுக்கு உழைக்க வந்திருக்கிறோம்” என, விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உருக்கமாக பேசினார். விருதுநகர் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் வாசல் வரை பேரணியாக வந்து கோயில் முன்பு இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். முன்னதாக பேரணியின் போது கொட்டுமுரசு அடித்துக்கொண்டே வாக்கு சேகரித்தார். தொடர்ந்து விஜயபிரபாகரனுக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. … Read more

சிஏஏ ரத்து முதல் 10 இலவச சிலிண்டர்கள் வரை: திரிணமூல் காங். தேர்தல் அறிக்கை அம்சங்கள்

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. அக்கட்சியினர் தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, “பாஜக ஜமீன்தார்களை தூக்கி எறிந்துவிட்டு, அனைவருக்குமான கண்ணியமான வாழ்க்கைக்கு வழி வகுப்போம்” என்று முழங்கினர். திரிணமூல் காங்கிரஸின் முக்கிய வாக்குறுதிகள்: வேலை அட்டை வைத்திருப்பவர்களுக்கு 100 நாள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் அனைத்து தொழிலாளர்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.400 பெறுவார்கள். அனைத்து ஏழைக் … Read more

துபாய் பெருமழைக்கு ‘மேக விதைப்பு’ காரணமா? – ஒரு தெளிவுப் பார்வை

காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மேக வெடிப்பு சமீப காலங்களாக அனைவருக்கும் பரிச்சயமான ஒரு பதமாகிவிட்டது. அதேபோல் ‘மேக விதைப்பு’ பற்றியும், அதன் எதிர்மறை விளைவுகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள பெய்யென பெய்துள்ளது துபாய் பெருமழை. உலகின் மிக வெப்பமான, வறட்சியான பகுதிகளில் ஒன்று யுஏஇ என்ற ஐக்கிய அரபு அமீரகம். கோடையில் அங்கே 50 டிகிரி வெயில் அடிப்பது இயல்பு. ஆண்டு சராசரி மழையளவே 200 மில்லிமீட்டருக்கும் குறைவுதான். ஆனால், அந்த நாட்டின் பிரம்மாண்ட நகரமான துபாயில் நேற்று … Read more

விவோ T3x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ டி3x 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். மூன்று விதமான வேரியன்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் … Read more

பாமக வேட்பாளர் திலகபாமா போராட்டம்

திண்டுக்கல்: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா பரப்புரை மேற்கொண்ட போது கள்ளத்தனமாக திண்டுக்கல் புறவழிச்சாலையில் மது விற்பனை செய்த குடோனை சிறை பிடித்து தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுதினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொண்ட போது … Read more

பாஜகவின் ‘விங்’ ஆக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் விரிவாக்கப்பட்ட அங்கம் (Wing) ஆக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தேர்தெடுக்கப்பட்ட பதிவுகளை நீக்குமாறு எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி இவ்வாறு தெரிவித்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, என்.சந்திரபாபு நாயுடு மற்றும் பிஹார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி ஆகியோர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில … Read more

உணவு ஊட்டப்படாமல் இறந்த பச்சிளம் குழந்தை: மூடநம்பிக்கையை பின்பற்றிய தந்தைக்கு சிறை @ ரஷ்யா

மாஸ்கோ: சூரிய ஒளியே குழந்தைக்கு உணவளிக்கும் என்று சொல்லி, தன்னுடைய ஒரு மாதக் குழந்தைக்கு உணவு ஏதும் கொடுக்காமல் கொன்ற ரஷ்யாவைச் சேர்ந்த வீகன் இன்ஃப்ளுயென்ஸரான மாக்சிம் லியுட்டி என்பவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் வைத்திருந்தால் `சூப்பர் ஹியூமன் பவர்’ கிடைக்கும் என்ற மூடநம்பிக்கையில் காஸ்மோஸ் என்ற தன் ஒரு மாத ஆண் குழந்தையை வெயிலில் வைத்திருக்கிறார் மாக்சிம் லியுட்டி. அத்துடன் சூரிய ஒளி குழந்தைக்கு உணவளிக்கும் என்று கூறி, குழந்தைக்கு … Read more

செந்தில் பாலாஜியை ஏப்.22-ல் நேரில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரிமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, இருதரப்பிலும் … Read more