13 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 31-ம் தேதி தேர்தல் அறிவிப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் காலியாகும் 13 இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் மாநிலங்களவையின் 5 இடங்களும் கேரளாவில் 3, அசாமில் 2, இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 என 6 மாநிலங்களில் உள்ள 13 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது. இந்த இடங்களுக்கு வரும் 31-ம் தேதி தேர்தல்கள் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. காங்கிரஸைச் சேர்ந்த மூத்த … Read more

'உங்கள் பணியைப் பார்த்து தான் எனக்கு இந்த வேகம்' – ஷைலஜா டீச்சரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திமுக மக்களவை எம்பி கனிமொழியுடன், கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதேவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின், சைலஜா டீச்சரை வெகுவாக பாராட்டி பேசினார். அதில், “மகளிர் சகோதரிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய ஷைலஜா டீச்சர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஷைலஜா டீச்சர், பொதுவுடைமைக் கருத்தியலால் … Read more

பிரதமர் மோடியை சந்தித்த பிரமோத் சாவந்த்:  பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதி 

புதுடெல்லி: கோவா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடியை சந்தித்த பின்பு அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் உறுதிப்படத் தெரிவித்துள்ளார். கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும். எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. … Read more

முதல் வேளாண் பட்ஜெட்டின் 26 அறிவிப்புகளை செயல்படுத்தவில்லையா? – பாமகவுக்கு தமிழக அரசு மறுப்பு

சென்னை: ’2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்த அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என்ற பாமகவின் வேளாண் நிழல் நிதி அறிக்கைக்கு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அந்த அறிவிப்புகளின் தற்போதைய நிலையையும் அவர் விவரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என … Read more

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சர்வதேச விமான சேவை மார்ச் 27-ல் தொடக்கம்

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத்திற்கு பின்பு, இரண்டு ஆண்டுகள் கழித்து மார்ச் 27-ம் தேதியிலிருந்து சர்வதேச விமான சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதற்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் கரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் பாதிப்புக்குள்ளாக்கியது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் நாடு … Read more

'அவன் புன்னகையால் வென்றான்' – உக்ரைனில் இருந்து தனியாக 1,400 கி.மீ பயணித்த 11 வயது 'உத்வேக' சிறுவன்!

தன் கைகள்மீது தாயால் எழுதப்பட்ட கடிதம் அழியாமல் கவனித்துக் கொண்டு, யுத்த பூமியில் தன்னந்தனியாக 1,400 கிலோமீட்டர் தூரம் பயணித்து உக்ரைன் எல்லையையைக் கடந்து ஸ்லோவாகியாவை அடைந்திருக்கும் 11 வயது சிறுவனின் உத்வேகம், உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13-வது நாளாகத் தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் … Read more

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு மார்ச் 21-ல் ஆஜராக ஓபிஎஸ், இளவரசிக்கு சம்மன்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 21-ல் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது. சசிகலா தரப்பில் இரண்டாவது நாளாக நடந்த குறுக்கு விசாரணையின்போது, அப்போலோ மருத்துவமனையின் 3 மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். … Read more

உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெற வாய்ப்பு; எந்தெந்த துறைகள்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: உலக அளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியா இடம் பெறுவதற்கு உரிய வழிமுறைகள் உள்ளன என்றும் அது எந்தெந்த துறை என்றும் பிரதமர் மோடி கூறினார். வளர்ச்சிக்கான நிதி மற்றும் வளர விரும்பும் பொருளாதாரம்’ என்ற பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நூற்றாண்டுக்கு ஒருமுறை பாதிக்கும் பெருந்தொற்றுக்கு பின்னர் இந்திய பொருளாதாரம் மீண்டும் வேகமடைந்துள்ளது. இது நமது பொருளாதார முடிவுகள் மற்றும் பொருளாதாரத்தின் வலுவான … Read more

'போரில் கொல்லப்பட்ட ரஷ்யாவின் 2-வது ராணுவ ஜெனரல்' – 13 நாட்களாக உக்ரைன் தாக்குப்பிடிக்க 5 காரணங்கள்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் இன்று 13-வது நாளை அடைந்துள்ளது. இந்நிலையில், உக்ரைன் சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தாக்குதலில் 2-வது ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டதாக அந்நாட்டு உளவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்ட உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுப் பிரிவு, ’ரஷ்யாவின் மேஜர் ஜெனரல் விடாலில் கெராஸிமோவ் உக்ரைனின் கார்கிவ் நகரில் வீழ்த்தப்பட்டார். இவர் ரஷ்யாவின் 41-வது படைப்பிரிவின் தலைவராக இருந்தார். அவருடன் இன்னும் சில மூத்த அதிகாரிகளும் … Read more

மேலூர் மாணவியின் தாயாருக்கு இழப்பீடும், வேலையும் அரசு வழங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மேலூர் அருகே தும்பைப்பட்டி மாணவியின் தாயாருக்கு அரசு இழப்பீடும், வேலையும் வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மதுரை மாவட்டம். தும்பைப்பட்டியில் வசித்து வரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி சபரி (40) தேநீர் கடை நடத்தி வரும் ஆதரவற்றவர். இவர் மனநிலை பாதிக்கப்பட்ட கணவரையும், இரு குழந்தைகளையும் பாதுகாத்து வருகிறார். இவரது மகள் 17 வயது சிறுமியை, கடந்த 14. 02.2022ஆம் … Read more