இரண்டு ஆண்டுகளாக தொற்றிலிருந்து தப்பித்த நாட்டையும் தாக்கியது கரோனா!

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கரோனாவின் கோரத் தாக்குதலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நாடுகள் தப்பித்து இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம், பசிபிக் நாடுகளில் ஒன்றான கிரிபாட்டி தனது எல்லையை இரண்டு ஆண்டுகள் மூடியதால் கரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், இந்த சாதனை நீடிக்கவில்லை. கிரிபாட்டியில் தற்போது கரோனா பரவத் … Read more

மக்களின் வறுமையை தேர்தலில் சாதகமாக பயன்படுத்துகின்றனர்: பிரேமலதா விஜயகாந்த் தாக்கு

“சட்டப்பேரவை தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குளைப் பெற்று ஏமாற்றிவிட்டனர்” என திமுக மீது தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். கோவையில் தேமுதிக சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து குறிச்சி பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் பேசியது: “கோவையில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய அமைச்சரும் ரூ.2 ஆயிரம், ரூ.4 ஆயிரம் என பணத்தை வழங்குவதில்தான் போட்டிபோட்டு வருகின்றனர். மக்களுக்கோ, கோவைக்கோ ஏதேனும் நல்லது செய்வார்களா என்று சிந்தித்தால், … Read more

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்; 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே பயணம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

இருசக்கர வாகன பயணத்தில் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படுகின்றன. இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர் களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய, … Read more

புதிய வகை கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ – மனிதர்களுக்கு பரவக்கூடும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பெய்ஜிங்: புதிய கரோனா வைரஸ் ‘நியோகோவ்’, மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1920-களில் விலங்குகள், பறவைகளிடம் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘சார்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவியது. அதற்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் … Read more

உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நகைக்கடன் ரத்து செய்துவிட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி’ என்று நகர்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னதான் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் … Read more

சீன தொலைத்தொடர்பு நிறுவனம் ஹூவாய் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை

புதுடெல்லி: சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய்க்கு சொந்தமாக இந்தியாவில் உள்ள அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, குருகிராம், பெங்களூருவில் உள்ள அலுவலகங்களில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று முதல் சோதனை நடந்து வருகிறது. நிதி ஆவணங்கள், வரவு செலவு புத்தகங்கள், ஹூவாயின் இந்திய வணிகம், பணப்பரிமாற்றம் குறித்த ஆவணங்கள் குறித்து சோதனை நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நடக்கும் சோதனை குறித்து ஹூவாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ‘‘வருமான வரித்துறை அதிகாரிகள் … Read more

கனடா – அமெரிக்கா எல்லை அருகே பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்

நியூயார்க்: கனடா – அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்கா – கனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வித்தியாசமான வாக்குறுதிகளால் கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிரச்சாரத்தில் முக்கியக் கட்சிகளுக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் வித்தியாசமான பாணியில் பிரச்சாரம் செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி 104வது வார்டான திருமங்கலம் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல். அப்துல் ஜலீல் அந்த பகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், தனது சின்னமான பூப்பந்து மட்டை சின்னத்தை மக்கள் மத்தியில் பதியவைப்பதற்கு புதிய பாணிகளை கையாண்டு வருகிறார். … Read more

குடுச்சி மூலிகையால் கல்லீரல் பாதிக்கும் என்பது தவறானது: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: ‘ஜிலோய் / குடுச்சி மூலிகை கல்லீரலைப் பாதிக்கும் என ஊடகங்களில் சில பிரிவினர் மீண்டும் தவறான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஜிலோய் / குடுச்சி மூலிகை பாதுகாப்பானது, தற்போது கிடைக்கும் தரவுகளின்படி குடுச்சி எந்தவித நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தாதது’ என்று ஆயுஷ் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”ஆயுர்வேதத்தில் குடுச்சியானது புத்துணர்ச்சிக்கு சிறந்த மூலிகை என கூறப்படுகிறது. எந்தவித நச்சுப் பாதிப்பும் ஏற்படுவதில்லையென்று குடுச்சியின் சாறு தொடர்பான ஆய்வு அறிக்கையில் … Read more

NeoCov வைரஸ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலா?- உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

ஜெனீவா: சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து குறிப்பிட்டுள்ள ‘நியோகோவ்’ என்ற வைரஸ் மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. சீனாவின் வூஹான் வைராலஜி ஆய்வகம் மற்றும் சீன அறிவியல் அகாடமி விஞ்ஞானிகள், கரோனா குடும்பத்தைச் சேர்ந்த ‘நியோகோவ்’ என்ற வைரஸ் குறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை https://www.biorxiv.org/அறிவியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘வவ்வால்களிடம் நியோகோவ் என்ற கரோனா வைரஸ் காணப்படுகிறது. நியோகோவ் வைரஸில் ஒரு மரபணு … Read more