மேகதாது அணையைக் கட்ட கர்நாடக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு : தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு மேகதாது அணைக் கட்டுமானத்துக்குக் கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது.  இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் வரத்து மிகவும் பாதிப்படையும் என்பதால் தமிழக அரசு இதை எதிர்த்து வருகிறது.  இது குறித்துப் பல முறை மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.   ஆயினும் … Read more

கொரோனா பரவல் குறைவால் வழக்கமான செயல்பாடுகளைத் தொடங்கலாம் : மத்திய அரசு

டில்லி நாடெங்கும் கொரோனா ப்ரவல் வெகுவாக குறைந்துள்ளதால் வழக்கமான செயல்பாடுகள் அனைத்தையும் தொடங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியது.  அது இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டை நெருங்கி உள்ளது.  இதுவரை மூன்று அலை பரவல் நடந்துள்ளது.   கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்துள்ளது.  குறிப்பாக இரண்டாம் அலையை விட மூன்றாம் அலையில் பாதிப்பு விரைவில் … Read more

கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல! திமுக மீது சாடிய சிபிஎம் பாலகிருஷ்ணன்…

சென்னை: பதவி வெறியால் திமுகவினர், கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானது அல்ல என திமுக மீது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர்  கே பாலகிருஷ்ணன் கொந்தளித்துள்ளார். இன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தலைமை பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வினர் போட்டியிட்டு, அவர்களின் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை திமுக தலைமை மீறி, மாவட்ட திமுகவினர்  தட்டிப் … Read more

கூட்டணி தர்மம் மீறல்: திருமாவளவன் கொந்தளிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள சேர்மன் பதவிகளில் கூட்டணி தர்மத்துக்கு எதிராக, திமுகவினர் போட்டியிட்டு  வெற்றி பெற்றுள்ளது. இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, கட்சி முன்னணி தலைவர்களுடன் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி, நகராட்சி, பேருராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள் பதவிகளில் … Read more

நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் 78.1% பேர் இரு தவணை தடுப்பூசிகளும் போட்டுள்ளார்கள் என்றும், தடுப்பூசியால் மட்டுமே கொரோனா 3வது அலையின் தாக்கத்தை தடுக்க முடிந்தது என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டு ஆண்டுகளை கடந்தும் இன்னமும் மிரட்டி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனா தொற்றின் தாக்குதலில் இருந்து தப்பி உள்ளனர். இதனால் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என … Read more

தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீர் விலை உயர்வு – இன்றே அமல்!

சென்னை: தமிழக அரசின் ஆவின் உணவுப்பொருட்கள் திடீரென்று விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்றுமுதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், பால் விலை உயர்த்தப்படவில்லை என்பத சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது. தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி உள்ளிட்ட தமிழக அரசின் ஆவின் பொருட்களின் விலை இன்று முதல் உயர்கிறது என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, நெய், … Read more

சென்னை மேயராக பதவி ஏற்றார் இளம்பெண் பிரியா… ! அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்நேரில் வாழ்த்து…

சென்னை: சென்னை மாநகராட்சி  மேயராக முதுகலை பட்டதாரியான 28வயது இளம்பெண் பிரியா பதவி ஏற்றார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, மேயர் பிரியாவுக்க  அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன்நேரில் வாழ்த்து தெரிவித்த துடன், அவரை மேயருக்கான இருக்கையில் அமர வைத்தனர். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று மேயர், துணைமேயர் உள்பட நகராட்சி, பேருராட்சி தலைமைப் பதவிகளுக்கான மறைமுகத் … Read more

ஆவடி மேயராகும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த உதயகுமார்

சென்னை ஏழைக்குடும்பத்தை சேர்ந்த திமுக உறுப்பினர் உதயகுமார் ஆவடி மாநகராட்சி மேயர் ஆகிறார்.   சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் ஜி உதயகுமார் ஆவடி 9 ஆம் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.  இவர் திமுக வட்டச் செயலாளராக உள்ளார்.  இவர் திருமுல்லைவாயில் காலனி திருவள்ளுவர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது தந்தை குணசேகரன் பாதுகாப்புத்துறை ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.  இவரது மனைவி விநாயகி.  இவர்களுக்கு … Read more

ஐக்கிய அரபு நாடுகள் விஜய் சேதுபதிக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது

விஜய் சேதுபதிக்கு ஐக்கிய அரபு நாடுகள் கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், த்ரிஷா, பார்த்திபன், அமலா பால் உள்ளிட்ட நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கவும், வேலை செய்யவும் அல்லது 100 சதவீத முதலீட்டுடன் தொழில் செய்யவும் முடியும். இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இந்தியாவில் பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் வழங்கப்பட்டிருக்கும் இந்த கோல்டன் விசாவை விஜய் சேதுபதியிடம் அந்நாட்டு அதிகாரிகள் இன்று … Read more

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

செங்கல்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான நில அபகரிப்பு வழக்கில் அவரது ஜாமீன் மனு  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.  அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக தொண்டர் ஒருவரைக் கள்ள ஓட்டு போட முயன்றதாகக் கூறி அவரை தாக்கி அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இது குறித்து தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சை எழுந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் … Read more