தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 15/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,325 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 85,969 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,34,77,508 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,325பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,39,221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,946 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 5,894 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,69,907 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

இலங்கை – இந்தியா கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது

புனே இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி அட்டவணை மாற்றப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணியுடன் கிரிக்கெட் போட்டியில்  கலந்துக் கொள்ள உள்ளது.   முன்பு இந்தியா மற்றும் இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது, பிப்ரவரி 25ந்தேதி பெங்களூருவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.  டி20 போட்டியானது, வருகிற மார்ச் 13ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பிசிசிஐ வெளியிட்டுள்ளது.   இந்த மாற்றத்தின்படி,  3 போட்டிகள் … Read more

மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள்! பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தில் பிரியங்கா காந்தி

சண்டிகர்: பஞ்சாப் சட்டமன்ற தேர்தலையொட்டி, மாநில காங்கிரஸ் முதல்வர் சன்னியுடன்  காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிரமாக வாக்கு வேட்டை நடத்தி வருகிறார். அப்போது, மேடையில் தலைப்பாகை அணிவதால் யாரும் சர்தார் ஆக மாட்டார்கள் என்று பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். 117 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் வரும்20ம் தேதி நடைபெற உள்ளது. இதன்காரணமாக தேர்தல் பிரசாரம் 18ந்தேதி மாலையுடன் ஓய்வு பெறுகிறது. அங்கு ஆட்சியை … Read more

முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்

“தற்போதைய சூழ்நிலையில் எனது கண்ணியத்திற்கு ஏற்ப கட்சிக்கு வெளியில் இருந்து செயலாற்றுவதே சிறந்தது என முடிவுக்கு வந்துள்ளேன்” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் கடிதம் எழுதியுள்ளார். 2012-2013ல் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராகப் பணியாற்றிய அஸ்வனி குமார், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடனான தனது 46 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவர் சோனியா … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வங்கிகளுக்கு 19ந்தேதி விடுமுறை அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு வரும் 19ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இதுகுறித்து, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் , பேரூராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு , வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது . வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக , தேர்தல் நடைபெறும் பகுதிகளில் , … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! மாவட்ட கலெக்டர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டு களுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள்  பிப்ரவரி 17 … Read more

மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமான வார்டனை சிறைவாசலில் வரவேற்ற திருச்சி எம்எல்ஏ…! மீண்டும் சர்ச்சை…

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் நேற்று வெளியே வந்த வார்டன் சகாயமேரிiய சிறை வாசலுக்கு சென்று திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வார்டன் சகாய மேரியை சிறை வாசலில் வரவேற்ற காங். எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஏற்கனவே மாணவியின் தற்கொலை வழக்கில், திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும், காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாக பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்ததால், வழக்கை … Read more

யாருக்கும் சட்டசபையை முடக்கும் அதிகாரம் கிடையாது : ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சட்டசபையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.   மேற்கு வங்க ஆளுநர் சமீபத்தில் அம்மாநிலச் சட்டசபையை திடீரென முடக்கி வைத்து உத்தரவிட்டார்.    ஏற்கனவே அவருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நடக்கும் பனிப்போரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.   இதற்கு எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் விரைவில் தமிழக சட்டசபையை … Read more

இந்திய பங்குச் சந்தையில் சித்ராவும் சித்த புருஷரும் நடத்திய சித்து விளையாட்டு…

4 ட்ரில்லியன் டாலர் வர்த்தகத்தை கட்டுப்படுத்தக் கூடிய தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான சித்ரா ராமகிருஷ்ணன் தனக்கு பரிச்சயமே இல்லாத முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் வந்த ஈ-மெயில் உத்தரவுகள் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) நடத்திய விசாரணையின் அறிக்கை வெள்ளியன்று வெளியான நிலையில், இன்றைய பங்குவர்த்தகத்தில் இது எதிரொலித்தது. நிதி … Read more

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கட் நேரடி விநியோகம்

திருப்பதி நாளை முதல் திருப்பதியில் தினமும் 10,000 இலவச தரிசன டிக்கட்டுகள் நேரடியாக விநியோகம் செய்யப்படுகிறது. file pic திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.  இவை அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆனால் டிக்கெட் வெளியிட்ட 10 நிமிடங்களில் ஒரு மாதத்திற்கு உண்டான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகின்றன.  பல … Read more