மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கபட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது. சுமார் இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கனமழை பெய்து வருவ்துடன் இடி, மின்னல் ஆகியவையும் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையம் ஐக்கிய … Read more

கக்கன் படப்புகழ் இளம் இசையமைப்பாளர் மரணம்

சென்னை கக்கன் படப்புகழ் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம் அடைந்துள்ளார். இளம் இசையமைப்பாலர் பிரவீன் குமார் இராக்கதன், மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.. அவருக்கு வயது 28. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரவீன்குமார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில்  அவசர சிகிச்சைக்காக நேற்று மதியம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த பிரவீன்குமார் இன்று அதிகாலை சிகிச்சை … Read more

ஹேமந்த் சோரனின் சகோதரி ஒடிசாவில் போட்டி

மயூர்பஞ்ச் ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி போட்டியிடுகிறார். ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரி அஞ்சனி ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அஞ்சனிக்கு எதிராக பிஜு ஜனதா தளத்தின் சுதம் மார்ண்டி, பாஜகவின் நபா சரண் மாஜி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மயூர்பஞ்ச் தொகுதியில் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அஞ்சனி 11.78 சதவிகித … Read more

கோடை விடுமுறையை ரத்து செய்து விட்டு முன்கூட்டியே சென்னை திரும்புகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் 6 நாள் சுற்றுலா சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், தனது விடுமுறை பயணத்தை ரத்து செய்துவிட்டு முன்கூட்டியே சென்னை திரும்புகிறார். அதிகரித்து வரும் வாகன நெரிசல்,  காட்டுத்தீ மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அவரது கொடைக்கானல் ஓய்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. நடப்பாண்டு கொளுத்தும் வெயில் காரணமாக கோடை வாசஸ்தலமான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுகிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு குளுகுளு சூழல் நிலவவில்லை. குறிப்பாக நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் வெயில் வாட்டி வருவதால், … Read more

ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம்! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதம்…

சென்னை: சென்னையில் செயல்பாட்டில் உள்ள மெட்ரோ ரயிலில்,  ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என  சென்னை மெட்ரோ  ரயில் நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்து உள்ளது. சென்னை மக்களிடையே பெரும் வரவற்பை பெற்றுள்ளது மெட்ரோ ரயில்.  மேலும் குளு வசதியுடன் பாதுகாப்பான மற்றும் விரைவான  வசதியை வழங்கி வருகிறது. அதனால் சென்னை மக்களுக்கு மெட்ரோ ரயில் சேவை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதையடுத்து, , மெட்ரோ ரயில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. பூந்தமல்லி முதல், … Read more

‘இது தவறு’: 2G வழக்கின் தீர்ப்பை தெளிவுபடுத்தக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!

டெல்லி: 2G அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.  2G தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில் தீர்ப்பையே மாற்ற வேண்டும் என மத்திய அரசு கோருவதாகவும், இது தவறான கருத்து என கூறி  உச்சநீதிமன்ற பதிவாளர் மனுவை நிராகரித்துள்ளார். ஏற்கனவே 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து சிறப்பு நீதிமன்றத்தால்,  ஆ.ராஜா, கனிமொழி உள்பட சிலர்  விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி … Read more

தொடரும் அவலம்: மாநகர பேருந்தின் கதவு கழன்று விழுந்து பெண் காயம்! இது சென்னை சம்பவம்…

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மாநகர பேருந்தின் கதவு கழன்று விழுந்த விபத்தில், பேருந்துக்காக  காத்திருந்த பெண் பயணி காயமடைந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ‘சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 70ஏ வழித்தட எண் கொண்ட பேருந்து ஆவடி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து  திருமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, பேருந்துக்காக காத்திருந்த … Read more

தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது,  எழும்பூர் வழியாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக  தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. சிறப்பு ரயில் 1 வண்டி எண் 06089 தாம்பரம் – சந்த்ராகச்சி வாராந்திர சிறப்பு ரயில், மே 8, 15, 22, 29ம் … Read more

தேர்தல் பரப்புரை செய்ய முன்னாள் முதல்வருக்கு 48 மணி நேரம் தடை விதிப்பு

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய  தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.  இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற்று  ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் … Read more

மதுரை காமராஜர் பலகலைக்கழக துணை வேந்தர் திடீர் பதவி விலகல்

மதுரை நேற்று மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் குமார் திடீரென ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட எம்.கிருஷ்ணன், பணிக்காலம் முடியும் முன்பே திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இதையொட்டி மதுரை காமராஜர் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெ.குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். குமாருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இவர் பொறுப்பேற்ற … Read more