லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக வெப்பம் பதிவு..!

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.  தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு,  படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர்.  Source link

திடீரென உடைந்த ஸ்டியரிங் ராடு… அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்… அப்பளம் போல் நொறுங்கிய அரசுப் பேருந்து..!

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் ராடு திடீரென உடைந்ததால், எதிரே வந்த தனியார் பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. சிதம்பரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும், கும்பகோணம் நோக்கி வந்த அரசுப் பேருந்தும் சேத்தியாத்தோப்பு அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அரசுப் பேருந்தின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியதில் ஓட்டுநருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 9 பேர் லேசான காயமுற்றனர்.  அரசுப் பேருந்தின் ஸ்டியரிங் ராடு … Read more

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை.. 25 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள 4 மாவட்டங்களில் சனிக்கிழமையன்று அதி கனமழை பெய்தது. இதில் பல வீடுகள் இடிந்து சேதமடைந்ததில், 25 பேர் பலியானதோடு, 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரபிக்கடல் பகுதியில் இருந்து “பிபர்ஜாய் புயல்” நெருங்கி வருவதால், நாட்டின் தெற்கு பகுதிகளில் அவசரகால நடவடிக்கைகளை துரிதப்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். … Read more

ஒத்தைக்கு ஒத்தை வர்ரீயா..! பஜாரை தெறிக்க விட்ட ராவான ரவுடிகள்…!!!

நாங்கெல்லாம் ராவான ரவுடிகள் என்பது போல கேரளாவின் கோழிக்கோட்டில் சாலையில் குத்துச்சண்டை போட்டவர்களை போலீஸார் கொத்தாக பிடித்து தூக்கிச் சென்றனர். மதுபோதையில் சாலையில் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு மல்லுக்கட்டும் இவர்கள் தான் ரம்சாத், ரஷீத். கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஊராட்சி உண்டு நகரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரை நிர்வாணத்துடன் ஒருவர் சண்டைக்கு துள்ளிக் குதித்து தயாராகிறார். கலர்வேஷ்டி சட்டையில் களமிறங்கும் மற்றொருவர் களத்தில் இறங்கும் போதே எதிராளி விடும் குத்தை லாவகமாக … Read more

கோயில் திருவிழாவின் போது இருதரப்பினர் இடையே வழிவிடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது..!

திண்டிவனம் அருகே கோயில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தின் போது வழி விடுவது தொடர்பாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. பழமுக்கல் பகுதியில் உள்ள ஸ்ரீ ஆயியம்மன் ஆலய கூழ் வார்த்தல் திருவிழாவையொட்டி, முக்கிய வீதிகள் வழியாக நேற்று அம்மனை ஊர்வலமாக கிராம மக்கள் எடுத்துச்சென்றுள்ளனர். அப்போது (நல்லாளம் கிராமத்தை சேர்ந்த) இளைஞர் ஒருவர்  ஊர்வலம் சென்ற இளைஞர்களிடம் வழி விடுமாறு கூறியதாகவும், இதனையடுத்து அவரை இளைஞர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தனது நண்பர்களுடன் சென்ற தாக்கப்பட்ட நபருக்கும், கிராம … Read more

அரபிக்கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜாய்… கட்ச் மற்றும் கராச்சி இடையே ஜூன் 15ல் கரை கடக்க வாய்ப்பு..!

அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பிபர்ஜோய், குஜராத்தின் கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையே வரும் 15ம் தேதி கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் அந்த புயல் மையம் கொண்டுள்ளதாகவும், சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்பகுதியில் தேசிய … Read more

மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்.. “தந்தையை போல் கொள்கையில் உறுதியாக இருப்பேன்” – சச்சின் பைலட்

மக்களின் நம்பிக்கை தான் தனது மிகப்பெரிய சொத்து என்றும், அவர்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். தௌசாவில் தனது தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட் சிலையை திறந்து வைத்து பேசிய சச்சின் பைலட் இவ்வாறு கூறினார். ராஜஸ்தானில் ஊழலுக்கு இடம் இருக்கக்கூடாது என்றும், அரசு பணியாளர் தேர்வாணையம் கலைக்கப்பட்டு மீண்டும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். தனது தந்தை எந்த நிலையிலும் கொள்கை மாறியதில்லை என கூறிய சச்சின் … Read more

சட்டவிரோதமாக மண் அள்ளிய கும்பல்… டி.எஸ்.பியை மிரட்டிய எம்.எல்.ஏ அண்ணாதுரையின் ஆதரவாளக்ரள் 4 பேர் கைது..!

பட்டுக்கோட்டை அடுத்த திட்டக்குடி கிராமத்தில் காலாவதியான ரசீதுகளை பயன்படுத்தி மண் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை எம்.எல்.ஏவின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தாம் கூறியதுபடியே டி.எஸ்.பி பாலாஜி கைது செய்தார். திட்டக்குடி மற்றும் கரம்பயம் குளங்களில் விதிமுறைகளை மீறி ஆழமாக மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலையும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது டி.எஸ்.பி பாலாஜியை தொடர்புகொண்ட பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ அண்ணாதுரை, நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தங்களது ஆட்களை விடுவிக்க வேண்டும் என மிரட்டும் தொணியில் பேசினார். … Read more

பிலிப்பைன்சில் எரிமலை வெடிப்பு: மக்கள் வெளியேற்றம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட நெருப்பு குழம்பிலிருந்து நச்சுவாயு மற்றும் புகை வெளியேறி வருவதால் அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மத்திய மாகாணமான அல்பேயில் உள்ள மயோன் மலையிலிருந்து சூடான பாறைகள் விழுவதாக நில அதிர்வு ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மயோன் மலைப்பகுதியில் உள்ள 24 எரிமலைகளில் ஒரு எரிமலை சனிக்கிழமை வெடித்த போது சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் பாறைகள் விழுந்தன. சல்பர் டை ஆக்சைடு உமிழ்வு மூன்று மடங்காக … Read more

உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் – அமைச்சர் ஜெய்சங்கர்

உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் இந்திய மக்கள் தாய் நாடு மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க வாரணாசி சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அங்குள்ள பல்கலைக்கழகத்தில், இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் அம்சங்கள் குறித்த கருத்தரங்கில் பேசினார். வெளிநாடுகளில் நெருக்கடி காலங்களில் சிக்கிய இந்தியர்கள், தாய்நாட்டிற்கு மீட்கப்பட்டு வந்தது குறித்து எடுத்துரைத்தார். ரஷ்யா-உக்ரைன் போரின் தொடக்கத்தில், உக்ரைனிலிருந்து 90 விமானங்கள் மூலம் இந்தியர்கள் … Read more