எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்ததால், மகள் – காதலனை கொலை செய்து முதலைகள் நிரம்பிய ஆற்றில் வீசிய தந்தை…!

மத்திய பிரதேசத்தில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலைத் தொடர்ந்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை பெண்ணின் குடும்பத்தினர் சுட்டுக்கொன்று கயிற்றில் கட்டி முதலைகள் நிறைந்த ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரேனா பகுதியை சேர்ந்த 18 வயதான ஷிவானி என்ற பெண் பலபு கிராமத்தைச் சேர்ந்த ராதிஷ்யம் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தும் இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் … Read more

ஆதிபுருஷ் திரைப்படத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு… சர்சைக்குரிய வசனங்களை கண்டித்து திரையரங்கினருடன் வாக்குவாதம்…!

ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் ஆதிபுருஷ் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குக்கு சென்ற இந்து அமைப்பினர், படத்தை நிறுத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஆதிபுருஷ் படம் ஓடிய திரையரங்கு முன்பு திரண்ட போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாஷிருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் மும்பை போலீஸ் அவருக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே, ஆதிபுருஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி … Read more

உன்னால கண் எரிச்சலையே தாங்க முடியலையே.. தீக்குளிச்சா உடம்பே எரியுமே.. எப்படி தாங்குவ ? தீக்குளிப்பு நாடகம் அம்பலமானது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து தலையில் மண்ணென்னை ஊற்றி தீக்குளிப்பது போன்று நடித்த எலெக்ட்ரீசியன் ஒருவரின் கண்ணில் மண்ணென்னை பட்டதால், கண் எரிவதாக அலறி அழுது புரண்ட கூத்து அரங்கேறி உள்ளது. தீக்குளிச்சா உடலே தீப்பற்றி எரியும் என்பது தெரிந்தும், தலையில் மண்ணென்னையை ஊற்றிக் கொண்ட நிலையில், தண்ணீர் ஊற்றி காப்பாற்றிய போலீசாரிடம், கண் எரிவதாக கூறி சின்ன பிள்ளை போல அழுது புரண்ட பச்சபுள்ள பாலமுருகன் இவர் தான்..! தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் … Read more

தமிழ்நாட்டில் புதன் கிழமை வரை மழை தொடரக் கூடும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் புதன் கிழமை வரை மழை தொடரக் கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டி அளித்த அவர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக்கூடும் என்றார். சென்னை மீனம்பாக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டி மீட்டர் மழைப் பதிவானதாகவும், ஜூன் மாதத்தில் இந்தளவுக்கு மழை பெய்வது 73 ஆண்டுகளில் இதுவே 2-வது அதிகபட்ச அளவு … Read more

ராணுவ உளவு செயற்கைகோளை ஏவுவதில் ஏற்பட்ட குளறுபடி “மிக மோசமான தோல்வி” – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

ராணுவ உளவு செயற்கைகோளை ஏவுவதில் ஏற்பட்ட குளறுபடி மிக மோசமான தோல்வி என வடகொரியா தெரிவித்துள்ளது. மே 31 ஆம் தேதி செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்து முயற்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், கொரிய தொழிலாளர்கள் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், செயற்கைகோளை ஏவுவதில் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை கண்டறிந்து விரைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். செயற்கைகோள் தோல்வியால் திட்டக்குழுவினரின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்த வடகொரியா … Read more

செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பு : இ.பி.எஸ்

சிறைக்கைதிக்கான எண் வழங்கப்பட்ட பிறகும் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தவறான முன்னுதாரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு பின் பேட்டியளித்த அவர், ஊழல் செய்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக கூறினார். தமிழகத்தில் 25 இடங்களில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று … Read more

யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்ற வேண்டும் : பிரதமர் மோடி

யோகாவை அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அடுத்த வாரம் அமெரிக்கா செல்வதால் அதற்கு முன்பாக மக்களிடம் பேச விரும்பியதாக கூறினார். உலக யோகா தினத்தன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் தான் பங்கேற்க இருப்பதை பிரதமர் குறிப்பிட்டார். பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஒவ்வொரு துளி மழை நீரையும் சேகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். … Read more

கணவனை கொன்று மேம்பாலத்தில் சடலத்தை புதைத்த மனைவி…. பாபநாசம் பட பாணியில் சம்பவம்..!

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி, சடலத்தை பணிகள் நடைபெற்று வரும் மேம்பாலத்தில் புதைத்த நிலையில் ஒரு மாதத்திற்குப் பிறகு தஞ்சாவூர் மாவட்ட போலீஸார் சாலையை தோண்டி சடலத்தை கைப்பற்றினர். மனைவியின் தவறான தொடர்பை கண்டித்ததால் கொலை செய்யப்பட்டு மேம்பாலத்தின் சாலையில் புதைக்கப்பட்ட இவர் தான் தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூரைச் சேர்ந்த பாரதி. சென்னையில் தங்கியிருந்து டீக்கடையில் வேலைப்பார்த்து வந்த பாரதிக்கு திவ்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூரில் … Read more

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் தளர்வுகளை அறிவித்தது அமெரிக்கா

கிரீன் கார்டு பெறுவதற்கான விதிகளில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற துறை சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்காக வழங்கப்படும் கிரீன் கார்டு, ஆண்டுதோறும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ஒரு நாட்டிற்கு 7 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வின்படி, கடும் உடல்நல பாதிப்பு, உடல் ஊனம், வேலை பார்க்கும் நிறுவனத்துடன் வழக்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடும் சவால்களை சந்திப்பவர்கள் அதற்கான ஆதாரங்களை … Read more

வெயிலை சமாளிக்க மான்களுக்கு குளிர்சாதன வசதி… நீர்ச்சத்து குறையாமல் இருக்க குளுக்கோஸ், பழங்கள் போன்ற உணவுகள் வழங்கல்

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள தண்டே உயிரியல் பூங்காவில் வெயிலை எதிர்கொள்ள மான்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தண்டே உயிரியல் பூங்காவில் தற்போது 32 புள்ளி மான்கள் இருப்பதாகவும், அவற்றை வெப்பத்தில் இருந்து காக்க, அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு வருவதாகவும் வனவிலங்கு மண்டல அலுவலர் தெரிவித்துள்ளார். சுட்டெரிக்கும் வெயிலில் மான்கள் நிம்மதியாக இளைப்பாற குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், குளுக்கோஸ், பழங்கள் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். Source link