மாமூல் கேட்டு ஓட்டலை அரிவாளால் அடித்து நொறுக்கி அட்டூழியம்… பதை பதைக்கும் காட்சிகள்…!

மன்னார்குடியில், உணவகம் ஒன்றில், மாமூல் கேட்டு தராத ஆத்திரத்தில், கடையை சூறையாடிய 3 பேர் கும்பல், நீளமான அரிவாளால் வெட்டி, ரத்தக்களறியை ஏற்படுத்தியுள்ளது.  வெறும் ஆயிரம் ரூபாய்க்காக, பல பேரின் பசியாற்றும் உணவுகளை கீழே தள்ளி நாசப்படுத்தி, அரிவாளை கொண்டு மிரட்டி ரத்த காயப்படுத்தி, 3 பேர் கும்பல் போட்ட வெறியாட்டத்தின் சிசிடிவி காட்சிகள் தான் இவை …… திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வ.உ.சி சாலையில், சிங்கப்பூர் பரோட்டா கடை என்ற பெயரில், உணவகம் செயல்படுகிறது. திங்கட்கிழமை … Read more

டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 சுற்றுலா பயணிகளுடன் சென்ற 21 அடி நீள நீர்மூழ்கி கப்பல் மாயம்…!

அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று மாயமான நீர்மூழ்கி கப்பலைத் தேடும் பணிகள் துரிதப்படுத்தபட்டுள்ளன. பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தான் நாட்டு பெருங்கோடீஸ்வரர் ஷஸாதா தாவூத் (Shahzada Dawood ), அவரது மகன் சுலைமான் உள்பட 5 பேர், டைட்டன் என்ற 21 அடி நீள சுற்றுலா நீர்மூழ்கி கப்பலில் டைட்டானிக் கப்பல் நோக்கி சாகச பயணத்தை கடந்த ஞாயிறன்று தொடங்கினர். பத்தாயிரத்து 400 கிலோ எடையிலான … Read more

உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியல்.. இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக தகவல்

உலகளவில் 300-க்கும் மேற்பட்ட இறப்புகளுடன் தொடர்புடைய 20 மருந்துகள் பட்டியலில் இந்தியாவிலிருந்து 7 தயாரிப்புகள் இடம்பிடித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான், காம்பியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட இறப்புகளுடன் தொடர்புபடுத்தி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில இருமல் மருந்துகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. தற்போது எச்சரிக்கப்பட்டுள்ள 7 இந்திய தயாரிப்புகளில் இருமல் மருந்து, வைட்டமின் டானிக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, நொய்டாவின் மரியான் பயோடெக், … Read more

உலகிலேயே முதன்முறையாக கார்கள் வெளியேற்றும் கார்பன் அளவை வெளியிட்டது சீன அரசு…

உலகிலேயே முதன்முறையாக, மாடல் வாரியாக கார்கள் வெளியேற்றும் கார்பன் அளவை சீன அரசு வெளியிட்டுள்ளது. வாகனங்கள் வெளியிடும் கார்பனால் சுற்றுச்சூழல் மாசடைவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட சீன அரசு, ஆயிரத்து 400 மாடல் கார்கள் அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் வெளியேற்றும் கார்பன் அளவை கணக்கிட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளது. சராசரியாக, ஒரு கார் ஒரு கிலோமீட்டர் தொலைவு பயணிக்க 260 கிராம் கார்பன் டைஆக்சைடு வெளியிடுவதும், அதிலும் குறிப்பாக டீசல் கார்கள் அதிகளவு கார்பனை வெளியேற்றுவதும் … Read more

மலையும்… விவசாயமும்… பாழ்பட்டு போயிடுங்க.. குப்பை கிடங்கு வேணாங்க…. உயிரை கொடுக்க கிணற்றில் குதித்த பெண்கள்…!

திருவண்ணமலை அருகே புனல்காடு கிராமத்தில் மலையடிவாரத்தில் குப்பைக்கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் , போலீசார் முன்பு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை 39 வது வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த குப்பை கிடங்கில் கொட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக புனல்காடு … Read more

ரியல் எஸ்டேட் அதிபரை, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை..!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ரியல் எஸ்டேட் அதிபரை, காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். ஓசூர் சாந்தி நகரை சேர்ந்த கேசவன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், செங்கல் சூளையும் வைத்திருந்தார். இந்த நிலையில் தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பவரிடம் பணம் வாங்குவதற்காக கேசவன் தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது, … Read more

ஆதிபுருஷ் சர்ச்சை : அனைத்து இந்திப் படங்களுக்கும் தடை விதித்தது நேபாள அரசு

ஆதிபுருஷ் படத்தில் ஜானகி இந்தியாவின் மகள் என்று கூறும் வசனத்துக்கு நேபாள அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திப்படங்களை வெளியிட நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றதாகக் கூறி பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்படும் வரை எந்தஇந்திப்படத்தையும் திரையிட மாட்டோம் என்று காத்மாண்டு மேயர் பாலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.     Source link

16 நாய் இனங்களை வளர்க்கத் தடை விதித்தது எகிப்து அரசு…. நாய்களை பிரிய மனமில்லாமல் உரிமையாளர்கள் வேதனை…!

டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வெய்லர் போன்ற நாய்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளது நாய் வளர்ப்பவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம், அண்டை வீட்டுக்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், அவர்கள் வளர்த்த ராட்வெய்லர் கடித்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் எகிப்து நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆபத்தானதாக கருத்தப்பட்ட 16 நாய் இனங்களை வளர்க்க எகிப்து அரசு தடை விதித்துள்ளது. அவற்றை ஒரு மாதத்திற்குள் கால்நடை … Read more

விசா பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி உடன் விவாதிக்கப்படும் – அமெரிக்க வெளியுறவுத்துறை

இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை எதிர்கொள்ளும் விசா பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி உடன் விவாதிக்கப்படும் என்று அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மாத்திவ் மில்லர் கூறியுள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காரணமாக விசா வழங்குவதில் ஏற்பட்ட சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டதாக கூறினார். தற்போது இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள், விசா வேண்டி விண்ணப்பத்தவர்களுக்கு காத்திருப்பை தவிர்த்து உடனடியாக நேர்காணல் வழங்கி, பயணத்திற்கு உதவி செய்வதாக குறிப்பிட்டார். நாளை மறுநாள் அமெரிக்கா வரும் மோடி … Read more

ஆறு மாத புள்ள வயிற்றில்… கர்ப்பிணி காவலர் முன் கணவர் பலியான சோகம்…. மரக்கிளையால் பறிபோன உயிர்…!

சென்னையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் கர்ப்பிணி மனைவியை இரு சக்கர வாகனத்தில் மருத்துவ பரிசோதனைக்கு கூட்டிச்சென்ற L&T நிறுவன ஊழியர் பரிதாபமாக பலியானார். காதலித்து திருமணம் செய்த பெண் காவலர் கணவரை இழந்து தவிக்கும் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி… மரக்கிளை விழுந்ததால் பலத்த காயம் அடைந்த பெண் காவலரின் கணவரை மீட்டு சிகிச்சைக்காக தூக்கிச்செல்லும் காட்சிகள் தான் இவை..! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ்.பிஇ பட்டதாரியான இவர் சென்னையில் … Read more