உலகிலேயே அதிக நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த மெல்போர்ன் நகரில் அக்.22 முதல் தளர்வு.. Oct 17, 2021

உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் தளர்வுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 50 லட்சம் மக்கள் வசிக்கும் மெல்போர்னில் 9 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுத்த வாரம், மெல்போர்னில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை எட்ட உள்ளதால் வரும் வெள்ளிக்கிழமை முதல் உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேர ஊரடங்கும் தளர்த்தப்பட்டுள்ளது. Source link

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போலாகிவிட்டது – சிவராஜ்சிங் சவுகான் Oct 17, 2021

காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போல ஆகி விட்டது என்று மத்தியப் பிரதேச பாஜக முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் விமர்சனம் செய்துள்ளார். தலைவர் இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்றும், ராகுல் காந்தி தாம் கட்சித் தலைவர் அல்ல என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைதியான முறையில் பஞ்சாபில் ஆட்சி செய்துக் கொண்டிருந்த அமரீந்தர் சிங்கை நீக்கியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்சியில் எந்தவிதக் கட்டுப்பாடும் கிடையாது என்று சவுகான் இந்தூரில் நடைபெற்ற … Read more காங்கிரஸ் கட்சி சர்க்கஸ் கூடாரம் போலாகிவிட்டது – சிவராஜ்சிங் சவுகான் Oct 17, 2021

மலைச் சாலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்… பெற்றோரே மகனை கொன்றதாக தகவல் Oct 17, 2021

கொடைக்கானல் வத்தலகுண்டு மலைச்சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக பெற்றோரே மகனை கொலை செய்ததாக போலீசார் கைது செய்துள்ளனர். வாழைகிரி கிராம மலை சாலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், நெடுஞ்சலை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்து புதுக்கோட்டையை சேர்ந்த திவ்யநாதன், ராஜம்மாள் தம்பதியை விசாரித்துள்ளனர். இதில் இறந்தவர் செல்லத்துரை என்பதும், மன வளர்ச்சி குன்றி மதுபோதைக்கு அடிமையாகி தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், … Read more மலைச் சாலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் திருப்பம்… பெற்றோரே மகனை கொன்றதாக தகவல் Oct 17, 2021

அமெரிக்காவில் ஹாலிவுட் திரை தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்! Oct 17, 2021

அமெரிக்காவில் தயாரிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஹாலிவுட்டில் பணியாற்றும் திரை தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. கோவிட் காரணமாக பெரிய திரை,சின்னத்திரை, ஓ.டி.டி உள்ளிட்ட அனைத்து தளங்களுக்குமான தயாரிப்பு பணிகள் ஸ்தம்பித்த நிலையில், இப்போது நிலைமை சீராகியுள்ளதால், தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து திரைத் துறை பணியாளர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. 14 மணி நேரம் வரை தொடர் வேலை மற்றும் கூடுதல் வேலை பளுவால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 60 ஆயிரம் … Read more அமெரிக்காவில் ஹாலிவுட் திரை தொழிலாளர்கள் அறிவித்த வேலை நிறுத்தம் வாபஸ்! Oct 17, 2021

பஞ்சாப் சிங்கூ படுகொலை வழக்கில் கொலையாளிக்கு மாலை போட்டு காலில் விழுந்து ஆசி வாங்கிய சீக்கியர்கள்! Oct 17, 2021

டெல்லி அருகே சிங்கூ எல்லையில் நடைபெற்ற படுகொலை தொடர்பாக தேடப்பட்ட இரண்டாவது முக்கிய நபர் போலீசாரிடம் சரண் அடைந்தார். நாராயண் சிங் என்ற அந்த நபரை அமிர்தசரஸ் போலீசார் அமர்கோட் கிராமத்தில் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது சிலர் அவருக்கு மாலை போட்டு காலில் விழுந்து ஆசி வாங்கினர் லக்பீர் சிங் என்பரின் உடல் கோரமான முறையில் ஒரு கை மற்றும் கால் வெட்டப்பட்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தில் … Read more பஞ்சாப் சிங்கூ படுகொலை வழக்கில் கொலையாளிக்கு மாலை போட்டு காலில் விழுந்து ஆசி வாங்கிய சீக்கியர்கள்! Oct 17, 2021

கரூரை தலைமையிடமாக கொண்டு மின்பகிர்மான மண்டலம் அமைக்கப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி! Oct 17, 2021

கரூரை தலைமையிடமாகக் கொண்டு மின்பகிர்மான மண்டலம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 51 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணைகளையும், 2 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர், மாவட்டங்களின் மின் தேவைக்கு ஏற்ப சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து மின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்றார்.      Source link

கலிபோர்னியா வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயின் புகைப்படத்தை வெளியிட்ட சர்வதேச விண்வெளி மையம்! Oct 17, 2021

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அலிசல் சுற்றுவட்டாரத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சி அளிக்கும் சேட்டிலைட் வீடியோவை சர்வதேச விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. சான்டா பார்பரா சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத் தீ ஏறத்தாழ 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் வனத்தை கபளீகரம் செய்தது. தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடாமல் தீ பற்றி எரிவதால் அப்பகுதியே புகை சூழ்ந்து காட்சி அளிக்கிறது. … Read more கலிபோர்னியா வனத்தை கபளீகரம் செய்யும் காட்டுத் தீயின் புகைப்படத்தை வெளியிட்ட சர்வதேச விண்வெளி மையம்! Oct 17, 2021

ராஜஸ்தானில் பேஸ்புக்கில் பெண் பெயரில் பழகி லட்சகணக்கில் பணம் பறித்த கும்பல் கைது! Oct 17, 2021

பேஸ்புக்கில் போலியாக பெண் பெயரில் பழகி பணம் பறித்த கும்பலை ராஜஸ்தான் மாநிலம் பரத்புரில் போலீசார் கைது செய்துள்ளர்.டெல்லியின் சைபர் பிரிவு காவல் துறையினர் அடையாளம் கண்டுபிடித்ததையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டனர். முகநூலில் பெண் பெயரில் பழகி வாட்ஸ் ஆப் நம்பர் வாங்கி அதில் பதிவாளரின் ஆபாச வீடியோவை போலியாகத் தயாரித்து அவருக்கு அனுப்பி மிரட்டி லட்சகணக்கில் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சைபர் கிரைம் போலீசாரிடம் புகார்கள் வந்ததையடுத்து இந்த கும்பல் சிக்கியுள்ளது.    … Read more ராஜஸ்தானில் பேஸ்புக்கில் பெண் பெயரில் பழகி லட்சகணக்கில் பணம் பறித்த கும்பல் கைது! Oct 17, 2021

நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிடுகிடுவென உயரும் அணைகளின் நீர்மட்டம்! Oct 17, 2021

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அங்குள்ள  அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக காரையார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 14அடி உயர்ந்தது.அணைக்கு நீர்வரத்து 17ஆயிரம் கனஅடியாக இருப்பதால் அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையில் நேற்று ஒரே நாளில் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து 143.86 கன அடியாக … Read more நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிடுகிடுவென உயரும் அணைகளின் நீர்மட்டம்! Oct 17, 2021

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் 450 கிலோ ஹெராயின் போலீசார் பறிமுதல்! Oct 17, 2021

ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் முதல் முறையாக ஏறத்தாழ அரை டன் அளவிலான ஹெராயினை பறிமுதல் செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து வந்த சரக்கு பெட்டகத்தை சோதனையிட்ட போலீசார் அதில் கட்டுக் கட்டாக இருந்த 450 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து மெல்போர்னுக்கு இறக்குமதி செய்ததாக ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 450 கிலோ ஹெராயினின் மதிப்பு 104 மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் … Read more ஆஸ்திரேலியாவில் இதுவரை இல்லாத அளவில் 450 கிலோ ஹெராயின் போலீசார் பறிமுதல்! Oct 17, 2021