பட்டா கத்தியுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் – கோவை காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!

கோவையில் கத்தியுடன் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட இளைஞர் மீது ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுகந்தராம். இவர் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் கோவை கணபதி, காமராஜபுரம் சங்கனூர் சாலை அருகே உள்ள பேக்கரி ஒன்றின் அருகே, கையில் கத்தியை வைத்தவாறு இரும்பு பொருள்களின் மீது தேய்த்து வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக … Read more

கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – பொது இடங்களில் கட்டாய முகக்கவசம்

கேரளாவில் கோவிட் -19 வழக்குகள் சற்று அதிகரித்து வருவதால், கேரள அரசின் சுகாதாரத் துறை, அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் கட்டாயமாக முக கவசங்களை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், ”புதிய கோவிட் தோற்று மிகவும் எளிதாக பரவுகிறது. முன்னதாக, நிலைமையை ஆராய உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய தொற்றை அடையாளம் காண மரபணு பரிசோதனைகள் அதிகரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 1,134 … Read more

”தன்பாலின ஈர்ப்புக்காக செலவிட்டேன்” – ரூ.15 லட்சம் அபேஸ் செய்த இளைஞர் வாக்குமூலம்

15 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக கோனிகா போட்டோ லேப் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். கையாடல் செய்த பணத்தை தன்பாலின ஈர்ப்புக்காக கால் பாய்ஸ்க்கு செலவிட்டதாக வாக்குமூலம் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமம் குமரன் காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்( 65). இவர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் கோடம்பாக்கம் கோனிகா கலர்லேப்பில் கணக்காளராக பணிப்புரிந்து வந்த கோவையைச் சேர்ந்த சத்தியசாய் என்பவர் ரூ.15 லட்சம் கையாடல் செய்துவிட்டதாகவும், தனது வீட்டில் கொள்ளைப்போனதில் … Read more

‘Call Before u Dig’ – மோடி அறிமுகப்படுத்திய செயலியின் பயன் என்ன?

நிலத்தில் குழிதோண்டும் நிறுவனங்களுக்கும், நிலத்தடி புதை பயன்பாடு பொருட்கள் உரிமையாளருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பு தொடர்பை மேம்படுத்தும் வகையில் ‘Call Before u Dig’ (தோண்டும் முன் அழைக்கவும்) என்ற செயலியை புதன்கிழமை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் குழி பறிக்கும்போது நிலத்தடி புதை பயன்பாடு உரிமையாளர்கள் தங்கள் பொருட்கள் சேதமடைவதை தடுக்க முடியும். இந்த செயலின் பயன்பாடுகள் என்னென்ன? ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் போன்ற நிலத்தடி சொத்துக்கள் சேதமடைவதை தடுக்க Call Before u Dig (CBuD) … Read more

ஆசிரியரை காலணியால் தாக்கிய சம்பவம் – பாதுகாப்பில்லையென குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் ஆசிரியரும், பெண் தலைமை ஆசிரியரும் தாக்கப்பட்ட சம்பவத்தால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி பள்ளிக்கு அனுப்ப மறுத்துள்ளனர் பெற்றோர்கள். குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், தலைமை ஆசிரியரையும், ஆசிரியரையும் தாக்கியவர்கள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள கீழநம்பிபுரம் கிராமத்தில் உள்ள அரசு … Read more

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம்: சென்னையில் நாளை தொடக்கம்

ஜி-20 நிதி தொடர்பான கட்டமைப்பு செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. ஜி-20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் வரத் தொடங்கியுள்ளதை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை நடத்துவதற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், அதுதொடர்பான பல்வேறு ஆயத்த கூட்டங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக Second Framework Working Group Meeting சென்னையில் மார்ச் 24, 25-ம் தேதி நடைபெறுகிறது.சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரமடா பிளாசா, … Read more

அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்: பாஜக – அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா?

பாஜக – அதிமுக கூட்டணி தொடர்பான பரபரப்பான கருத்தை தெரிவித்திருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி செல்கிறார். தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் பாஜகவினை தமிழகத்தில் வலுப்படுத்தும் வகையில் தமிழக அரசியல் களத்தில் தினம் தினம் வெவ்வேறு வகையில் காய் நகர்த்தி வருகின்றார். சில நாட்களாக பாஜகவில் இருந்த பல நிர்வாகிகள் அதிமுக‌வில் இணைந்தது மட்டுமில்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அதிருப்தி ஏற்படுத்தியும் … Read more

“பைக்ல ஸ்பீடா போய் வீடியோ போட்டு பிரபலம் ஆகனும்”- Reels'காக இளைஞர்கள் செய்த செயல்

இன்ஸ்டாகிராம் மற்றும் யூ-ட்யூப் ரீல்ஸ் ஆகியவற்றில் வீடியோ போட்டு பிரபலம் ஆவதற்காக, அதிவேக இருசக்கர வாகனங்கள் மற்றும் அதிக விலை உயர்ந்த வாகனங்களை திருடியதாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் வேளச்சேரியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீனிவாசன், வேலை முடித்துவிட்டு வீட்டின் வாசலில் தனது விலை உயர்ந்த பைக்கை நிறுத்தி வைத்திருந்ததாகவும், … Read more

வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்! வனவிலங்குகள் உட்கொள்ளும் அபாயம்!

திருத்தனி அருகே வனப்பகுதி சாலையோரம் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சிக்குட்பட்டது பி.சி.என்.கண்டிகை கிராமம். இந்த கிராமத்திற்கு திருத்தணி-மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து வனப்பகுதி சாலை வழியாக மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். இதுதவிர இச்சாலை வழியாக அரசு பஸ்கள் குருவராஜப்பேட்டை, மின்னல் மற்றும் அன்வர்த்திகான்பேட்டை வரை செல்கிறது. இந்நிலையில் திருத்தணி பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை மற்றும் … Read more

”சொன்னதையும் செய்தார்; சொல்லாததையும் செய்திருக்கிறார்” – அமைச்சர் சக்கரபாணி புகழாரம்

தேர்தல் நேரத்தில் சொன்னதையும் செய்திருக்கிறார், சொல்லாத வாக்குறுதிகள் இன்னுயிர் காக்கின்ற 48 காலை சிற்றுண்டி என இன்று நிறைவேற்றி பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் என அமைச்சர் சக்கரபாணி புகழாரம் சூட்டியிருக்கிறார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 700 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் இளைய அருணா (MC) தலைமையில் … Read more