மோடி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட நாகை காங்கிரஸார் -எதிர்ப்பு தெரிவித்த போலீசாருடன் மோதல்

நாகை மாவட்ட காங்கிரஸ் சார்பில் பிபிசி வெளியிட்ட மோடியின் ஆவணப்படம் நாகூர் பேருந்து நிலையத்தில் திரையிடும் நிகழ்வுக்கு காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் ஆவணப்படத்தை நாகை … Read more

அதிமுக பொதுக்குழு, பொதுச் செயலாளர் தேர்தல் வழக்குகள்.. 7 மணி நேரம் வைக்கப்பட்ட வாதங்கள்!

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் அதிமுக பொது குழு தீர்மானங்கள், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து ஓ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகள் நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பிற்காக வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர். அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்காக … Read more

ஆஸ்கர் விருதுக்கு பின் கவனம் பெறும் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம்! சிறப்புகள் என்ன?

The Elephant Whisperer ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றதற்கு பிறகு, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த முகாமின் சிறப்புகள் என்ன, யானைகள் இங்கு இவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம். ஆஸ்கர் விருதுக்கு பின் கவனம் பெறும் தெப்பக்காடு! நீலகிரி மாவட்டத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் படமாக்கப்பட்ட The Elephant Whisperer திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கர் விருதை வென்றது. இதன் மூலம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் சர்வதேச … Read more

”புரியாத இந்தி மொழியில் ஏன் வாசிக்கிறீர்கள்?” மேகாலய ஆளுநரின் உரைக்கு எம்.எல்.ஏ எதிர்ப்பு!

மேகாலயா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, அம்மாநில ஆளுநர் இந்தியில் உரையாற்றியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. 60 தொகுதிகளைக் கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்.பி.பி.) 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், … Read more

”இதையும் கவனத்தில் கொண்டால்”- வேளாண் பட்ஜெட் குறித்து கார்த்தியின் பாராட்டும் வேண்டுகோளும்

நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி, 2023- 2024க்கான வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் தெரிவித்துள்ள அதேவேளையில், ஒரு சில கோரிக்கைகளும் அறிக்கை வாயிலாக வைத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று காலை சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும், உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், … Read more

லண்டனில் நடந்த சம்பவத்திற்கு இந்தியா கொடுத்த பதிலடி! பஞ்சாப்பில் நடப்பதுதான் என்ன?

டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு, இன்று பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் அகற்றப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவு அமைப்பு ‘வாரிஸ் பஞ்சாப் தே’ பஞ்சாப் அமிர்தசரஸைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் தே’ தலைவராக உள்ளார். அவர்மீது 6 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மேலும், அவரை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு முன்பாக அவரது ஆதரவாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் இந்திய தேசியக்கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் … Read more

‘தலைவி’ பட வெளியீட்டில் நஷ்டம்-ரூ.6 கோடி கேட்டு நீதிமன்றத்தை நாடும் விநியோகஸ்தர் நிறுவனம்?

‘தலைவி’ படத்தை வெளியிடுவதற்காக முன்பணமாக கொடுத்த ரூ.6 கோடியை, தயாரிப்பு தரப்பிடமிருந்து பெற்றுத் தரக்கோரி, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘தலைவி’. இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கியிருந்தார். விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்திருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் உருவான இந்தத் திரைப்படத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். மறைந்த … Read more

நடனமாடி, பாட்டுப்பாடி பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை! குவிந்து வரும் பாராட்டுக்கள்!

சிவகாசி அருகே நடனமாடியும், மெட்டு பாடல்களை தயார் செய்து பாடியும் பாடமெடுக்கும் அங்கன்வாடி ஆசிரியை ஒருவர், அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறார். சிவகாசி அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர், மதுரை செல்லூரை சேர்ந்த ஜெய்லானி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். தனியார் கே.ஜி பள்ளிகளில் கொடுக்கும் கல்வியை போன்று அரசு அங்கன்வாடியிலும் வழங்கி, ‘அங்கன்வாடிகள் தனியாரைவிட மேம்பட்டவை’ என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் … Read more

‘சந்திரமுகி’ வடிவேலு வீடியோவை பகிர்ந்து ‘லியோ’ படக்குழு ட்வீட் – பின்னணி காரணம் இதுதான்!

காஷ்மீர் உள்பட வட மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ‘லியோ’ படக்குழுவினர் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் … Read more

சுபஸ்ரீ பலியான அதே சாலையில் கிழிந்து தொங்கும் ராட்சத ப்ளக்ஸ் பேனர்! விபத்து தடுக்கப்படுமா?

சென்னையின் ரேடியல் சாலையில் கிழிந்து தொங்கும் இராட்சத விளம்பர பேனரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை பள்ளிகரணை அடுத்த கீழ்கட்டளை ஏரிக்கு அருகில் ரேடியல் சாலையில் சட்டவிரோதமாக இராட்சத விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 டன் எடை கொண்ட இரும்பின் மேல் பகுதியில் அனுமதியின்றி நீதிமன்ற உத்தரவை மீறி விளம்பரம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அந்த விளம்பர பேனர் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனை காவல் துறையினரும், ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் … Read more