‘தொற்று அச்சம்’, ‘தகனத்துக்கு காசு வேணுமே!’ – கங்கை நதியின் கொரோனா சடலங்கள் பின்புலம்

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து மிதந்து வந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் சோகக் கதைகள், கொரோனா பேரிடர் காலத்தில் நெஞ்சை இன்னும் உலுக்குவதாக உள்ளன. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் ஓடும் கங்கை நதியில் இந்த வாரத் தொடக்கத்தில் கால்நடைகளை மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச் சென்ற அந்தக் கிராம மக்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வெள்ளைத் துணிகளில் சுற்றப்பட்ட 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடந்திருக்கிறது. … Read more ‘தொற்று அச்சம்’, ‘தகனத்துக்கு காசு வேணுமே!’ – கங்கை நதியின் கொரோனா சடலங்கள் பின்புலம்

”கொரோனா வார்டுக்கே வந்து நம்பிக்கையூட்டிய என் நண்பன் லிங்குசாமி!” – நெகிழும் வசந்தபாலன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோது  மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்து தன்னை பார்க்கவந்த இயக்குநர் லிங்குசாமியை “வீரன்டா” என்று நட்புடனும் நெகிழ்ச்சியுடனும் உணர்வுகளை பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். ’வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவான்’, காவியத்தலைவன்’ என சிலப் படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் தமிழில் கொண்டாடப்படும் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படும் இயக்குநர் வசந்தபாலனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருந்தார். கொரோனா பாதித்தவர்களின் அருகில் சென்றால் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பதால் மருத்துவர்கள் தவிர … Read more ”கொரோனா வார்டுக்கே வந்து நம்பிக்கையூட்டிய என் நண்பன் லிங்குசாமி!” – நெகிழும் வசந்தபாலன்

‘புதிய தலைமுறை’யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளர் கொரோனாவால் உயிரிழப்பு

’புதிய தலைமுறை’யின் கோபிசெட்டிபாளையம் செய்தியாளராக பணியாற்றிவந்த சந்திரசேகரன் கொரோனாவால் உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டுகளாக புதிய தலைமுறையில் கோபிசெட்டிபாளையம் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகரன் (47). இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில், சந்திரசேகரன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு, செய்தியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் எழுந்த 76 வயது கொரோனா பாதித்த மூதாட்டி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி ஒருவர் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை வயது மூப்பின் காரணமாக மோசமடைந்தது.அதனைத்தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி அவரை அவரது உறவினர்கள் பரமதியில் உள்ள … Read more தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன் எழுந்த 76 வயது கொரோனா பாதித்த மூதாட்டி

நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

கொரோனா நோயாளிகளுக்காக 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நெதர்லாந்து நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் மருத்துவ ஆக்சிஜன் தேவைக்காக நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து விமானப்படை விமானங்கள் வாயிலாக, 4 தாழ்வெப்ப நிலை கொள்கலன்கள் (Cryogenic Containers) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவை ஒவ்வொன்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு திறன் கொண்டவை எனவும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த ஆக்சிஜனை தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தேவையின் அடிப்படையில் போர்க்கால நடவடிக்கையாக உடனடியாக அனுப்பி … Read more நெதர்லாந்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்ட 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

கொரோனாவுக்கு கண்டறியப்பட்ட 2 -டி.ஜி மருந்துகள் விநியோகம் அடுத்த வாரத்தில் தொடக்கம்

கொரோனா வைரஸை குணப்படுத்தும் மருந்துகளில் இப்போதைக்கு ரெம்டெசிவிர்தான் அதிகம் பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் ரெம்டெசிவிரைவிடவும் அதிக செயல்திறன் கொண்ட புதிய மருந்தை இந்திய மருத்துவர்கள் சில தினங்களுக்கு முன் கண்டுபிடித்திருந்தனர். 2- டி.ஜி. என்ற அந்த மருந்து, முதற்கட்டமாக விரைவில் 10,000 டோஸ் விநியோகிக்கப்படும் என அதை கண்டறிய உதவிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கூறியுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் இந்த விநியோகம் தொடங்குமென அவர்கள் கூறியுள்ளனர். மேற்கொண்டு இதன் உற்பத்தியும் அதிகரிக்கப்படுமென அவர்கள் … Read more கொரோனாவுக்கு கண்டறியப்பட்ட 2 -டி.ஜி மருந்துகள் விநியோகம் அடுத்த வாரத்தில் தொடக்கம்

டவ்-தே புயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வானிலை மைய அதிகாரிகள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  தென் மண்டல வானிலை மைய தலைவர் பாலசந்திரன், வருவாய் பேரிடர் துறை மேலாண்மை ஆணையர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக இதுபோன்ற புயல் பேரிடரை தமிழகம் சந்திக்கிறது. ஆலோசனைக் கூட்டத்தில் மக்களை எவ்வாறு காப்பது, பள்ளத்தாக்குகள் நிற்பவர்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது, எங்கெல்லாம் முகாம்கள் அமைப்பது … Read more டவ்-தே புயல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

புதியக்கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி ஆலோசனை

புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மே 17 ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக, 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக்கொள்கைக்கு பதிலாக மத்திய அரசு புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்தது. அதற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த கல்விக்கொள்கைக்கு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன. இதனிடையே … Read more புதியக்கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மே 17-ம் தேதி ஆலோசனை

கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழையால் ஆறுகள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் சூறைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் தடுப்பணைக்கு மேல் வெள்ளம் சீறி பாய்வதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல தடை … Read more கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிக கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர்

இந்தியாவின் கோவிட்-19 பாதிப்புகள் மிகவும் கவலையளிக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “ இந்தியாவில் மருத்துமனைகள் நிரம்பியுள்ளன, இறப்புகள் அதிகமாக உள்ளது. அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டும் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை” என்று தெரிவித்தார். மேலும், தொற்றுநோயின் இரண்டாம் ஆண்டு, முதல் ஆண்டைவிடவும் மிகவும் ஆபத்தானதாக உள்ளது என்றும் எச்சரித்தார். இந்தியாவின் … Read more இந்தியாவின் கொரோனா பாதிப்புகள் மிக கவலையளிக்கிறது: உலக சுகாதார அமைப்பின் தலைவர்