தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,  ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

’நாங்கள் சாவதே மேல்’.. உயிர் நீத்த 3 சகோதரிகள்.. ராஜஸ்தானில் ஒரு ’நல்லதங்காள்’ துயரம்!

ராஜஸ்தானில் வரதட்சணை கொடுமை தாளாமல் 3 சகோதரிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பெண் நாட்டார் தெய்வங்களில் கதைகள் உண்டு. தமிழகத்திலும் ஏழு கன்னிமார்கள், நல்லதங்காள் கதைகள் உள்ளன. சமுதாயத்தில் ஏதோ ஒருவிதத்தில் கொடுமை தாங்க முடியாமல் கொல்லப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்களையே பின்னாளில் தெய்வங்களாக மாற்றினார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுவதுண்டு. இந்தக் கதைகளை கேட்டால் கண்ணீர் வரவழைக்கும். இன்றைக்கும் நம்மூர்களில் நல்லத்தங்காள் கதையை விடிய விடிய மக்கள் … Read more

’இப்படித்தான் கொக்கி போடுவார்கள்’ ஆன்லைன் ரம்மியால் தொடரும் விபரீதம்.. தப்பிப்பது எப்படி?

இதுவரை ஆண்களே பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுத்து தற்கொலை செய்துவந்த நிலையில், 2 குழந்தைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இந்த விவகாரம் மீண்டும் அனல் பறக்க விவாத்தை கிளப்ப காரணமாகி உள்ளது. ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்… இன்று வரை அது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. சொந்தப் பணத்தை இழந்தது ஒருபுறம் கடன் வாங்கி பணத்தை இழந்தது மறுபுறம் என மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைகள் நடக்கின்றன. கடந்த காலங்களில் ஆன்லைன் … Read more

மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் முதலிடம் பிடித்தது தமிழ்நாடு!

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் பொருட்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்குவிப்பதற்காக உணவு பாதுகாப்பு குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வெளியிட்டார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், வளமான … Read more

ஜிம் உடற்பயிற்சியின்போது மாரடைப்பால் இளைஞர் மரணம் – நிபுணர்கள் விடுக்கும் எச்சரிக்கை!

உடற்பயிற்சி செய்யும் இளைஞர்கள் அதற்கேற்ற உணவு பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். மதுரை மாநகர் பழங்காநத்தம் அருகேயுள்ள திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஸ்வரன் என்பவரது மகன் ஸ்ரீ விஷ்ணு. இவருக்கு வயது 27. இவர் மதுரை சிம்மக்கல் பகுதியில் லேப்டாப் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஸ்ரீவிஷ்ணு மாடக்குளம் பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதோடு, பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார். உடற்பயிற்சியின் மீது … Read more

14 வயதில் இருந்தே சிறுமியிடம் எடுக்கப்பட்ட கருமுட்டைகள்..விசாரணையில் அம்பலமாகும் உண்மைகள்!

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை பெறப்பட்ட வழக்கில் தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் இன்று மீண்டும் ஏடிஎஸ்பி விசாரணை நடத்தினார். சிறுமிக்கு 3 வயதுள்ள போது கணவர் சரவணன் பிரிந்து சென்று விட்டதால் இரண்டாவதாக சையத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் தாய் இந்திராணி. தாய் இந்திராணி ஏற்கெனவே கருமுட்டை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு உடந்தையாக டெய்லரான மாலதி இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. சிறுமியின் கருமுட்டைகளை தருமபுரி, ஒசூர், ஈரோடு, சேலம் ஆகிய ஊர்களில் உள்ள … Read more

டெல்லி அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம், 133 தங்க நாணயங்கள் பறிமுதல்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளிலிருந்து ரூ.2.85 கோடி ரொக்கப்பணம் மற்றும் 133 தங்கக் காசுகளை பறிமுதல் செய்திருக்கின்றனர் அமலாக்கத்துறையினர்.   ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் டெல்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது உதவியாளர் வீடுகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.82 கோடி ரொக்கப் பணம் மற்றும் 1.80 கிலோ எடையுள்ள 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான புகைப்படங்களை அமலாக்கத்துறையினர் வெளியிட்டுள்ளனர். ஹவாலா பணப்பரிவா்த்தனை தொடர்பான … Read more

’இப்படி செல்போனை நோண்டிக் கொண்டிருந்தால்..’ – அதிகாரியை கண்டித்த அமைச்சர் நேரு

ஆய்வுக் கூடத்தில் செல்போன் பார்த்தக் கொண்டிருந்த அதிகாரியை அமைச்சர் நேரு திட்டியதால் பரபரப்பு நாமக்கல் நகராட்சி கூட்டரங்கில் நாமக்கல் நகராட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில், சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் நேரு, நகராட்சியின் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து வந்தபோது அங்கிருந்த அதிகாரி ஒருவர் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கைது – பஞ்சாபில் பரபரப்பு

பஞ்சாபில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சாது சிங்கை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்தனர். பஞ்சாபில் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசில் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் சாது சிங் தரம்சோட். இவர் தனது பதவிக்காலத்தின்போது வனப்பகுதியில் உள்ள மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதற்கு லஞ்சம் பெற்றதாக அண்மையில் புகார் எழுந்தது. ஒரு மரத்துக்கு ரூ.500 என்ற வீதத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு இவ்வாறு … Read more

20 நாட்களில் 20 கொலை! ஓராண்டில் 9 லாக் அப் மரணம்! இதுதான் திராவிட மாடல்? : சீமான்

20 நாட்களில் 20 கொலை நடந்தது, லட்சக்கணக்கான கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, திமுக பொறுப்பேற்ற ஓராண்டில் 9 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளது தான் திராவிட மாடல் ஆட்சி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரை முருகனை சந்தித்து நலம் விசாரித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “சாட்டை துரைமுருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது … Read more