`விஜய் 66' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ், பிரபாஸ் படங்களின் ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம், விஜய்யின் 66வது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்துவிட்டன. டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படமாக இருந்தாலும் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்புகள் சென்னையில்தான் நடைபெற இருக்கின்றன. இயக்குநர் ராஜூ முருகன் தமிழ் வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார், பிரவீன் கே.எல் எடிட் செய்கிறார் என … Read more

ட்யூஷன் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்; கண்காணிக்க சிறப்புக் குழு; நீதிமன்றம் அதிரடி!

ராதா என்ற ஆசிரியர் தனது இடமாறுதல் கோரிக்கையை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வழங்கியபோது, “பணம் சம்பாதிக்கும் நோக்கில் ட்யூஷன், பகுதி நேர வேலை, வேறு தொழில்களில் என ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார். மதுரை உயர் நீதிமன்றக் கிளை `பள்ளி மாணவர்களுக்கான நேரடி பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும்!’ – உச்ச … Read more

“எங்கள் இலக்கை அடையும் வரை உக்ரைன் மீதான போர் தொடரும்" – ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சகம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகத் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வாரமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்டப் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவி செய்ய முடிவு செய்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்யா- உக்ரைன் போரில் நடுநிலையை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தநிலையில், “உக்ரைன் மீதான … Read more

செம்பா: “ஒரு பாவையின் அம்புக்குத்தான் பாண்டியன் தோற்றதோ?!” | பகுதி 24

மதுரைப்பெருநகர் “பாண்டிமா தேவி வசிக்கும் பகுதி ஏதென்றா கேட்டீர்கள்? அதோ! அங்கே அந்தத் தங்கநிறக் கோபுரத்தின் மூன்றாம் மாடத்தின் மேல் பெரிய தூண்கள் கொண்ட பலகணியொன்று தெரிகிறது பாருங்கள்! அது தான் பாண்டிமாதேவி வசிக்கும் அந்தப்புரப் பகுதி.” இற்சிறை பெற்ற தலைவி போலக் கடுங்காவல் கொண்ட உட்கோட்டைக்குள் நெடுமரங்களிடையே ஒளிந்து நின்ற நான்மாடக் கோபுரத்தின் கிழக்குப்பகுதி நோக்கிச் செஞ்சாந்து பூசியத்தன் விரல்நீட்டிக்காட்டி ஒருத்தி சொல்லிவிட்டுப்போக, அவள் நீரெடுத்துச்சென்ற சிற்றோடையின் கரையிலே நின்ற மருதமரத்தின் மேல் சாய்ந்தபடி யோசனையோடு … Read more

மருத்துவப் படிப்புக்கு உக்ரைனை அதிகம் தேர்வு செய்யும் தமிழக மாணவர்கள் – காரணம் என்ன?!

ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 5,000 பேர். தங்கள் பிள்ளைகளைப் பத்திரமாக மீண்டுவருமாறு தமிழக அரசுக்கு பெற்றோர் தரப்பிலிருந்து தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. தமிழக மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்துவரும் முயற்சியில் இந்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு ஈடுபட்டுவருகிறது. உக்ரைன் ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்திய பிறகுதான், தமிழகத்திலிருந்து 5,000 பேர் உக்ரைன் சென்று படித்துவருவது பெரும்பாலான … Read more

"விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!"- `பவானி' விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். “என் படங்கள் குறித்து மீம்ஸ் போட்டு தேவையில்லாத நாடகம் ஆக்கிவிட்டார்கள்!”- விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தில் நாம் நடிக்கவேண்டும் என்ற … Read more

விருத்தகிரீஸ்வரர் கோயில்: கும்பாபிஷேகம் முடிந்து 22 நாள்களில் திருடு போன கோபுரக் கலசங்கள்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு கோயில் … Read more

"இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாம்னு இருக்கேன்!"- ஆர்.கே.செல்வமணி

“மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த விஷயமா இருக்கு. எதிர்த்து நின்னவங்க எல்லாரும் பெரிய திரைப்பிரபலங்கள். சமீபத்தில் வெற்றி பெற்றவங்க. என்னைத் தோல்வி அடைய செய்யணும்னு பெரிய டீம்மோட வொர்க் பண்ணுனாங்க. இது எல்லாத்தையும் எதிர்கொண்டு நான் வெற்றி பெற்றதுக்குக் காரணம் என்னுடைய சங்க உறுப்பினர்கள். இவங்களைத் தவிர யாருமில்ல. நிறைய உதவி செஞ்சாங்க. குறிப்பாக விக்ரமன், உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, சுந்தர் சி, முருகதாஸ், நம்பிராஜ், கே.கண்ணன், ரவிமரியா, ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சரண், கிளாரா, முத்து … Read more

Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னையால் கர்ப்பப்பை இறக்கம் ஏற்படுமா?

கர்ப்பகாலத்தில் மலச்சிக்கல் பிரச்னையால் மிகுந்த அவதிப்பட்டேன். பிரசவத்துக்குப் பிறகும் அது தொடர்கிறது. இப்படியே தொடர்ந்தால் கர்ப்பப்பை இறக்கத்தில் கொண்டுபோய் விடும் என்கிறார்கள். உண்மையா? இதை எப்படித் தவிர்ப்பது? – சித்ரா (விகடன் இணையத்திலிருந்து) டாக்டர் கார்த்திகா பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவரும், லேப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணருமான ஆர். கார்த்திகா. “மலச்சிக்கல் பிரச்னை உள்ள பல பெண்களுக்கும் கர்ப்பப்பை இறங்கிவிடுமா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. மலச்சிக்கல் பிரச்னை இருக்கும்போது முக்கி, மிகவும் சிரமப்பட்டு மலம் கழிக்க … Read more

இந்த வார ராசிபலன்: மார்ச் 1 முதல் மார்ச் 6 வரை! #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link