`விஜய் 66' படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ், பிரபாஸ் படங்களின் ஒளிப்பதிவாளர்!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்க, இன்னொரு பக்கம், விஜய்யின் 66வது படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பித்துவிட்டன. டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.

தமிழ் – தெலுங்கு பைலிங்குவல் படமாக இருந்தாலும் படத்தின் பெரும்பகுதியான படப்பிடிப்புகள் சென்னையில்தான் நடைபெற இருக்கின்றன. இயக்குநர் ராஜூ முருகன் தமிழ் வசனம் எழுதுகிறார். தமன் இசையமைக்கிறார், பிரவீன் கே.எல் எடிட் செய்கிறார் என மொத்த டீமும் ரெடி. ஆனால், எதையும் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. விஜய்க்கு ஹீரோயினாக நடிப்பதற்காக முன்னணி நாயகிகளிடம் பேசி வருகிறார்கள். டெக்னிக்கலாக எல்லா கட்டங்களும் டிக்கடிக்கப்பட, ஒளிப்பதிவாளர் யார் என்ற கேள்விக்கு மட்டும் பதில் தெரியாமல் இருந்தது. தற்போது கிடைத்த தகவலின் படி, ‘விஜய் 66’ படத்தின் ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி பணியாற்றுவார் என்பது தெரியவந்துள்ளது.

கார்த்திக் பழனி

ஒளிப்பதிவாளர் திருவிடம் ‘ஆக்ரோஷ்’ படத்திலிருந்து ‘பேட்ட’ வரையிலும் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் கார்த்திக் பழனி. சில டாக்குமென்ட்ரி படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய இவர், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பெண்குயின்’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், சயீஃப் அலிகான், க்ரித்தி சனோன் ஆகியோர் நடிக்கும் ‘ஆதிபுருஷ்’ எனும் 3டி படத்திலும் தற்போது பணியாற்றி வருகிறார். அந்தப் படம் ஜனவரி 12, 2023 அன்று வெளியாகவிருக்கிறது. இதன்படி, இவரின் மூன்றாவது படமாக ‘விஜய் 66’ இருக்கப்போகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.